|
||||||||
திருப்பூருக்குப் பக்கத்தில் ‘குட்டி திபெத்’ |
||||||||
திருப்பூருக்கு பக்கத்தில் இப்படி ஓர் இடமா? என்று உங்களை அதிசய வைக்கும் இந்த இடம் திருப்பூர் மையத்திலிருந்து 3 மணி நேரப் பயணத் தூரத்தில் அமைந்துள்ளது. இதமான வானிலை, எங்குத் திரும்பினாலும் புத்த மடாலயங்கள், புத்தத் துறவிகள், திபெத்திய வணிகர்கள், திபெத்தியக் கடைகள் என அழகாக அமைந்து இருந்து இந்த தோடன்லிங் திபெத்தியக் குடியேற்றம் நிச்சயம் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி அளிக்கும் சுற்றுலாவாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை, இந்த இடத்திற்கு எப்படிச் செல்வது? இங்கே என்னவெல்லாம் சிறப்பு என்று பார்ப்போமா?
உங்கள் துணையுடன் ரம்மியான பயணம் செய்யுங்கள்
திருப்பூர் மையத்திலிருந்து 131 கிமீ, சத்தியமங்கலத்திலிருந்து 62 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த தோடன்லிங் திபெத்தியக் குடியேற்றம் ஓடையார்பல்யா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த சிறிய திபெத்திற்கு நீங்கள் இரு சக்கர வாகனங்கள் மூலமாகவும் அல்லது கார் மூலமாகவும் 'லாங் ரைடு' செய்தபடி வருவது சிறப்பு. ஏனென்றால் வழி முழுக்க பசுமையான சமவெளிகளையும், அழகான காட்சிகளையும் நீங்கள் கண்டு ரசித்தபடியே பிரயாணிக்கலாம்.
தென்னிந்தியாவில் உள்ள 5 குடியேற்றங்களில் ஒன்று கிபி 1959 இல் திபெத்தைச் சீனா கட்டாயமாக ஆக்கிரமித்ததால், அவர்களின் குரு தலாய்லாமா உட்படச் சுமார் 80000 திபெத்தியர்கள் அகதிகளாக வெளியேறி இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டானில் 58 இடங்களில் குடியேறினர். இந்தியாவில் இந்த அகதிகள் விவசாயம், கைவினைப் பொருட்கள் மற்றும் கிளஸ்டர் சமூகம் போன்ற அவர்களின் திறமையைப் பொறுத்து 39 இடங்களில் குடியேறினர். தென்னிந்தியாவில் உள்ள 5 குடியேற்றங்களில் ஒன்று கர்நாடகாவில் கொள்ளேகாலுக்கு அருகில் உள்ள ஓடையார்பல்யாவில் உள்ள தொண்டன்லிங் திபெத்தியக் குடியிருப்பு.
இந்த ஊர்களுக்குப் பெயரே கிடையாதாம்
நம் நாட்டு அரசாங்கம் இவர்களுக்கான முழு உதவிகளையும் செய்து கொடுத்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் முதல் அடிப்படை வசதி வரை அனைத்தையும் நம் நாட்டு அரசு அவர்களுக்குச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே உள்ள 22 கிராமங்களிலுமே திபெத்திய மக்கள் வாழ்கின்றனர். இதில் ஓர் அதிசயம் என்னவென்றால் இந்த 22 பெயர் கிடையாதாம், எழுத்துக்கள் மூலமாகத் தான் பெயர் குறிப்பிடப்படுகிறதாம்!
இனிமையான சூழலில் அமைந்திருக்கும் இடம்
இந்த தோண்டன்லிங் திபெத்தியக் குடியிருப்பு சராசரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 3345 அடி உயரத்தில் உள்ளது, சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் மற்றும் 140 முதல் 170 செமீ மழை பெய்யும். நெல், ராகி, சோளம், சோளம் போன்ற பயிர்களைப் பயிரிடுவதற்காக நிலம் வளமான நிலமாக உருவாக்கப்பட்டது. சிலர் ஸ்வெட்டர்களை நெசவு செய்கிறார்கள். அவற்றையெல்லாம் நீங்கள் இங்கே கண்டு மகிழலாம்.
அமைதியும் மனத்தெளிவும் பெற தியானம்
ஜோக்சென் மடாலயம், தக்ஷாம் மடாலயம், தனக் மடாலயம், த்ராக்யால் மடாலயம் மற்றும் பாயோ மடாலயம் என மொத்தம் 7 மடாலயங்கள் உள்ளன. நீங்கள் உன்னிப்பாக இந்த மடாலயங்களைப் பார்வையிடலாம், பின்னர் பிரார்த்தனைகளில் ஈடுபடலாம். அங்கே விற்கும் தனித்துவமான பொருட்களை ஷாப்பிங் செய்ய மறக்காதீர்கள். குறிப்பாக அங்கே உள்ள உணவகங்களில் பாரம்பரிய திபெத்திய உணவுகள் கிடைப்பதால் அவற்றை ருசிக்கத் தவறாதீர்கள்.
எப்படிச் செல்வது?
கொள்ளேகாலிலிருந்துச த்தியமங்கலம் செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு திருப்பூர்-சத்தியமங்கலம்-கெம்பநாயக்கன்பாளையம்-குத்தியாலத்தூர்-சுஜல்கரை வழியாகச் செல்ல வேண்டும். நீங்கள் கூகுள் மேப்ஸ் பாலோ செய்து கூட வரலாம். இந்த இடத்திற்கு அதிகாலையில் கிளம்பி மாலையில் வீடு திரும்புவது போன்ற ஒரு நாள் ட்ரிப் நீங்கள் திட்டம் பண்ணலாம். குறிப்பாகச் சூரியன் மறைந்த பிறகு இந்த வழியில் பயணம் செய்ய வேண்டாம். காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.
தனிமையும், அழகும், அமைதியும் நிறைந்த இந்த இடம் ஒரு சரியான ஒரு நாள் சுற்றுலாத் தலமாகும். இந்த இடத்திற்கு நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்? |
||||||||
by Kumar on 27 Dec 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|