|
||||||||
அனைவரும் சென்று பார்க்க வேண்டிய மதுரை காந்தி மியூசியம்-Gandhi museum |
||||||||
இந்தியாவில் உள்ள ஐந்து காந்தி மியூசிங்களில் இந்த மதுரை காந்தி மியூசியமும் ஒன்று என்பது பெருமைக்குரிய விஷயமாகும். தேசப்பிதா காந்தியடிகள் தொடர்புடைய பல ஞாபகார்த்தப்பொருட்களை இந்த அருங்காட்சியகத்தில் பார்க்கலாம். காந்திஜியின் பல அரிய புகைப்படங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. நாயக்க வம்சத்தின் மிகச்சிறந்த பெண் ஆட்சியாளரான ராணி மங்காவுக்கு சொந்தமான மாளிகையே காந்தி மெமோரியல் டிரஸ்ட் எனும் அறக்கட்டளை மையத்தின் மூலம் காந்தி மியூசியமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு காந்திய தத்துவ நெறிகள் மற்றும் காந்திஜி வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அருங்காட்சியக வளாகத்திலேயே உள்ள திறந்தவெளிக்கூடத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், படக்காட்சி திரையிடல்கள், கலந்துரையாடல் கூட்டங்கள் போன்றவையும் நிகழ்த்தப்படுகின்றன. |
||||||||
Gandhi museum at Madurai flaunts all the priceless possessions of The father of our nation “Mahatma Ghandhi”. This museum also possesses many rare incredible photos of Independence era.
|
||||||||
by Swathi on 20 May 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|