தென்னிந்தியாவிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றான இந்த கூடல் அழகர் கோயில் ஒரு வைணவத்திருக்கோயிலாகும். இங்கு மஹாவிஷ்ணுவின் திருவுருவம் கோயிலுக்கு எதிரிலேயே பிரமாண்டமாக வடிக்கப்பட்டிருக்கிறது. நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள இந்த கோயிலில் மஹாவிஷ்ணு நின்ற, அமர்ந்த மற்றும் சாய்ந்த நிலைகளில் காட்சியளிக்கின்றார். ராமர் பட்டாபிஷேகத்தை சித்தரிக்கும் மரச்சிற்ப அலங்கரிப்புகளையும் இக்கோயிலில் பார்க்கலாம். ஒன்பது கிரகங்களை குறிக்கும் நவக்கிரக தெய்வச்சிலைகளும் இதில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. பொதுவாக நவக்கிரக விக்கிரகங்கள் சைவத்திருக்கோயில்களில் மட்டுமே காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மதுரைக்கு விஜயம் செய்யும் ஆன்மீகப்பிரியர்கள் தவறாது தரிசிக்க வேண்டிய கோயில்களில் கூடல் அழகர் கோயில் ஒன்றாகும்.
|