- முனைவர் கி.செம்பியன்
உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு (425)
(உலகம் தழீஇயது ஒட்பம்--- உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு---அந்நட்பின்கண் முன்மலர்தலும் பின் கூம்புதலு மின்றி ஒரு நிலையானாவது அறிவாம்
தழீஇயது இல்லதென்பன---அவ்வத்தொழின்மேனின்றன. உலகமென்பது ஈண்டுயர்ந்தோரை. அவரோடு கயப்பூ போல வேறுபடாது கோட்டுப்பூப்போல ஒரு நிலையே நட்பாயினான் எல்லா வின்பமுமெய்துமாகலின், அதனை அறிவென்றார். காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்;பட்டன. இதனைச் செல்வத்தின் மலர்தலும் நல்குரவிற் கூம்பலுமில்லதென்று உரைப்பாருமுளர்--பரிமேலழகர்)
வள்ளுவம் நுட்பமானது.
வள்ளுவரின் பார்வை தனித்துவமானது. தமிழ் இலக்கியப் பரப்பில் வேறு எந்தப் புலவரும் காணாதது!
மலரைப் பார்க்கின்றோம்; மலரும், வாடும்! மற்றொரு மலர் பூக்கும்.
ஆனால், இந்த மலர் காலையில் மலர்ந்து மாலையில் கூம்பும்! மீணடும் அதே மலர் அவ்வண்ணமே செய்யும்!
இது தாமரை!
அல்லி மாலையில் மலர்ந்து காலையில் கூம்பும்! இவை நீர்;ப்பூக்கள்.
தாமரைப் பூவினை முகத்திற்கும் கண்;ணிற்கும் உவமையாக்கினர் மற்றத் தமிழ்ப்புலவர்.
தாமரையை விளக்கு என்;றார் கம்பர்!
தாமரை மலரின் இதழடுக்குப் போல வீதிகளும், பொகுட்டுப் போல் மன்னன் கோவிலும் அமைந்தது மதுரை மாநகரம் என்றது பரிபாடல்!
மற்றப் பூக்களுக்கும் தாமரைக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு ஒரு பூவே பல நாட்களுக்கு மலரும் கூம்பும்! இத்தன்மையை நோக்கியறிந்து வெளிப்படுத்த்pயவர் வள்ளுவரே!
மன்னன் உயர்ந்தோரை நட்பாக்கிக்கொள்ளவேண்;டும்; அந்த நட்பு ஒரு நேரத்தில் இனித்தும், மறுநேரத்தில் கசந்தும் மாறிமாறி நிகழாமல், ஒரே தன்மைத்தாய்த் திகழவேண்டும்!
மாற்றம் என்பது மானுடத்தின் தத்துவமாக இருக்கலாம்; அந்த மாற்றம் மணிக்கு மணி நிகழ்ந்தால், அது தடுமாற்றம்; தடுமாற்றம் கூடாது!
துத்துவத்திற்கு ஏற்பக் கூட்டா?
கூட்டிற்கு ஏற்பத் தத்துவமா?
வளரும் நாடு வளர்ந்;த நாடகளுடன் நட்புறவு கொள்ளும்போது சில ஆண்டுகள் நட்பாகவும், சில ஆண்டுககள் பகையாகவும் மாறுபடாமல், சீரான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆத்தகு போக்கினை, நடைமுறையினை அறிவுடைமை என்கினறார்.
மன்னனும் உயர்ந்தோரும் ஆட்சியாளர்களும் எப்படி வேண்டுமானாலும் உறவாடட்டும்.
நாம் மலர்தலும் கூம்பலும் என்னும் வள்ளுவப் பார்வையைக் கற்றுக்கொள்வோம்!
உம் பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரங் கதை சொல்லுமே!
வணக்கம் வள்ளுவரே!
(தொடரும்....)
|