LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வீரம் படம் குறித்து இயக்குனர் சிவாவின் பதில்கள் !!

அஜீத் நடித்த வீரம் படம் வரும் 10ந்தேதி ரிலீசாவதையொட்டி, வீரம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு இயக்குனர் சிவா பதிலளித்தார். அதன் விவரம் பின்வருமாறு, 

 

’வீரம்’படம் ’முரட்டுக்காளை’ படத்தின் சாயலில் இருக்கும் என்கிறார்களே?

 

நிச்சயமாக எந்த படத்தின் பாதிப்பும் இல்லை. அண்ணன்-தம்பிகளின் கதை என்பதால், அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்த படத்தின் சாயலும் இதில் இருக்காது.

 

’வீரம்’  ஒரு மலையாள படத்தை தழுவிய கதை என்கிறார்களே? அது தவறான தகவல். ’வீரம்,’ நேரடி தமிழ் படம்.

 

அஜீத்குமாருடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி? 

 

அது, ஒரு சந்தோஷமான அனுபவம். அஜீத் துணிச்சல் மிகுந்தவர் என்பது நிறைய பேருக்கு தெரியும். இந்த படத்தில் இடம்பெறும் பயங்கரமான ஒரு ரயில் சண்டை காட்சியில், ’டூப்’ நடிகரை பயன்படுத்தலாம் என்று நானும், ஸ்டண்ட் மாஸ்டரும் சொன்னோம். அஜீத் ஏற்கவில்லை. ’’அவருக்கு நடப்பது எனக்கு நடக்கட்டும்’’ என்று துணிச்சலுடன் அந்த காட்சியில் நடித்தார்.

 

தமன்னாவுக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளதே அது பற்றி, 

 

இதுவரை தமன்னா நடித்த படங்களில் இல்லாத அளவுக்கு, ’வீரம்’ படத்தில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை தமன்னாவே என்னிடம் தெரிவித்தார். ’’இந்த படம் எனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நம்புகிறேன்’’ என்று கூறினார்.

 

படம் எவ்வளவு நேரம் ஓடும் ?

 

2 மணி நேரமும், 35 நிமிடங்களும் படம் ஓடும்.

 

இவ்வாறு சிவா பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், ஒளிபதிவாளர் என பலர் கலந்து கொண்டனர்.  

by Swathi   on 03 Jan 2014  0 Comments
Tags: சிறுத்தை சிவா   வீரம்   வீரம் படம்   சிவா   வீரம் இயக்குனர்   Siruthai Siva   Siva  
 தொடர்புடையவை-Related Articles
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
லாரன்ஸ் படத்தில் ஜோதிகா !! லாரன்ஸ் படத்தில் ஜோதிகா !!
அஜீத்துக்கு ஜோடியாகிறார் ஸ்ருதி அஜீத்துக்கு ஜோடியாகிறார் ஸ்ருதி
மார்ச்சில் அஜீத்தின் அடுத்த படம் !! மார்ச்சில் அஜீத்தின் அடுத்த படம் !!
இயக்குனராகும் மிர்ச்சி சிவா !! இயக்குனராகும் மிர்ச்சி சிவா !!
படத்திற்கு கூட அஜீத்தை கலாய்க்க மாட்டேன் - பரோட்டா சூரி !! படத்திற்கு கூட அஜீத்தை கலாய்க்க மாட்டேன் - பரோட்டா சூரி !!
சிவா - சிம்ஹா கூட்டணியில் உருவாகும் மசாலா படம் !! சிவா - சிம்ஹா கூட்டணியில் உருவாகும் மசாலா படம் !!
அஜீத், லிங்குசாமி கூட்டணியில் புதிய படம் !! அஜீத், லிங்குசாமி கூட்டணியில் புதிய படம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.