LOGO
  முதல் பக்கம்    சுற்றுலா    தமிழ்நாடு சுற்றுலா Print Friendly and PDF
- இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டம்

  • இராமநாதபுரம்மாவட்டத்தை இராம்நாடு என்றும் முன்பு முகவை என்றும் அழைக்கப்பட்டது.
  • 1063இல் முதலாம் ராஜேந்திர சோழன், இந்நகரை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தனால், இது சிறிது காலம் சோழ பேரரசின் கீழ் இருந்தது.
  • பின்னர் நாயக்கர்கள், நவாப்கள், மருது சகோதரர்கள் ஆகியோரின் கீழ் இருந்தது.
  • 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார்.
  • 1910 ஆம் ஆண்டு மதுரைமற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • இராமநாதபுரம் மாவட்டத்தின் மற்றொரு பெயர் முகவை. முகவை என்றால் வைகையின் முகம், அதாவது வைகைநதி கடலில் சங்கமிக்கும் இடம் என்னும் பொருள்.

தீவுகள்

மாநிலத்திலேயே அதிக அளவில் தீவுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அவற்றில் சில:

ஆன்மிகத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

 

எழுத்தாளர்கள்

ஆ.பெ. ஜெ அப்துல்காலம்

 

  • இராமநாதபுரத்தில் பிறந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.பெ. ஜெ. அப்துல் கலாம் ஆவார்.
  • இவர் அறிவியலிலும், தமிழிலும் ஆர்வம் கொண்டவர். திருக்குறள் வழி நின்றவர். இவர் சிறந்த கட்டுரையாளராகவும் விளங்குகிறார்.

 

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

  • பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் இயற்பெயர் அப்பாவு ஆகும்.
  • இவர் பிறந்த ஆண்டு இதுவரை சரியாகத் தெரியவில்லை, 1848-1850 இந்த வருட நாட்களில் பிறந்தவர்.
  • இவர் இராமேஸ்வரத்தில் பிறந்தவர். இவரை அனைவரும் பாம்பன் சுவாமிகள் என அழைப்பார்கள். 
  • இராமேஸ்வரத்தில் இருக்கும் பாம்பன் என்னும் கிராமத்தில் பிறந்தார். ஆகையால் பாம்பன் என்னும் ஊரில் பிறந்ததால் பாம்பன் சுவாமிகள் என அழைக்கப்பட்டார்
  • இவர் ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த துறவி ஆவார்.

 

ஆ. கார்மேகக் கோனார்

  • கார்மேகக் கோனார் 1889ஆம்ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அகத்தாரிருப்பு என்னும் சிற்றூரில் பிறந்தவர்.
  • கார்மேகக் கோனார்மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்தவர்.
  • தமிழிலக்கிய, இலக்கணத்தைக் கசடறக் கற்பிப்பதில் வல்லவர். தமிழறிஞர். சொற்பொழிவாளர். எழுத்தாளர்.
  • மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றி 1951ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார்.
  • அங்கு இவரிடம் தமிழ் கற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், பொதுவுடைமைக் கட்சித் தலைவர் என். சங்கரய்யா, தமிழ்நாடு பொதுநூலகத் துறை இயக்குநர் வே. தில்லைநாயகம், நிலச்சீர்திருத்தப் போராளி கிருட்டிணம்மாள் செகநாதன், அரசுச் செயலர் கி. லட்சுமிகாந்தன் பாரதி ஆகியோர் ஆவார்.
  • சென்னைப் பல்கலைக் கழகப்பாடத்திட்டக் குழுவில் தொடர்ந்து 21ஆண்டுகள் தலைவராக இருந்தார்.
  • இவருக்கு மதுரையில் 1955ஆம் ஆண்டு சோமசுந்தர பாரதியார்தலைமையில் நடைபெற்ற விழாவில் செந்நாப்புலவர் என்னும் பட்டத்தை பி. டி. இராசன் வழங்கினார்.
  • கார்மேகர் 22-10-1957ஆம் நாள் மதுரையில் மறைந்தார்

 

கண்ணதாசன்

  • கண்ணதாசன் இராமநாதபுரம் மாவட்டம் சிறுகூடல் பட்டி என்னும்  சிற்றூரில்  பிறந்தவர்.  
  • இவரது   தாயார் விசாலாட்சி ஆச்சி. தந்தையார் சாத்தப்பனார். கண்ணதாசன் 24.6.1927இல் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் முத்தையா என்பதாகும்.
  • கண்ணதாசன்இளமையிலேயே கவி புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். பாடல் எழுதுவதிலும் பயிற்சி பெற்றிருந்தார்.
  • 1945ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் மலர்ந்து வந்த திராவிட இயக்க உணர்வினில் உந்தப்பட்டுத் தானும் அதில் இணைந்தார்.

வேலுநாச்சியார்

  • 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாகப் பிறந்தார் வேலுநாச்சியார்.
  • ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.
  • 1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார்.
  • வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார்.
  • 1793ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.

டி.எஸ்.ரங்கராஜன்

  • டிஎஸ்ஆர் என்று அழைக்கப்படும் தோழர்  டி.எஸ்.ரங்கராஜன் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளரான டி.எஸ்.ரங்கராஜன், 1939ல் இராமநாதபுரம் நகரத்தில் பிறந்தவர்.
  • இவருடைய தந்தை சீனுவாசன் அரசு ஊழியராக இருந்தவர், சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்.
  • கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்களில் மாநிலத் தலைவர்களான பி. ராமமூர்த்தி, மணலி கந்தசாமி, அன்றைய ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஆர்.ஹெச்.நாதன் உள்ளிட்டோரின் பேச்சுகளைக் கவனித்திருக்கிறார். அ
  • வர்களின் உரைகளால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளராக இருந்த மங்கலசாமியைத் தொடர்புகொண்டு ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 1957ல் உறுப்பினராக இணைந்தார்.

 

இம்மானுவேல் சேகரனார்

  • இம்மானுவேல் சேகரனார் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூரில் 1924 அக்டோபரில் பிறந்தவர்.
  • இராணுவத்தில் பணியாற்றிய அவர் 1950-ல் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை கண்டு வெகுண்டெழுந்தார்.
  • இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்தவர் தமது இன மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் இறங்கினார்.
  • பின் காமராசர் தலைமையில் காங்கிரஸில் இணைந்தார். பின்னர் 1957-ம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின்னர் அந்தத் தொகுதியில் சாதிக் கலவரத்தில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தார்.

மசுதான் ஹைதர் மிர்சா அல்லது ஹாஜி மசுதான் (1926-1994)

  • இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பனைக்குளத்தில் பிறந்தவர் ஆவார்.
  • மும்பையில் மாஃபியா கும்பலுடன் தொடர்புடைய இவர் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டார்.

முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963)

  • தென் தமிழகத்தில் பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர்.
  • சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர்.
  • நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பரங்கியரை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும்.
  • தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
  • மூன்று முறை இந்திய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
  • 1957 ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட இவர் இந்த கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
  • சிறந்த பேச்சாளர். சமுதாயப் போராளி.
  • இவர் “நேதாஜி” என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கி அவரே அதன் ஆசிரியராக விளங்கினார்.
  • ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் வள்ளலார் வாழ்ந்த வடலூரில் இவரின் பேச்சு இடம்பெறும். தேசியமும் தெய்வீகமும் இவரின் கண்களாக விளங்கின.

பாலுசாமி நாயக்கர்

  • இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில் உள்ள குண்டுகுளம் கிராமத்தில் பிறந்தவர்.
  • அங்கிருந்து இருந்து பிழைப்புதேடி, தனிஒருவனாக ஆந்திரா மாநிலம் நெல்லூர் நகருக்குச் சென்றவர்,
  • பின்நாட்களில் இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி சுற்றுவட்டாரப்பகுதியை சேர்ந்த இளைஞர்களையெல்லாம் அழைத்துச்சென்று வேலையில் அமர்த்தி, பின்னர் அவர்களே சொந்தமாகத் தொழில் தொடங்கிட ஆதரவு நல்கியவர்.

எஸ். பாலபாரதி (ஜனவரி 24, 1974)

  • ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளார்.
  • பாலபாரதி இராமேஸ்வரத்தில்முந்தைய தலைமுறையிலேயே தமிழகத்தில் குடியேறிவிட்ட மலையாளிக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர்.
  • எட்டாவது குழந்தையாக பிறந்ததால் குடும்பத்தினரால் எஸ். பாலகிருஷ்ணன் என பெயரிடப்பெற்றவர்.
  • பாலபாரதி மும்பையில் இருந்து வந்துகொண்டிருந்த பல தமிழ் பத்திரிக்கைகளில் பணியாற்றியுள்ளார்.
  • பின் குமுதம் குழுமத்தின் மும்பை பகுதியின் செய்தியாளராக இருந்துள்ளார்.
  • சன் குழுமத்தின்தொலைக்காட்சியில் செய்திப்பிரிவில் பணியாற்றி உள்ளார்.
  • அதன் பின் ஜீ தமிழ்தொலைக்காட்சியின் செய்திப்பிரிவில் பணியாற்றியுள்ளார்.
  • சிறுகதை எழுத்தில் கு.அழகிரிசாமிப்பள்ளியைச் சேர்ந்தவராக இவர் அடையாளம் காணப்பெறுகிறார்.

மாவீரன் மருதநாயகம் பிள்ளை  (1725-1764)

  • இராமநாதபுரம் மாவட்டம் பனையூர் என்ற கிராமத்தில் வேளாளர் குடும்பத்தில் 1725ம் ஆண்டு பிறந்தார்.
  • இவர் இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்ததால் இசுலாமியர் ஒருவரால் மதம் மாற்றப்பட்டு வளர்க்கப்பட்டார்.
  • இஸ்லாமிய சமயத்துக்கு மாறியதன் காரணமாக முகமது யூசுப் கான் என்று அறியப்பட்டான்.
  • ஆர்க்காட்டு படைகளில்போர் வீரராகவும், பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார். 
  • பிற்காலங்களில் மதுரை நாயக்கர்களின்ஆட்சி முடிவடையும் காலகட்டத்தில் மதுரையை ஆளும் அதிகாரத்தினை ஆங்கிலேயர் இவருக்கு அளித்தனர்.
  • தம் வாழ்நாளின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டார். 
  • அக்டோபர் 151764ஆம் ஆண்டில் மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிப்பட்டார் மருதநாயகம் பிள்ளை.

முகவை பொன்னுச்சாமித் தேவர் (1837-1870)

  • பொன்னுசாமித் தேவர் இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள புதுமடம் எனும் சிற்றூரில் 1837 ஆம் ஆண்டில் பிறந்தவர்.
  • இவரது பெற்றோர் சிவஞானத் தேவர்- முத்துவீராயி ஆகியோர் ஆவர்.
  • இவர் தமிழ் நூல்களை நன்கு கற்றிருந்தார். தமிழ்ப் புலமையிலும், தமிழ் நூல்களை ஆதரிப்பதிலும், அரசியலறிவிலும் அவர் நிகரற்று விளங்கியதோடு சிறந்த இசை மேதையாகவும் திகழ்ந்தார்.
  • தில்லையம்பூர் சந்திரசேகர கவிராயர், ஆறுமுக நாவலர்ஆகியவர்களின் நூல்களை அச்சிடுவதற்குப் பொருளுதவி செய்தார்.
  • இவரது பேச்சு, எழுதிய கடிதங்கள் அனைத்தையும் தொகுத்து, தனிச்செய்யுள் சிந்தாமணி எனும் பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

இராமசாமிப்பிள்ளை

  • இராமசாமிப்பிள்ளை எனும் தமிழ்ப் பண்டிதர். இவர் இராமநாதபுரத்தில் பிறந்தவர்; மதுரையில் வாழ்ந்தவர்.
  • பத்திரிகாசிரியராகவும் உரையாசிரியராகவும் விளங்கிய இவர் இராமநாதபுர சமஸ்தான வித்துவானாகவும் இருந்தவர்.
  • பொன்னுசாமித்தேவரின் அன்பிற்குப் பாத்திரமானவர்; மதுரைத் திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்து இளைய சந்நிதானத்திற்குக் கல்வியில் உசாத் துணைவராக இருந்தவர்.
  • இராமலிங்க அடிகளாரின் திருப்பாடல்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.
  • அருட்பா மருட்பா இயக்கத்தில் முனைந்து செயல்பட்டவர்களில் ஒருவர்

எம். புரோஸ்கான் ( மார்ச்சு 11 1970)

  • தமிழக எழுத்தாளர், பரமக்குடியில் பிறந்தவர்.
  • இவர் ஒரு ஆசிரியரும், இலக்கிய ஆர்வலரும், நுகர்வோர் உரிமப் பாதுகாப்புக் கழகச் செயலாளரும், பொறுப்பு பட்டதாரி ஆசிரியரும், கழக உறுப்பினரும், ரோட்டரி கிளப் இயக்குநருமாவார்.
  • பரமக்குடியில் பிறந்து தற்போது இராமலிங்க அடிகளார் தெரு பரமக்குடியில்வாழ்ந்துவரும் இவர் ஒரு ஆசிரியர்.
  • இலக்கிய ஆர்வலரும், நுகர்வோர் உரிமப் பாதுகாப்புக் கழகச் செயலாளர்.
  • பொறுப்பு பட்டதாரி ஆசிரியரும், கழக உறுப்பினரும், ரோட்டரி கிளப் இயக்குநருமாவார்

சூஃபி ஞானி செய்யிது ஆசியா உம்மா (1868-1948)

  • தமிழின் பக்தி இலக்கிய மரபில் காரைக்கால் அம்மையார் (6ஆம் நூற்றாண்டு), ஆண்டாள் (7ஆம் நூற்றாண்டு) வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர் சூஃபி ஞானி செய்யிது ஆசியா உம்மா.
  • ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 1868இல் பிறந்தவர். 1948ஆம் ஆண்டு கீழக்கரையில் இறையடி சேர்ந்தவர்.
  • இவருடைய படைப்புகளில் முக்கியமானது “மெஞ்ஞான தீப ரத்தினம்.” கவிதையாகவும் உரைநடையாகவும் ஆசியா உம்மா தான் பெற்ற ஆன்மிக அறிவைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
  • ஜக்காத்தை (ஏழை வரி) இறைவனுக்குச் சரணாகதி அடைவதுடன் ஒப்பிடுகிற அந்தக் கடைசி வரிகள் இந்த சூஃபி கவிஞரது பரந்துபட்ட மெய்ஞான அறிவுக்கு ஓர் அடையாளம்.

செய்யது எம். சலாஹுதீன்

  • தென் தமிழகத்தின் சேதுபதி சீமை என அறியப்பட்ட இரம நாதபுரம் மவட்டம் கீழக்கரையில் 1940 ஆம் அன்டுகளின் தொடக்கத்தில் பிறந்தவர்,
  • தனது பள்ளி படிப்பினை கீழக்கரையிலும்,கல்லூரி படிப்பினை சென்னையிலும் பயின்றவர்.
  • தனது இளமை காலத்தில் இலட்சிய நோக்கம் கொன்டு இலங்கை, மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு பயனம் மேற்கன்டவர்.
  • சமுதாய நலனில் ஆர்வம் கொணடவர்.

உமறுப்புலவர்

  • முழுப் பெயர் உமறுகத்தாப்
  • ஊர் கீழக்கரை
  • ஆசிரியர் கடிகை முத்துப் புலவர்
  • எட்டையபுர ஜமீனின் ஆஸ்தானப் புலவராக இருந்தவர்.
  • இவரை ஆதரித்தவர்கள் இருவர்: 1. சீதக்காதி வள்ளல் 2. ஆப்துல்காசிம் மரைக்காயர்
  • சீதக்காதி இறந்தபின் அப்துல் காசிம் ஆதரித்தார்.
  • சீதக்காதியின் இயற்பெயர் செயத்காதர் என்றும் (மு.வ) செய்கு அப்சல்காதர் மரைக்காயர் என்றும் (மது.ச.வி) கூறுகின்றார்.
  • சீதக்காதி, கிழவன் சேதுபதி விசயரகுநாதத் தேவரிடம் அமைச்சராக இருந்தவர்.
  • இஸ்லாமிய கம்பர் எனப்படுபவர் உமறுப்புலவர்
  • உமறுப்புலவர் பாடாது விட்ட பகுதியைப் பாடியவர் பனீ அகமது மரைக்காயர்.
  • உமறுப்புலவரின் மகன் கவிக்களஞ்சியப் புலவர்.

குணங்குடி மஸ்தான் சாகிபு

  • இராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு வட மேற்கில் பத்துக் கல் தொலைவில் அமைந்தது குணங்குடி.
  • நயினார் முகம்மது எனும் தந்தைக்கும், பாத்திமா எனும் தாய்க்கும் 1792-ஆம் ஆண்டில் பிறந்தார். 
  • குணங்குடி மஸ்தான் சாகிபு எனப் பிற்காலத்தில் அழைக்கப்பட்டவரின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிர். ’தந்தை வழி தமிழ்ப்புலமையும் தாய்வழி குரிசில் நபி (ஸல்) அவர்களின் குடிவழிப் பெருமையும் குலதனமாகக் கொண்டவர் குணங்குடியார்’ என்கிறார் அப்துல் ரகுமான். 
  • அவர் ஒரு இஸ்லாமிய சூஃபி ஞானி. தமிழ்ச் சித்தர்.
  • தனது 17-ஆவது வயதில் ஞானபூமியான கீழக்கரையில், தைக்கா சாகிபு என்றழைக்கப்பட்ட சய்கப்துல் காதிர் லெப்பை ஆலிம் என்னும் ஞானியிடம் மாணாக்கராக இருந்து 1813-இல் முற்றும் துறந்தவராகிறார்.

தற்கால ராமநாதபுர இலக்கிய ஆளுமைகள்

வேல . ராம்மூர்த்தி

  • பெருநாழி என்ற ஊரைச் சார்ந்தவர் வேல. ராம்மூர்த்தி.
  • இவர் எழுத்தாளராகவும், நடிகராகவும் விளங்குகிறார்.
  • இவர் பல சிறுகதைகள் மற்றும் இரு நாவல்களையும் எழுதியுள்ளார். இவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அ. சையத் இப்ராஹிம் 

  • சையத் இப்ராஹிம் என்னும் பெயரை இவரை பெற்றிருந்தாலும் ஹிமானா சையத் எனும் பெயரால் இவர் அறியப்படுகிறார்.
  • இவர் சித்தார் கோட்டை என்ற ஊரைச் சார்ந்தவர். இவர் ஒரு மருத்துவர்.
  • இவர் 650 சிறுகதைகளும், 10 புதினங்களும், 700 கட்டுரைகளும், 500 கவிதைகளும் எழுதியுள்ளபார்.
  • இவர் ஆங்கில மொழியிலும் அவ்வப்போது எழுதிவருகின்றார்.
  • இவர் தமிழ் மாமணி, பாரத் ஜோதி,சிறந்த குடிமகன் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

இன்குலாப் (1944-2016)

  • இன்குலாப்பின் இயற்பெயர் செ. கா. சீ. சாகுல் அமீது கீழக்கரை என்பதாகும். இவர் கீழக்கரை என்னும் ஊரில் பிறந்தவர்.
  • சென்னை புதுக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
  • “காந்தள் நாட்கள்” என்னும் கவிதைத்தொகுதிக்காக 2017ஆம் ஆண்டில் இவருக்கு சாகித்யா அகாதெமி விருது மரணத்திற்குப் பின்னர் வழங்கப்பட்டது.
  • அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். இவர் சிற்பி இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்து விருது போன்றவற்றையும் பெற்றவர்.
  • 2006ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதினை திருப்பி அளித்தார். ஈழத் தமிழர்களை காக்க அரசு தவறிவிட்டதாக இதற்கு காரணம் தெரிவித்தார்.

சேக்-உசைன் முகமது கமால் என்னும் எசு. எம். கமால்

(1928 அக்டோபர் 15 – 2007 மே 31)

  • இவர் சிறந்த வரலாற்று ஆய்வாளர். மேலும் இவர் பதிப்பாளர், இதழாசிரியர், வானொலி வடிவ எழுத்தாளர், சமுதாயத் தொண்டர் போன்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.
  • இவர் இராமநாதபுரத்தைச் சார்ந்தவர்.
  • இவர் வட்டாட்சியராகப் பணியாற்றியவர்.
  • இவருடைய நூல்கள் அனைத்தும் 2010 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
  • இவரின் பணிகளுக்காக, இமாம் சதக்கத்துல்லா அப்பா விருது, தமிழ்ப்பணிச் செம்மல் விருது, சேதுநாட்டு வரலாற்றுச் செம்மல் விருது, பாஸ்கர சேதுபதி , விருது, சேவா ரத்னா விருது, ராஜா தினகர் விருது. தமிழ்மாமணி விருது, தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க விருது, வள்ளல் சீதக்காதி விருது, பசும்பொன் விருது, அமெரிக்கா தக்சான் பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டம் போன்ற பல விருதுகளையும் சிறப்புகளையும் இவர் பெற்றுள்ளார்.

தைக்கா ஷுஐபு

  • தைக்கா ஷுஐபு என்பவர் கீழ்க்கரையில் பிறந்தவர்.
  • இவர் அரபு,ஆங்கிலம்,தமிழ்,மலையாளம்,உர்து,பராசீகம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
  • இவர் தென்னிந்தியாவை சார்ந்த இஸ்லாமிய மார்க்க‌ அறிஞரும், சூஃபி ஞானியும், எழுத்தாளரும் ஆவார்.
  • இவர் 1994-ஆம் வருடம் “சிறந்த அரபு மொழி அறிஞர்” என்ற‌ தேசிய விருதை பெற்றார்.

வா. மு. சேதுராமன் 

  • இவர்  முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள ஆண்டநாயகபுரம் என்னும் ஊரில் பிறந்தவர்.
  • பல முறை தமிழ் தழைக்க நடைபணம் மேற்கொள்பவர்.
  • பெருங்கவிக்கோ என்று புகழப்படுபவர்.
  • 2001 ஆம் ஆன்டு தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் திருவள்ளுவர் விருது இவருக்கு வழங்கபட்டது.

 முகவை ஹாஜி எஸ்.ஏ.சீனிமுஹம்மது

  • இராமநாதபுரத்தில் இஸ்லாமியப்பாடகர்கள் பலர் தோன்றினர்.
  • அவர்களுள் குறிக்கத்தக்கவர்கள் இஸ்லாமிய இசைமுரசு ஹாஜி மர்ஹூம் இ.எம். நாஹூர்ஹனிபா,மர்ஹும் எஸ்.எஸ்.ஏ.அப்துல் வாஹித் ஆகியோர் ஆவர்.
  • இவர்களுடன் இணைந்து நின்றவர் முகவை ஹாஜி எஸ்.ஏ.சீனிமுஹம்மது ஆவார்.
  • இவர் உலகு தழுவிய நிலையிலும், வானொலிகளிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

 

ஏர்வாடி ராதாகிருஷ்ணன்

  • ஏர்வாடி இராதா கிருஷ்ணன் கவிதை உறவு இதழின் சார்பில் ஆண்டுதோறும் பல பரிசுகளையும், பல கவியரங்குகளையும் நடத்தி வருபவர்.
  • நாற்பத்தோரு ஆண்டுகாலமாக கவிதை உறவு இதழினை நடத்தி வருபவர்.
  • இவர் உனக்காக ஒரு பாடல் என்ற இசைப்பாடல் தொகுப்பினை எழுதியவர்.
  • அமுதசுரபி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரின் கதை முதல் பரிசு பெற்றது.
  • இவர் வானொலி நாடகங்கள் எழுதியுள்ளர்.

சந்திரகாந்தன்

  • இராமநாதபுர மாவட்டம் காவனூர் என்ற ஊரில் பிறந்தவர் சந்திரகாந்தன் ஆவார்.
  • இவரின் இயற்பெயர் குப்புசாமி. இவர் வங்கியாளராகப் பணியாற்றியவர்.
  • இவர் நாவல்களையும், சிறுகதைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
  • இவரின் அண்டரண்டப் பட்சி, தழல் போன்ற நாவல்கள் குறிக்கத்தக்கன. இவர் இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் என்ற தொகுப்பினையும் தொகுத்தளித்துள்ளார்.
  • பாரதியார் கவிதைகளைப் பதிப்பித்துள்ளார். மொழி பெயர்ப்புப் பணியையும் செய்துவருகிறார்.
  • தொடர்ந்து தொடரும் என் ற இதழை நடத்தி வருகிறார்.

ஜெகாதா

  • இராமநாதபுர மாவட்டத்தைச் சார்ந்தவர். எண்ணற்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
  • இவர் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றவர் ஆவார்.

ஆடானை சுகுமார்

  • திருவாடானையைச் சொந்த ஊராகக் கொண்டவர் சுகுமார் ஆவார்.
  • இவர் தன் பெயரை ஆடானை சுகுமார் என்று அமைத்துக்கொண்டு பல நூல்களையும் எழுதிவருகிறார்.
  • இவர் மாத இதழ் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
  • இவர் பேசும் மழலையர் மனசு என்ற குழந்தை இலக்கியம் படைத்துள்ளார்.

அப்துல் சலாம்

  • இராமநாதபுரத்தின் தமிழ்ச்சங்கத் தலைவராக விளங்கும் அப்துல் சலாம் இராமநாதபுரம் சேதுபதி கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கியவர்.
  • மதநல்லிணக்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் இவர் இராமாயணம், கீதை சொற்பொழிவுகளை ஆற்றிவருவபவர்.
  • மாதந்தோறும் விழாக்களை நடத்தி போட்டிகளை நடத்தித் தமிழ் வளர்த்து வரும் அன்பர் இவர்.

மருத்துவர் சந்திரசேகரன்

  • மருத்துவர் சந்திரசேகரன் கண் மருத்த்துவத்துடன் தமிழ் உணர்வும் உடையவர்.
  • நல்ல கவிஞர். இவர் தமிழ்ச்சங்கத்தின் செயலளாராக விளங்குபவர்.
  • ஆன்மீகம் சார்ந்து பல நூல்களை வெளியிட்டு வரும் இவர் தன் இல்லத்தின் ஒரு பகுதியில் இராமநாதபுரம் தமிழ்ச்சங்கக் கூட்டத்தை நடத்திக் கொள்ள இடம் தருகிறார்.

 

அ. சையத் இப்ராஹிம் (1947)

  • ஹிமானா சையத் எனும் பெயரால் அறியப்பட்ட இவர் தமிழ்நாட்டில் முன்னணி இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
  • கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், ஆய்வுகள், ஆய்வுக்கட்டுரைகள் என தமிழ் இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் பங்களிப்பு வழங்கி வரும் இவர் ஒரு மருத்துவராவார். இவரொரு புகைப்பட கலைஞரும்கூட.
  • இராமநாதபுரம் மாவட்டத்தில்சித்தார் கோட்டை எனுமிடத்தில், மல்லாரி அப்துல் கனி மரைக்காயர், உம்மு ஹபீபா தம்பதியினரின் புதல்வராக சனவரி 20 1947 இல் பிறந்தார். 
  • தேவகோட்டைதேபிரித்தோ பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்று பின்பு சென்னை லொயோலா பள்ளியில் உயர்கல்வியைத் தொடர்ந்தார். 1966 ஆம் ஆண்டில் மதுரை மருத்துவக் கல்லூரிக்குத் (மதுரை பல்கலைக்கழகம்) தெரிவான இவர் 1972ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் பட்டத்தைப் பெற்றார்.

 

ஆர்.கேசவ ஐயங்கார் 

  • ஒரு மூத்த வழக்கறிஞராக இந்திய உச்ச நீதிமன்றத்தில்பணியாற்றினார்.
  • அவர் அங்கும் சென்னை உயர்நீதிமன்றத்திலும்75 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப் பணியாற்றினார்.
  • ஆர்.கேசவ ஐயங்கார் இராமநாதபுரம் மாவட்டத்தில் 1892 ல் பிறந்தார்.
  • அவர் இந்திய நீதிமன்றங்களுக்கான ரிட் மனுவை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றினார்.
  • மூத்த வழக்கறிஞராக இருந்ததோடல்லாமல், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளில் அறிஞராகவும் திகழ்ந்தார்.
  • அவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்ச் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகள் தலைமைப்பதவி வகித்தார்.
  • இந்தியன் எக்ஸ்பிரஸ். என்ற செய்தித்தாளில் அவரது நூல் குறித்து உயர்வாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சரணாகதி குறித்து விரிவாக விளக்கிக் கூறும் 'அடியவருக்கு மெய்யன் அருள்' என்ற நூலையும் அவர் இயற்றியுள்ளார்.

எஸ்.எம். கனிசிஸ்தி (பிறப்பு: சூலை 7 1937)

  • இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இராமநாதபுரம் மாவட்டம், அபிராமத்தில் பிறந்த இவர் தற்போது சென்னைபுதுத்தெரு வள்ளலார் குடியிருப்பில் வசித்து வருகின்றார். இவர் தமிழ்நாடு முஸ்லிம் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகப் பிரிவு செய்தி தொடர்புச் செயலாளருமாவார்.
  • இன்றைய முஸ்லிம் பெண்மணிகள், சமுதாய வீதியில் சன்மார்க்கப் பித்தன் ஆகியவை இவர் எழுதிய நூல்கள் ஆகும்.
  • சிறந்த பத்திரிகையாளர் விருது, நற்பணிச் செல்வர் விருது, தமிழ்மாமணி விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

எம். எஸ். முகம்மது இத்ரீஸ் (6 திசம்பர் 1926- மே 2019)

  • எம். எஸ். முகம்மது இத்ரீஸ்(6 திசம்பர் 1926- மே 2019) இராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளம் என்ற சிற்றூரில் 1926 திசம்பர் 6 அன்று பிறந்தார்.
  • தன் துவக்கக் கல்வியை முடித்தபிறகு தன் தந்தையுடன் வணிகத்தின் பொருட்டு மலேசியாவுக்குகுடிபெயர்ந்தார்.
  • எம். எஸ். முகம்மது இத்ரீஸ்  மலேசியத் தமிழரும் நுகர்வோர் உரிமை, சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பணிகளில் ஊடுபட்டு வந்தவரும், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவரும் ஆவார்.

சேக்-உசைன் முகமது கமால் என்னும் எசு. எம். கமால் (19282007)

  • முகமது கமால் இராமநாதபுரம் நகரில் வாழ்ந்த சேக் உசைன் (ஷேக்ஹூசன்) – காதர் அம்மாள் என்னும் இணையருக்கு மகனாக 1928 அக்டோபர் 15 ஆம் நாள் பிறந்தார்.
  • சேக்-உசைன் முகமது கமால்என்னும் எசு. எம். கமால் (1928 அக்டோபர் 15 – 2007 மே 31) வரலாற்று ஆய்வாளர். நூலாசிரியர், பதிப்பாளர், இதழாசிரியர், வானொலி வடிவ எழுத்தாளர், சமுதாயத் தொண்டர்.
  • பல வரலாற்றுக் கருத்தரங்குகளில் இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, செப்பேடு, நாணவியல் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவர். 
  • இராமநாதபுரம்சிவகங்கைப்பகுதியில் நடைபெற்ற விடுதலைப் போர்களை ஆவணப்படுத்தியவர்.
  • வரலாறுப் பேரவைகள் பலவற்றில் உறுப்ப்பினராக இருந்தவர். தான் ஆற்றிய வரலாற்றுப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

சத்யஸ்ரீ சர்மிளா

கே. பராசரன் (பிறப்பு: 1927) 

  • பராசரன் இந்தியாவின்முன்னோடி வழக்கறிஞர்களில் ஒருவர்.
  • அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளில் வாதாடுவதில் திறமையானவர் எனப் பெயர் பெற்றவர். 
  • ராம ஜென்மபூமிவழக்கில் ராம் லல்லா அமைப்பு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றவர்.
  • பராசரனின் தந்தை கேசவ ஐயங்காரும் வழக்கறிஞர். இராமநாதபுரம் மாவட்டத்தைச்சேர்ந்தவரான அவர் இலத்தீன், ஆங்கிலம், வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளில் புலமைபெற்றவர்.
  • தன்னுடைய தாயின் ஊரான திருவரங்கத்தில்பிறந்த பராசரன், திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளிமாநிலக் கல்லூரி, சென்னை சட்டக்கல்லூரி ஆகியவற்றில் பயின்றார்.
  • பி.ஏ. படிப்பில் வடமொழிப் பாடத்தில் நீதிபதி சி. வி. குமாரசாமி சாஸ்திரி பதக்கம், சட்டப்படிப்பில் இந்து சட்டத்தில் நீதிபதி வி. பாஷ்யம் ஐயங்கார் தங்கப்பதக்கம், பார் கவுன்சில் தேர்வில் நீதிபதி கே. எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றார்.

கிருஷ்ணசுவாமி ராமையா  ( ஏப்ரல் 15, 1892 - ஆகஸ்ட் 3, 1988)

  • கிருஷ்ணசுவாமி ராமையா என்பவர் ஏப்ரல் 15, 1892 ஆம் ஆண்டு
    இராமநாதபுரம் மாவட்டம்,  கீழக்கரையில் பிறந்தார்.
  • இந்திய வேளாண்மை விஞ்ஞானி, மரபியலாளர் , பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கட்டாக்கின் மத்திய ரைஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (சி.ஆர்.ஆர்.ஐ) இன் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார்.
  • இவர், இந்திய நெல் வகைகளில் உள்ள முறையான கலப்பினத் திட்டங்களை அறிமுகப்படுத்தியவர்.
  • 1957இல்,இந்திய அரசுஅவருக்கு, தேசத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக நான்காவது உயர்ந்த இந்திய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ, விருதினை வழங்கி கவுரவித்தது.
  • அதைத் தொடர்ந்து, 1970 இல், மூன்றாம் மிக உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் விருதினை அவருக்கு வழங்கியது.

கந்தர்வன் (பிப்ரவரி 31944 - ஏப்ரல் 222004)

  • தமிழக எழுத்தாளரும், கவிஞரும், தொழிற்சங்கவாதியும் ஆவார்.
  • கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். இராமநாதபுரம் மாவட்டம்சிக்கல்என்னும் ஊரைச் சார்ந்தவர்.
  • கணேசன், கனகம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். 29 வயதில் அரசுப்பணிக்கு வந்த கந்தர்வன் தொழிற்சங்கவாதியாகத் தீவிரமாக இயங்கியவர். அவசரநிலை காலத்தில் 19 மாதங்கள் வேலையிழந்து பின்னர் மீண்டும் பணியேற்றவர்.
  • 70-களின்தொடக்கத்தில் உருவான மக்கள் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.
  • பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராகித் தம் இறுதிக்காலம் வரை பங்களிப்புச் செய்தவர்.
  • பலநாள்கள் புதுக்கோட்டையில் இருந்து படைப்பிலக்கியங்களைப் படைத்து வந்தவர்.

தைக்கா சுஐப் (பி. சூலை 29, 1930)

  • தைக்கா ஷுஐபு தென்னிந்தியாவை சார்ந்த இஸ்லாமிய மார்க்க‌ அறிஞரும், சூஃபி ஞானியும், எழுத்தாளரும் ஆவார்.
  • இவர் 1994-ஆம் வருடம் "சிறந்த அரபு மொழி அறிஞர்" என்ற‌ தேசிய விருதை பெற்றார். உலகளவில் "500 மிகவும் செல்வாக்குள்ள முஸ்லிம்கள்" எனும் பட்டியலில் இவர் இருமுறை இடம் பெற்றிருக்கிறார்.
  • இவர் ராமநாதபுரம் கீழக்கரைநகரில் பிறந்தவர்.
  • இவர் பலநூற்றாண்டுகளாக இஸ்லாமிய கல்விகளை போதித்துவரும் குடும்பத்தில் தோன்றியவர்.
  • இவரின் தந்தை தைக்கா அஹ்மத் அப்துல் காதிர்(இறப்பு :1976) ஆன்மிக வழிகாட்டியாகவும், அறிஞராகவும் திகழ்ந்தார்.
  • இவரின் பாட்டனார்,சாஹூல் ஹமீத்(இறப்பு:1921) ஓர் அறிஞர்.
  • இவரின் முப்பாட்டனார் சைய்யித்முஹம்மத்(இறப்பு: ஹி.1316), "இமாமுல் அரூஸ்" மற்றும் "மாப்பிள்ளை லெப்பை ஆலிம்" என அறியப்பெற்ற இஸ்லாமிய அறிஞர்.தைக்கா சுஐப் இஸ்லாத்தின் முதலாவது கலீபா அபூபக்கர்(றழி)அவர்களின் வழித்தோன்றலில் வந்தவர்.

நாரா. நாச்சியப்பன் 

  • ஒரு தமிழ் எழுத்தாளராவார்.
  • இவருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
  • பாவலர் நாரா.நாச்சியப்பன் என்றும், இவர் அழைக்கப்பெற்றார்.
  • இராமநாதபுரம் மாவட்டம் ஆத்தங்குடியில் 1927ல் பிறந்தார் நாரா. நாச்சியப்பன்.
  • பொன்னி என்ற இதழில் துணையாசிரியராக பணியாற்றியவர். ஐங்கரன் எனும் கைபிரதி ஏட்டினை நடத்தியவர்.

பி. எஸ். அப்துர் ரஹ்மான் (அக்டோபர் 151927 - ஜனவரி 72015)

  • இவர் ஒரு இந்தியத்தொழிலதிபர் ஆவார்.
  • ராமநாதபுரம் மாவட்டம்கீழக்கரையில் பிரபல முத்து வணிகர் புகாரி ஆலிம் தம்பதியினருக்கு பிறந்த இவர் வள்ளல் சீதக்காதி குடும்பத்தைச் சேர்ந்தவர்.
  • பி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்நிறுவன வேந்தர், சீதக்காதி அறக்கட்டளை, அகில இந்திய இஸ்லாமிய நிறுவனம், கிரசன்ட் பள்ளி, கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரி, சென்னை, மதுரை, நாகூர் ஆகிய இடங்களிலுள்ள கிரசன்ட் மெட்ரிக்குலேசன் பள்ளிகள்,. துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட ஈ.டி.ஏ.அஸ்கான் ஸ்டார் நிறுவனம், ஈடிஏ ஸ்டார் நிறுவனம், ஈ.சி.சி.ஐ., உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தி வந்ததுடன், யூசுப் சுலைகா மருத்துவமனை, கிரசன்ட் மருத்துவமனைகளையும் நிறுவியுள்ளார்

பி.ஜைனுல் ஆபிதீன்

மா. தவசி

முகம்மது மீர் ஜவாது

·        இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியை அடுத்த எமனேஸ்வரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர்.

·        தமிழில் புலமை மிக்க இவர். இராமநாதபுரத்தை ஆண்ட புகழ்மிக்க கிழவன் சேதுபதி என்ற செல்ல முத்து ரகுநாத சேதுபதி மன்னரின் அரசவைக் கவிஞராகவும், அரசியல் ஆலோசகராகவும் திகழ்ந்தவர்.

·        இவருக்கு சேதுபதி மன்னர் பரமக்குடி அருகே சுவாத்தன், வண்ணவயல் ஆகிய இரண்டு கிராமங்களை நிலக்கொடையாக வழங்கினார்.

லேனா தமிழ்வாணன் 

  • லேனா தமிழ்வாணன்தமிழக எழுத்தாளரும், பதிப்பாசிரியரும், இதழாசிரியரும் ஆவார். இவர் மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர்.
  • பயணக் கட்டுரைகள், வாழ்வு முன்னேற்றக் கட்டுரைகள் எழுதி பிரபலமானவர்.
  • தமிழ்வாணன், மணிமேகலை தம்பதியின் புதல்வர். தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில்1954இல் பிறந்தவர்.
  • நாமக்கல்லில் உள்ள எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளைஇவரது ஒரு பக்கக் கட்டுரை 500 என்னும் நூலுக்கு 2011 ஆம் ஆண்டு பரிசு வழங்கியது
  • 2014 ஆம் ஆண்டு லேனா தமிழ்வாணனுக்கு அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம்கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

தமிழ்வாணன் (மே 221926 - நவம்பர் 101977)

  • தமிழக எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார்.
  • தமிழ்வாணன்  இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில்வாழ்ந்த லெட்சுமணன் செட்டியாருக்கும் பிச்சையம்மை ஆச்சிக்கும் இரண்டாவது மகனாக 1926 மே 5ஆம் நாள் பிறந்தார்.
  • இராமநாதன் என்பது இவரது இயற்பெயர்.
  • தமிழ்த்தென்றல் திரு. வி.க.இவருக்கு "தமிழ்வாணன்" எனப் பெயரைச் சூட்டினார்.

வா. மு. சேதுராமன் 

 

சீதக்காதி

  • சீதக்காதி வாழ்ந்த காலம் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி; தோராயமாகக் கி.பி.1650-1720 என்பர்.
  • இவர் பிறந்து வளர்ந்த ஊர் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தது கீழக்கரைஎன்றும், காயல்பட்டினம் என்றும் இருவேறு கருத்துக்கள் பேசப்படுகின்றன.
  • காயல் என்ற பெயரில் பழையகாயல்புன்னைக்காயல்கீழக்கரைகாயல்பட்டினம்என்ற நான்கு ஊர்கள் உண்டு. அவற்றுள் கீழக்கரை என்பதே சீதக்காதியின் ஊர் என்பர்.
  • சீதக்காதி ஒரு தமிழர்இசுலாம்சமயத்தவர்; புகழ்பெற்ற வள்ளல். இந்து-முசுலீம் என்று வேற்றுமை பாராட்டாது அனைவரையும் சமமாகக் கருதி ஆதரித்தவர்; தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றிய பெருமகனார். 
  • இராமநாதபுரத்தைஆண்ட கிழவன்சேதுபதி இவரின் நெருங்கிய நண்பர். கிழவன் சேதுபதிக்குச் சீதக்காதி மதியுரை அமைச்சர்போன்று விளங்கினார்

 

வ.மூ.சி.வேலுச்சாமி நாடார்

  • 1907-ம் ஆண்டு அப்போதைய ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, பேரையூர் கிராமத்தில் பிறந்தவர் வ.மூ.சி.வேலுச்சாமி நாடார்.
    1936-ல் காங்கிரஸில் தீவிரமாக  இயங்கத் தொடங்குகிறார் வேலுச்சாமி.
  • அந்த காலகட்டங்களில் முத்துராமலிங்கத்தேவரும் காங்கிரஸில் தீவிரமாக இருந்தார். தேவரையும், நாடாரையும் இணைத்தது காங்கிரஸ்கட்சி. முத்துராமலிங்கத் தேவரோடு மிகவும் நெருக்கமானார் வேலுச்சாமி நாடார்.
  • அதற்கு அடையாளமாக 1936-ம் ஆண்டு பேரையூரில் முத்துராமலிங்கத் தேவர் தலைமையில் பிரமாண்டமாக பொதுக்கூட்டம் காங்கிரஸ் சார்பில் நடந்தது.

 

டி.எல்.சசிவர்ணத் தேவர் (6-8-1912 -7-11-1973)

  • ராமனாதபுரம் மாவட்டத்தில் டி.லாடசாமி குருவம்மாள் தம்பதியினருக்கு 1912இல் பிறந்தவர் சசிவர்ணம்.
  • 1934இல் முத்துராமலிங்கத் தேவருடன் சேர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியினர் தங்கள் சமூகத்தை குற்றப் பரம்பரையினர் என்று முத்திரை குத்தியிருந்த கொடுமையை எதிர்த்துப் போராடினார்.
  • இவர்களுடைய போராட்டத்தின் காரணமாகத்தான் அந்தக் குற்றப் பரம்பரை சட்டம் நீக்கப்பட்டது.
  • தென் தமிழகத்தில் தலை சிறந்த தலைவராகவும், முக்குலத்தோர் போற்றும் மாமனிதராகவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வழியில் வாழ்ந்தவருமான முத்துராமலிங்கத் தேவரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர் இந்த சசிவர்ணத் தேவர்.
  • முத்துராமலிங்க தேவருடன் இவரும் பார்வார்டு பிளாக் கட்சியில் சேர்ந்து பணியாற்றியவர்.

 

பரமசிவம்

  • கருப்பசாமி மற்றும் பெரிய அக்கா ஆகிய இருவருக்கு  இரண்டாவது மகனாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் கமுதி அடுத்து உள்ள இராமசாமிபட்டி  என்னும் ஊரில் பிறந்தார்.
  • நவீன வேளாணமை முதல் இயற்கை வேளாண்மை வரை கற்று, பிறருக்கும் கற்றுத்தந்தார்.
  • பிறகு ஆசிரியர் வேலைக்கு தகுதி அடைந்த இவர், ஆசிரியர் பணிக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டார்.
  • இதற்கு இடையில் வேளாண்மையை பகுதி நேர வேலையாக செய்த்துவந்தார்,பள்ளியில் முதலில் இடைநிலை ஆசிரியராகவும் இவர் பின்பு உதவிதலைமை ஆசிரியராகவும் தலைமைஆசிரியராக பணியாற்றினார்.

காந்திமதி

  • ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மேல பண்ணகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம்.
  • பர்மாவில் குடியேறி மீன் வியாபாரம் செய்துவந்ததன் மூலம் மிகப் பெரிய செல்வந்தராகத் திகழ்ந்தவர்.
  • முத்துராமலிங்கத் தேவர்-ராமுகண்ணம்மாள் தம்பதியின் மகளாகப் பிறந்தவர் காந்திமதி. காந்திமதி தன்னுடன் பிறந்த 6 பேர்களில், இவர் மட்டும் எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார். இதுவே பின்னாளில் காந்திமதியை வீரப் பெண்மணியாக மாற்றியது.
  • நேதாஜியைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டார் காந்திமதி. அதைத்தொடர்ந்து நேதாஜியின் படையில் சேர அவருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
  • தந்தையின் அனுமதியுடன் தனது 12-வது வயதில் ஐ.என்.ஏ பாலசேனையில் சேர்ந்தார்.

திரை பிரபலங்கள்

  • லதா இந்திய திரைப்பட நடிகையான லதா இராமநாதபுரத்தில் பிறந்தார்.
  • பரமக்குடியில் பிறந்த இந்திய திரைப்பட நடிகர் கமல் ஹாசன்மற்றும் அவரது குடும்பமான சந்திரஹாசன் மற்றும் சாருஹாசன் ஆகியோர் திரைப்பட நடிகர்களாகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் உள்ளனர். சுஹாசினி பரமக்குடியில் நடிகர் சாருஹாசனுக்கு பிறந்தவர்.
  • புகழ்பெற்ற வினோத்ராஜ் (தமிழ் நடிகர்) ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.
  • இவர் கில்லிஉட்பட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் பிரபல இந்திய நடிகர் விக்ரம் ஆகியோரின் சொந்த ஊர் இதுவே ஆகும்.
  • ராஜ்கிரண்,செந்தில் போன்ற திறமையான நடிகர்கள் ராமநாதபுர மாவட்டத்தில் பிறந்தவர்களே.
  •  

 

 

by Swathi   on 06 May 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ராமேஸ்வரத்தில் உள்ள அதிசயத் தீர்த்த கிணறு. ராமேஸ்வரத்தில் உள்ள அதிசயத் தீர்த்த கிணறு.
தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள். தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள்.
தமிழகத்தின் இந்த 'குட்டி காஷ்மீர். தமிழகத்தின் இந்த 'குட்டி காஷ்மீர்.
தமிழ்நாட்டின் 'மாளிகை' கிராமம் தெரியுமா? கட்டாயம் காண வேண்டிய இடம்... சுற்றிப் பார்க்க ரூ.50 போதும்! தமிழ்நாட்டின் 'மாளிகை' கிராமம் தெரியுமா? கட்டாயம் காண வேண்டிய இடம்... சுற்றிப் பார்க்க ரூ.50 போதும்!
சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியளவில் தமிழகம் முதலிடம். சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியளவில் தமிழகம் முதலிடம்.
அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிகச் சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்கலாம்! அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிகச் சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்கலாம்!
அஜந்தா, எல்லோரா வரிசையில் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் இன்னொரு 'சித்தன்னவாசல்' அஜந்தா, எல்லோரா வரிசையில் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் இன்னொரு 'சித்தன்னவாசல்'
தஞ்சையில் புதிய சுற்றுலாத் தளம் தயார்..! மன்னர்கள் படகுச் சவாரி செய்த ஏரியில் இனி நாமும் பயணம் செய்யலாம்..! தஞ்சையில் புதிய சுற்றுலாத் தளம் தயார்..! மன்னர்கள் படகுச் சவாரி செய்த ஏரியில் இனி நாமும் பயணம் செய்யலாம்..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.