கேரளாவில் வள்ளுவர் ஞான மடங்களை உருவாக்கியவர் சிவானந்தர்
(1946 - 9 ஆகஸ்ட் 2021)
- சிவானந்தர், திருவருள் மடத்தின் நிறுவனர் ஆவார்.
- திருவள்ளுவரைக் கடவுளாகவும், திருக்குறளை புனித வேதமாகவும் ஏற்று, திருக்குறள் நெறிமுறைகளை நூற்றுக்கு நூறு கடைப்பிடித்து கேரளத்தில் ஒரு பிரிவினர் வழிபாடுகள் நடத்தி வருகிறார்கள்
- திருவள்ளுவரை பகவான் ஆதி திருவள்ளுவர்' என்று இவர்கள் அழைக்கிறார்கள். திருவள்ளுவரை வணங்கும் ஆலயத்தை பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான மடம்' என்று பெயரிட்டுள்ளார்கள்.
- கேரளத்தின் கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களின் பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மடங்கள் செயல்படுகின்றன.
- பகவான் ஆதி திருவள்ளுவர் மடங்களில், மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை மந்திரமாக ஏறக்குறைய சுமார் 60 ஆயிரம் பேர் ஓதி, வள்ளுவரைத் தெய்வமாக தியானித்து கும்பிட்டு வருகிறார்கள்.
- திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கு உலகில் எந்த மூலையிலிருந்தும் கிடைக்காத அங்கீகாரம், பெருமையை கேரளம் தந்திருக்கிறது.
- வள்ளுவர் மதத்தைக் கேரளத்தில் உருவாக்கியவர் மூவாற்றுபுழாவைச் சேர்ந்த சிவானந்தர்.
- தனி மனிதராக நின்று, உடல் பொருள் ஆவி, குடும்பத்தை மறந்து, திருவள்ளுவரின் போதனைகளைப் பரப்பி, திருவள்ளுவர், திருக்குறள் பக்கம் அறுபதாயிரம் கீழ்த்தட்டு மக்களைக் கொண்டு வந்ததினால், அந்த அறுபதாயிரம் பேர்களால் மதிப்பு மரியாதையுடன் சிவானந்தர் என்று அழைக்கப்படுகிறார்.
- சிவானந்தர் அடிப்படையில் கிறித்தவ மத நம்பிகையில் பிறந்தவர்.
- அவர் கூறுகையில் வள்ளுவரை உணர்ந்து குடிப்பதை நிறுத்தி. அசைவ உணவையும் ஒதுக்கினேன். என்னைப் பார்த்து, பலரும் மாற ஆரம்பித்தார்கள். ஞான குருவாக வள்ளுவரை ஏற்றுக் கொண்டவர்கள் அசைவ உணவுகளை விட்டுவிட வேண்டும். மது, புகையிலை இதர லாகிரி வஸ்துகளைத் தொடக் கூடாது. பொய் சொல்லக் கூடாது. திருடுவது, பிறரை ஏமாற்றுவதும் விலக்கப்பட்டுள்ளது என்கிறார்.
- .ஞானமடங்களில் நடக்கும் திருமணத்தில் பெண்ணுக்குத் தாலி கட்டப்படுவதில்லை. மோதிரம் போட்டுவிடும் வழக்கமும் இல்லை. மணமகனும் மணமகளும் திருமண தினத்தன்று புத்தாடை உடுத்தி, கழுத்தில் மலர் மாலை அணிந்து சுற்றம் சூழ மடத்திற்கு வருவார்கள். திருமணம் பதிவு செய்யப்படும். .பெற்றோர், உறவினர் முன்னிலையில், திருவள்ளுவர் ஞான மட புரோகிதர் இல்லறம் அதிகாரத்தில் உள்ள திருக்குறள்களை ஓதி முடிக்க, திருமணம் நிறைவுறும்.
- குழந்தை பிறந்தால் பிறப்புப் பதிவேட்டில், பிறப்பு விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
- ஞான மடங்களை உருவாக்கிய போதே, இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடுகாட்டுக்காக நிலத்தையும் சேர்த்து வாங்கிவிட்டோம். மரணம் ஏற்படும் போது, உடலை ஞான மடத்திற்கு கொண்டு வந்து, நிலையாமை அதிகாரத்தில் உள்ள குறள்களை ஓதி, இறப்பிற்கான பதிவேட்டில் பதிவு செய்து நல்லடக்கம் செய்கிறோம். .
- கார்த்திகை மாதம் 41 நாட்கள் விரதமிருந்து, தலைமை ஞானமடமான கூர்மலையில் உள்ள மார்பளவு திருவள்ளுவர் சிலையை பூக்களால், விளக்குகளால் அலங்கரித்து வழிபடுகிறோம்..
- திரு ஓணம் பண்டிகையின் போது, எல்லா ஞான மடங்களிலும் வண்ண வண்ண பூக்களால் பூக்களம் என்னும் மலர்க் கோலங்கள் போடப்படுகின்றன. வள்ளுவரை வணங்கினாலும், கேரள மண்ணின் வாசனையை வள்ளுவருக்கு வழங்குகிறோம்.
- ஆண்டு விழா அன்று, அதிகாலையில் செண்டை மேளங்கள் மங்கலமாய் முழங்க, ஞான மடத்தின் கொடி ஏற்றம் நடக்கும்..திருவள்ளுவர் மதத்திற்காக, பச்சைநிறக் கொடியின் நடுவே சிவப்பு வட்டம் வரைந்து வடிவமைத்திருக்கிறோம். கொடியேற்றம் நடந்து முடிந்ததும், திருவள்ளுவர் வழிபாடு. மலையாள திருக்குறள்கள் ஓதப்படும்.
- திருவள்ளுவர், திருக்குறள் பற்றி பக்தர்கள் உருவாக்கிய பாடல்கள் பாடப்படும். .
- ஒவ்வொரு மடத்துக்கும் மடபதி எனப்படும் புரோகிதர் இருக்கிறார். வழிபாடு நடத்துவது, மட பரிபாலனம் இவரது பொறுப்பு.
- “எங்கள் குலதெய்வமாக விளங்குபவர் திருவள்ளுவர். அவரின் திருக்குறளே எங்களுக்கு திருமந்திரம்” என்கிறார்கள்.
|
வழிகாட்டிகளை வணங்குவோம்..
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்
www.KuralWorld.org
|
|