|
||||||||
தமிழ்ச்சமூகம் ஆய்வுகளின் நம்பிக்கையில்லாமல் தேங்கிநிற்கிறதா? |
||||||||
![]() தமிழ்ச்சமூகம் ஆய்வுகளின் நம்பிக்கையில்லாமல் தேங்கிநிற்கிறதா?
மேடைகளில் பேசுபவர்கள் , நூல்களில் மொழிபெயர்ப்பு குறித்து குறிப்பிடுவார்கள் , கலந்துரையாடலில் கருத்து பகிர்பவர்கள் என்று திருக்குறள் சார்ந்த மொழிபெயர்ப்பு புள்ளிவிவரங்களை இன்னும் தொடர்ந்து தவறாகக் குறிப்பிடுகிறார்கள். அது தமிழை வளர்க்காது. திருக்குறள் மொழிபெயர்ப்புகளைத் தொட்டு இதுவரை பேசியது, எழுதியது, இனி பேசப்போவது அனைத்தும் தவறான புள்ளிவிவரமாகவே இருக்கும். இதற்கு ஒரே தீர்வு "Thirukkural Translations in World Languages" நூலை வாங்கி ஒருமுறையேனும் திருக்குறள் பேசுபவர்கள் வாசித்துவிடுங்கள். ஆவணப்படுத்துங்கள்..
பெரும் உழைப்பில் திரட்டியுள்ள திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய பட்டியலில் ஒரு மொழிபெயர்ப்பை செய்ய ஆகும் செலவு 2-3 இலட்சம் ரூபாய் மட்டுமே, அதுவும் மொழிபெயர்ப்பாளருக்கு ஆகும் செலவாகும். பத்து கோடி தமிழ் மக்களில் 100 நாடுகளுக்கு மேல் வசிக்கும் தமிழ் மக்கள்தொகையில் , ஐந்து நாடுகளில் அலுவல் மொழியாக தமிழ் இருக்கும் நிலையில் இதை 158 பேர் கையில் எடுத்தால் உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் என்பது இன்னும் ஓரிரு ஆண்டுகளில் உறுதியாகும். திருக்குறள் மொழிபெயர்ப்பில் துணைநிற்பவர்கள், ஒருங்கிணைப்பவர்களின் பெயர்கள் காலத்திற்கும் பேசப்படும், ஆவணத்தில் இடம்பெறும். இதற்கு நாம் செய்யவேண்டியது இதுவரை நாம் கேள்விப்பட்டதை விடுத்து, தரவுகளை உள்வாங்கவேண்டும், வாசித்துப் பார்க்கவேண்டும், கேள்வி கேட்டு தெளிவுபெறவேண்டும்.
இந்நூல் புத்தகத் திருவிழாக்களில் சந்தைப்படுத்தும் நெருக்கடியிலோ, இத்தனை நூல்களை எழுதிவிடவேண்டும் என்ற எண்ணிக்கைக்காகவோ, அரசு நூலகங்களுக்கு விற்கவேண்டும் என்ற இறுதித்தேதிக்குள் முடிப்பதற்காகவோ எழுதப்பட்ட நூல் அல்ல. இது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ந்து தொகுக்கப்பட்ட செயல்பாட்டு இறுதி அறிக்கை, உலகத் தமிழர் கரங்களில் தவழவேண்டிய மிக முக்கியத் திருக்குறள் ஆவணம்.
ஏப்ரல் 2024 வரை திருக்குறள் 58 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ,158 மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டும் , ஒரே மொழியில் பலமுறை வெளிவந்துள்ள மொழிபெயர்ப்புகளை சேர்த்தால் 351 முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரங்கள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மலையாளத்தில் 30 முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது , ஆங்கிலத்தில் 130 முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று எண்ணிக்கை மட்டுமல்ல , ஒரு மொழியில் வெளிவந்துள்ள அனைத்து மொழிபெயர்ப்புகளின் முழு விவரமும் , ஆண்டு, மொழிபெயர்ப்பாளர், பதிப்பகம், அதுசார்ந்த வரலாற்றுக் குறிப்புகளோடு முழுமையாகத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. இதுவரை திருக்குறளில் இந்த ஆழத்தில் மொழிபெயர்ப்பு விவரங்கள் குறித்து ஒரு நூல் வந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு இதற்கு உழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் பணியின் முதல்கட்டம் முடிந்தது. உலகத் தமிழர்களின் கரங்களில் இவ்வறிக்கை நூலை கையளிக்கிறோம், அவர்கள் அடுத்து கொண்டுவரவேண்டிய மொழிபெயர்ப்புகளை கொண்டுவருவது எப்படி என்று சிந்திக்கவேண்டும்.
தமிழில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் எப்படி இதை எடுத்துக்கொண்டு அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துகிறார்கள், இந்நூலை எப்படி நேர்மையாக அணுகுகிறார்கள் என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்கிறோம். விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒரு நேர்மையான உரையாடலை ஒவ்வொரு அமைப்பும் அங்குள்ள ஆய்வு மாணவர்களைக்கொண்டு நிகழ்த்தவேண்டும் , அதில் குறைகள் ஏதும் இருந்தால் சுட்டிக்காட்டவேண்டும் என்று அறிவார்ந்த சமூகத்தின் எதிர்ப்பார்ப்பு.
இது மற்றொரு உரைநூலோ, உவமைநூலோ அல்ல. திருக்குறளை உலகிற்கு பரவலாக்கல் செய்யவேண்டிய இலக்கிற்கு வலுசேர்க்கும் ஆய்வு சார்ந்த கையடக்கக் கருவி. செயல்பாட்டு நூல். திருக்குறளை யுனெசுகோ அங்கீகாரம் பெறவும், தேசியநூலாக அங்கீகரிக்கவும் பன்னெடுங்காலமாக உள்ள கோரிக்கையை நோக்கி நம்மை கூர்மையாக நகர்த்தும் நூல்.
மொழியுணர்வு மிகுந்த உலகின் பிறமொழிகளில் இதுபோல் அவர்களுக்கு முதன்மையான நூலில் ஒரு ஆய்வு வெளிவந்திருந்தால் உணர்வுள்ள, அறிவார்ந்த அந்தச் சமூகங்கள் என்ன செய்திருப்பார்கள்?
இப்படி எதுவும் தமிழில் இதுவரை , இவ்வளவு பரப்புரைகளுக்குப்பின் , ஊடகச் செய்திகளுக்குப்பின், உலகின் பல நாடுகளில் வெளியிட்டு இலவச நூல்களை அனுப்பியதற்குப்பின் இன்னும் நிகழவில்லை. உலகின் மூத்த மொழி தமிழ், தமிழில் முதன்மையானது திருக்குறளும், தொல்காப்பியமும். அந்த திருக்குறள் ஆய்வுக்கே இந்த நிலைமை என்றால் பிற இலக்கிய ஆய்வுகளுக்கு, பிற முயற்சிகளுக்கு , எங்களைப்போல் சிறிதளவேனும் வெளித்தொடர்பு இல்லாதவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு என்ன நிலைமை என்பது கவலைப்படும் நிலையில் தமிழ் ஆய்வுகள் உள்ளது. தமிழ்ச்சமூகம் உயிரை மட்டும் வைத்துக்கொண்டு உயிர்ப்பு இல்லாத ஊசலாடும் நிலையில் , பெருமைபேசிப் பயணிக்கிறதா? என்பதை நாம் ஒவ்வொருவரும் நமக்குள் சுய விசாரணை செய்யவேண்டும். திரு.கி. ஆ. பெ. விசுவநாதம், திரு.பாவலரேறு பெருஞ்சித்திரனார், திரு.ம. பொ. சிவஞானம், திரு.இலக்குவனார் போன்ற பல்வேறு உண்மையான தமிழுணர்வு கொண்ட தமிழ் அறிஞர்கள் வாழ்ந்த காலத்தில் அரசும், முதல்வர் பொறுப்பில் வந்தவர்களும் தமிழுக்கும், தமிழறிஞர்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்தார்கள், இவர்கள் என்ன நினைப்பார்களோ , போராட்டத்தில் இறங்கிவிடுவார்களோ , அறிக்கை விட்டு அரசுக்கு கெட்டபெயர் வந்துவிடக்கூடாதே என்ற சூழல் தமிழ்நாட்டில் இருந்தது என்று நினைக்கிறேன். தமிழ் அறிஞர்கள் பின்னால் இளையோர் இருந்ததால் , சமூகம் இருந்ததால் ஆளும் அரசுகள் இவர்களது கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக பார்க்கவேண்டியுள்ளது.
அப்படியானால், கீழ்காணும் கேள்விகள் எழுகிறது.
|
||||||||
by Swathi on 23 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|