|
||||||||
திருவள்ளுவர் நாள் எது? |
||||||||
1935 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நமச்சிவாய முதலியாரின் சீரிய முன்னெடுப்பில், தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ்த்தென்றல் திரு.வி.க உள்ளிட்ட தமிழறிஞர்கள் ஒன்றுக்கூடி, இனி கிருத்துவ ஆண்டுடன் 31ஐ கூட்டி, திருவள்ளுவர் ஆண்டை கடைப்பிடிப்பது என்றும், காலங்காலமாக கொண்டாடி வரும் #வைகாசி - அனுசம் நாள்மீனில் திருவள்ளுவர் நாளை சிறப்பாக கொண்டாடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது!! இங்கு எங்குமே தை 1 தமிழ்ப் புத்தாண்டு என்றும், தை 2 திருவள்ளுவர் நாள் என்றும் முடிவு எடுக்கப்படவில்லை!!
அறிக்கை 2-2
முனைவர் மு.இளங்கோவன்14/4/12 21:05 வணக்கம் ஐயா
மணி மு. மணிவண்ணன்14/4/12 14:10 மிக்க நன்றி. செந்தமிழ்ச் செல்வி பழைய இதழ்களில் மறைமலை அடிகளார் தலைமையில் திருவள்ளுவராண்டு நிறுவிய செய்திகளைத் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. திருவள்ளுவர் நாள் அறிவிப்பும் கூட தை முதல் நாள் இல்லையே? வைகாசி 5 (மே 18) என்றல்லவா குறித்திருக்கிறார்கள்? மறைமலை அடிகளார் குழு 1921லேயே திருவள்ளுவர் ஆண்டு நிறுவியிருந்தால், ஏன் 1935ல் வைகாசி 5த் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 27 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|