|
|||||
டெல்டாவில் பசுமை தீபாவளி |
|||||
![]() டெல்டாவில் பசுமை தீபாவளி சோமு இரவிச்சந்திரன்,சிங்கப்பூர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவிலுள்ள மூவாநல்லூர், ராஜாளிக்குடிக்காடு, அமரபாகம், வெட்டிக்காடு, பருத்திக்கோட்டை, எட கீழையூர், எட மேலையூர், எட அன்னவாசல், புள்ளவராயன்குடிக்காடு மற்றும் வடுவூர் கிராமங்களில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி “பாதை” அறக்கட்டளை உதவியுடன் “நமது கிராமம்” இளைஞர்கள் சமீபத்தில் புனரமைக்கப்பட்ட 25-க்கும் மேற்பட்ட குளங்கள், ஏரிகள் மற்றும் வாய்க்கால் கரைகளில் 2000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு தீபாவளி பண்டிகையைப் பசுமை தீபாவளியாகக் கொண்டாடினார்கள்.
கடந்த கோடைக்காலத்தில் இளைஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து “நமது கிராமம்” என்ற அமைப்பை உருவாக்கிப் பொதுமக்கள் ஆதரவுடன் குளம், குட்டை, வாய்க்கால்களைத் தூர்வாரி, கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு 25-க்கும் மேற்பட்ட குளங்களைக் காவிரி நீரால் நிரப்பினார்கள்.
“நமது கிராமம்” இளைஞர்களின் இந்தச் செயலை வியந்து பார்த்த சிங்கப்பூரைச் சேர்ந்த “பாதை” அறக்கட்டளை இயக்குநர்கள் திரு.இரவிச்சந்திரன் மற்றும் திருமதி.கீதா ரவிச்சந்திரன் ஆகியோர் மீண்டும் இந்த நீர் நிலைகள் வடிவம் மாறாமலும், ஆக்கிரமிக்கப்படாமலும் காக்க உருவாக்கிய திட்டமே “பசுமை தீபாவளி”
மூவாநல்லூரில் தொடங்கி வடுவூர் வரை உள்ள பத்துக் கிராமங்களிலுள்ள நீர் நிலைகளைச் சுற்றி “நமது கிராமம்” இளைஞர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து ஒவ்வொரு குளக்கரையிலும் நன்கு வளர்ந்த இரண்டு ஆலமரக்கன்றுகள், இரண்டு அரசமரக்கன்றுகள் மேலும் வேங்கை, நீர்மருது, புளியம், வாதாம், சென்பகம், மகிழம் என 15 வகையான 2000 மரக்கன்றுகள் ரூ 5 லட்சம் செலவில் நடப்பட்டன. மரக்கன்றைச் சுற்றி நான்கு உயரமான மரக்கம்புகள் நட்டு, பின்னர் அதைச் சுற்றி அழுத்தமான பாதுகாப்புக் கூண்டுகள் என மிக பாதுகாப்பான முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்றுகளுக்கு ஒரு வருடம் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி, மரக்கன்றுகளைக் கவாத்து செய்து பராமரிக்க மாத ஊதியத்தில் பணியாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இந்தத் தீபாவளிக்குக் குளக்கரைகளும், கண்மாய்களும் புத்தாடை கட்டி நிற்பது போல் அழகாகக் காட்சி தருகிறது. தீபாவளி கொண்டாடச் சொந்த ஊருக்கு வந்திருந்த மக்கள் கடும் மழையையும் பொருட்படுத்தாது இப்பணியில் மகிழ்வுடன் பங்கேற்று மன நிறைவுடன் தீபாவளியைப் பசுமை தீபாவளியாகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
இந்த நற்பணிக்கு “பாதை” அறக்கட்டளைக்கு நன்கொடை கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு “நமது கிராமம்” இளைஞர்கள் மற்றும் கிராமவாசிகள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்கள். |
|||||
![]() |
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
by Swathi on 11 Dec 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|