LOGO
  முதல் பக்கம்    சுற்றுலா    தமிழ்நாடு சுற்றுலா Print Friendly and PDF
- மதுரை

மதுரைக்கு அழகு சேர்க்கும் வண்டியூர் தெப்பக்குளம்

மதுரைக்கு அழகு சேர்க்கும் வண்டியூர் தெப்பக்குளம் .


தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்று மதுரை., ஆயிரம் புயல் மழையினைத் தாண்டி இன்றும் உயிருப்புடன் தன் வரலாற்றை கம்பீரமாகத் தாங்கி நிற்கும் ஊர் மதுரை. குறிப்பிடத்தக்க ஆயிரம் வரலாறு மதுரை குறித்து உண்டு. அவ்வகையில் தற்போது மதுரைக்கு அழகு சேர்க்கும் வண்டியூர் தெப்பக்குளம் குறித்து பார்க்கலாம்.

மதுரை வண்டியூர் தெப்பக்குளம் ஆயிரத்து அறுநூறுகளில் மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலை நாயக்கரால் வெட்டப்பட்டது. கட்டிடக்கலை மீது ஆர்வம் கொண்ட நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டது மதுரை வரலாற்றின் பொற்காலம் என்றே சொல்லலாம். நாயக்க மன்னர்களில் மிகவும் திறமையானவராக இருந்தவர் மன்னர் திருமலை நாயக்கர். இவர் வெட்டிய இந்த தெப்பக்குளம் குறித்து மதுரை மக்களிடையே பல்வேறு கதைகள் புழக்கத்தில் உள்ளன.
அதில் ஒன்று மன்னர் தன் அரண்மனையினைக்கட்ட மண் எடுத்த இடமே பிறகு தெப்பக்குளமானது என்பதே., ஆனால் அது உண்மையல்ல என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். 1865ஆம் ஆண்டு மதுரைக்கு அழகு சேர்க்க பிரத்யேகமாக கவனத்துடன் வெட்டப்பட்டதே வண்டியூர் தெப்பக்குளம். 1000 அடி நீளமும் 950 அடி அகலமும் கொண்டு சதுரமாக அமைக்கப்பட்டது இந்த தெப்பக்குளம். இதன் ஆழம் 29 அடியாகவும் நீர்க் கொள்ளளவு 115 கனஅடியாகவும் உள்ளது.
இந்த தெப்பக்குளத்தின் நடுவில் ஒரு மைய மண்டபம் உருவாக்கப்பட்டது. வெளியே பல்லவ கட்டிடக்கலை பாணியிலும் உள்மண்டபம் முகலாய கட்டிடக்கலை பாணியிலும் உருவாக்கப்பட்ட இந்த மைய மண்டப விமானத்தின் நிழல் நீரில் விழாது என்பது அதன் கட்டிடக்கலைக்கு இன்னுமொரு சான்று. இந்த தெப்பக்குளத்தில் நீர் நிரப்ப அருகிலிருக்கும் வைகை ஆற்றிலிருந்து இக்குளத்திற்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. பக்கத்திற்கு மூன்றாக 12 படித்துறைகளைக் கொண்டது வண்டியூர் தெப்பக்குளம்.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளில் தெப்பத்திருவிழா கொண்டாடப்படுகிறது. சிறப்பாக தெப்பக்குளத்தை வடிவமைத்த திருப்தி மன்னர் திருமலை நாயக்கருக்கு வரவே அவர் தனது பிறந்தநாளான தைப்பூச நாளில் இந்த தெப்பக்குளத்தை திறந்தார். மேலும் அந்நாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தெப்பக்குளத்தில் எழுந்தருளச் செய்து மகிழ்ந்தார். இன்றும் தைப்பூச நாளில் மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாளும் தெப்பத் திருவிழாவும் மதுரை மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

by Swathi   on 14 May 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மதுரையில் உள்ள கூடல் அழகர் கோயிலின் பெருமை மதுரையில் உள்ள கூடல் அழகர் கோயிலின் பெருமை
அனைவரும் சென்று பார்க்க வேண்டிய மதுரை காந்தி மியூசியம்-Gandhi museum அனைவரும் சென்று பார்க்க வேண்டிய மதுரை காந்தி மியூசியம்-Gandhi museum
மதுரையில் ஒரு அதிசயம் ஆயிரங்கால் மண்டபம் மதுரையில் ஒரு அதிசயம் ஆயிரங்கால் மண்டபம்
மதுரை திருமலை நாயக்கர் மஹால் சிறப்பு-thirumalai nayakar mahal மதுரை திருமலை நாயக்கர் மஹால் சிறப்பு-thirumalai nayakar mahal
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வரலாறு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வரலாறு
மதுரை அழகர் கோவில் வரலாறு மதுரை அழகர் கோவில் வரலாறு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு தகவல்கள்-meenakshiamman temple மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு தகவல்கள்-meenakshiamman temple
மதுரை மாவட்ட சுற்றுலா தளங்கள் மதுரை மாவட்ட சுற்றுலா தளங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.