|
|||||
சமூககொடுமைக்கு சாட்டையடி கொடுக்குமாம் - டூரிங்டாக்கிஸ் |
|||||
டூரிங்டாக்கிஸ் படத்தின் முதல் பாதி இடைவேளை வரை ஒரு கதை. 75 வயதான ஒருவரின் காதல் தேடுதல். அந்த கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்திருப்பது தெரிந்த விஷயம். இடைவேளைக்கு பிறகு வரும் படம் முதல் கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு அழுத்தமான கிராமத்து பெண்ணின் கதையாகும். இந்த கணமான கதாபாத்திரத்தில் கேரள நடிகை சுனுலட்சுமி வாழ்ந்திருக்கிறார். இந்தகதையில் சமூகத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இன்று நாட்டில் நடக்கும் வன்கொடுமைகளை அனைவரும் ஏற்று கொள்ளும் விதமாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்திருக்கிறார். இந்த இராண்டாவது கதைக்கு மட்டும் இசைஞானி இளையராஜா 10 நாட்கள் இசையமைத்திருக்கிறார். வசனமே இல்லாத பல காட்சிகளை உறுக்கமான பாடல்வரிகளால் பிண்ணனி இசை அமைத்திருக்கிறார். இரண்டு கதைகளிலும் மொத்தம் ஏழுபாடல்கள். இதில் இளையராஜா, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, கேரள இசையமைப்பாளர் ஷரத், நடிகர் விவேக், நடிகர் சத்யன் இவர்கள் பாடியிருப்பது சிறப்பு செய்தியாகும். படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத்தும், ரஜிஷும் செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு அரூண்பிரசாத். எந்த படத்தையும் குறுகிய காலத்தில் முடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன் இந்தபடத்தை இரண்டு ஆண்டுகளாக உழைத்துமிகுந்த பொருட் செலவில் எடுத்திருக்கிறார். ஒருபடத்தில் வேறுபட்ட இரண்டு கதைகள் என்பது ரசிகர்களுக்கு மட்டுமல்ல. தமிழ்திரையுலகிற்கும் ஒருபுதுமையான முயற்சியாகும். |
|||||
by Swathi on 15 Nov 2014 0 Comments | |||||
Tags: சமூக கொடுமை டூரிங் டாக்கிஸ் இளையராஜா விஜய் ஆன்டனி Vijay Antony Ilayaraja Touring Talkies | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|