LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- ஹிந்து பண்டிகைகள்

தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?

தீபாவளி என்பது, தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குவதே. இத்திருநாளில் நம்மிடம் உள்ள அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்றவற்றை தூக்கி எறிவதோடு மட்டுமல்லாது, ஒரு தீய குணத்தையாவது எரித்து விட வேண்டும்.


நாம் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது, நம்மிடம் உள்ள கேட்ட பழக்கங்களான புகைத்தல், பொய் சொல்லுதல், குடிப்பழக்கம் போன்றவற்றில் ஒன்றையாவது விட்டுவிட வேண்டும். பக்கத்து, எதிர்த்த வீட்டுகாரர்களிடம் சண்டை இருந்தால், அன்று ஒரு இனிப்பு கொடுத்து சமரசம் செய்து கொள்ள வேண்டும். நமது மனதில் உள்ள இருளை விளக்கி வெளிச்சம் கொண்டு வருவது தான் தீபாவளி. 


வீட்டில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, மனதை இருட்டாக வைத்துக்கொள்ள கூடாது. தீபாவளியில் வெடிவெடிப்பது போல் மனதில் உள்ள தீய எண்ணங்களை சிதறடித்து விட வேண்டும்.


இந்து சமயத்தினர் தீபாவளித் திருநாளன்று கீழ்க்காணும் மூன்று செயல்களைச் செய்திட வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகின்றனர்.

 

கங்கா குளியல் 


கங்கா குளியல் என்பது ஒரு மனைப்பலகையை எடுத்துச் சுத்தம் செய்து அதில் மாக்கோலமிட்டு, அதைக்கிழக்கு நோக்கி வைத்து, அதில் குடும்பத்தினரில் ஒவ்வொருவரா அமர வைத்து இந்தச் சடங்கை நடத்துவர். இதை நலுங்கு என்றும் சொல்வதுண்டு.


மஞ்சள், குங்குமம் சந்தனம் முதலியவற்றை குடும்பத்தினர் நெற்றியிலிட்டு பூக்களைத் தூவி நலுங்கிட்ட பின், இறைவனுக்குப் படைத்த நல்லெணெயை தலையில் தடவிக் குளிக்க வேண்டும். இந்து சமயக் குடும்பங்களில் நடத்தப் பெறும் இச்சடங்கில் குடும்பத்தின் வயது முதிர்ந்தவர் இந்தச் செயல்பாடுகளைச் செய்கின்றனர். நலுங்கைப் பெற்றுக் கொண்டவர் வயது முதிர்ந்தவரை வணங்கிய பின் குளிக்கச் செல்வர்.


தீபாவளி மருந்து


கங்கா குளியலுக்குப் பின்பு, எதையும் சாப்பிடுவதற்கு முன்பாகத் தீபாவளி மருந்தைச் சாப்பிட வேண்டும். தீபாவளியன்று இனிப்பு மற்றும் பிற உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதால் ஏற்படும் வயிற்று வலிகள் மற்றும் செரிமானமின்மை போன்றவைகளை இந்தத் தீபாவளி மருந்து அகற்றி விடும்.


இந்த மருந்தைத் தயாரிக்க சுக்கு, சீரகம், ஓமம், பூண்டு, பனங்கற்கண்டு, சிறிது நெய் போன்றவை தேவைப்படுகின்றன. சுக்கு, சீரகம். ஓமம், பூண்டு போன்றவற்றை நன்றாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் பனங்கற்கண்டு பொடித்துப் போட்டு மெதுவாகக் கிளற வேண்டும்.


அந்தக் கரைசல் சர்க்கரைப் பாகு போன்ற நிலைக்கு வந்ததும். அதில் இடித்து வைத்திருக்கும் சுக்கு, சீரகம், ஓமம் மற்றும் பூண்டுக் கலவையைப் போட்டு கிளற வேண்டும். கலவை இறுதி வந்ததும் அதில் சிறிது நெய் விட்டு இலேசாகக் கிளறி இறக்கி விட வேண்டும். இதுதான் தீபாவளி மருந்து இந்தத் தீபாவளி மருந்தை வீட்டிலிருக்கும் சுமங்கலிப் பெண்களில் பெரியவராக இருப்பவர் வீட்டிலிருக்கும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.


குபேர பூஜை 


குபேர பூஜையை தீபாவளியன்றோ அல்லது மறுநாளோ செய்யலாம். மகாலட்சுமியின் அருள் பெற்ற குபேரனை வணங்குவதால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது தொன்மநம்பிக்கை. இந்த குபேர பூசையச் செய்யும் போது மகாலட்சுமியைச் செந்தாமரை மலர்களாலும் குபேரனைப் பொற்காசுகள் அல்லது வெள்ளிக் காசுகளால் அர்ச்சித்து வணங்கிட வேண்டும்.

by Swathi   on 21 Oct 2014  0 Comments
Tags: Diwali Festival   தீபாவளி   கங்கா குளியல்   தீபாவளி மருந்து   குபேர பூஜை        
 தொடர்புடையவை-Related Articles
தீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில் தீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில்
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
தீப ஒளியால் விளைந்த நன்மை !! தீப ஒளியால் விளைந்த நன்மை !!
கத்திக்கு யு... பூஜைக்கு யு/ஏ....!! கத்திக்கு யு... பூஜைக்கு யு/ஏ....!!
வானிலே தீப ஒளி ..... வானிலே தீப ஒளி .....
பூலோகம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதாம் !! பூலோகம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதாம் !!
ரஜினி, விஜய், விஷால் படங்கள் வரும் தீபாவளிக்கு மோதல் !! ரஜினி, விஜய், விஷால் படங்கள் வரும் தீபாவளிக்கு மோதல் !!
திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி !! திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.