LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- குருப்பெயர்ச்சிப் பலன்கள்

2017-2018 மிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - கணித்தவர் : அபிராமி சேகர்

கல்விக் காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட புத்திகூர்மையுடைய, இரசிப்புத் தன்மையும், சகிப்புத் தன்மையும் மிக்க மிதுனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

தங்கள் இராசிக்கு இராசி மற்றும் சுக பாவத்துக்கு அதிபதியான குரு ஆவணி 27 இல் புத்திர, பூர்வ புண்ணிய பாவமான துலாத்துக்கு மாறுகிறார். தேவகுரு இதுநாள் வரை சுக பாவம் அமர்ந்து நிம்மதி, சுகத்தைக் கெடுத்தாலும் புத்திர பாவமேறி, வனவாசமாய் இருந்த வாழ்க்கையை தனவாசம் மிக்கதாக மாற்றி விடுவார். தெய்வீக அருளும், திருமகள் கடைக்கண் பார்வையும் ஏற்பட்டு நல்ல காலம் பிறக்கும். இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். செல்வம் சேரும். அழகும் பொலிவும் கூடும், வாக்குவன்மை அதிகரிக்கும். புத்தி தெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும் ஓங்கும். ஜனன ஜாதகப்படி யோகமான திசைகள் நடக்குமானால் வெற்றி மேல் வெற்றிகள் குவியும். வேலை இல்லாது இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நிச்சியம் கிடைக்கும். சிலருக்கு ஆண் சந்ததி ஏற்படலாம். பதவி, அந்தஸ்து உயரும். மனைவி மக்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். வீட்டில் மங்கள காரியங்கள் சிறப்புற நடக்க்கும். கால்நடைச் செல்வங்கள் பெருகும். அரசபதவி கிடைக்கும். முதிப்பும் மரியாதையும் கூடும். தொழில், வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏற்றமான காலமாதலால், நல்ல முன்னேற்றங்களைக் காண்பீர்கள். மாணக்கர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சேவை மனப்பான்மையுடன் இருப்பவர்களுக்கு வம்மு வழக்குகள் குறையும். இந்த சாதகமான காலகட்டத்தை நன்றாக பயன்படுத்தி எதிர்காலத்துக்கான திட்டங்களை தீட்டுபவர்களே புத்திசாலிகள். அதேபோல், உத்தியோகம், தொழில் துறையில் உள்ளவர்களும் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது நல்லது. கல்விச் சாலைகள் வைத்திருப்பவர்கள் மற்றும் ஆன்மீக, பொதுச் சேவை ஸ்தாபனங்கள் வைத்து நடத்திவருபவர்கள் மிகப் பெரிய வளர்ச்சிகளைக் காண்பர். எதிர்ப்புகள் குறைந்து, வழக்கு விவகாரங்களில் நீங்கள் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் உயர்ந்து முதல் தரமான மதிப்பெண்களைப் பெறுவர். பெண்களுக்குப் பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள், பதவி உயர்வுகள் ஆகியவை கிடைக்கலாம்.

குரு தனது 5 ஆம் பார்வையால் பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைத்து, அதற்கேற்ப மதிப்பு மரியாதைகள் கூடும். தந்தையின் ஆதரவு கிடைப்பதோடு, அவர் மூலமாகப் பொருளாதார நிலையும் உயரும். தொழிலில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வகையில் பொருளாதார விரயங்கள் ஏற்படலாம். தாயாருக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடுகள் ஏற்படலாம். உயர் படிப்புகள் படிப்பவர்களுக்கு வெற்றிகள் குவியும். வரவுக்கு ஏற்ப செலவுகள் அமையும். பிறர் மூலமான வருமானங்கள், காப்பீடு, சேமிப்பு நிறுவனங்கள் மூலமாக வருமானங்களை எதிர்பார்க்கலாம்.

குரு தனது 7 ஆம் பார்வையால் இலாப பாவத்தைப் பார்வை செய்வதால் தொழிலில் தங்கள் எதிர்பார்பை விட அதிகமான இலாபங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மனைவி மக்களுடன் மகிழ்ச்சியான விதத்தில் காலம் கழியும். அரசு மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். அரசு மூலமான பணிகள் செய்பவர்களுக்கு ஆதாயங்கள் பெருகும். மூத்த சகோதரரின் பொருளாதாரம் மற்றும் பொது முன்னேற்றங்கள் சிறப்படையும். குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரம் தொடர்பான வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

குரு தனது 9 ஆம் பார்வையாக ஜன்ம இராசியை பார்வையிடுவதின் மூலம் சமூகத்தில் தங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தேவையட்ட அலைச்சல்கள் தீரும். கருத்து வேற்றுமைகள் மறைந்து பரஸ்பர ஒற்றுமை ஓங்கி, தம்பதியர் இடையே மகிழ்ச்சி நிலவும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தாமதம் இன்றி கிடைக்கும். சமுதாய நற்பணிகள், ஜனசேவை செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். தர்ம ஸ்தாபனங்கள், கோவில் டிரஸ்டிகள் ஆகியோருக்கு தலைப் பதவிகள் தானே வந்து சேரும். பரம்பரைத் தொழில்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இலாபங்கள் அதிகரிக்கும்.

மிதுன இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக நான்காம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான்ன உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.

உத்யோகஸ்தர்கள் (JOB)

புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லையென்றாலும் கிடைத்த வேலையை ஏற்றுக் கொள்ளல் வேண்டும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் ஊர்மாற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு. 3ல் சனி சஞ்சாரம் செய்வதால் உங்களைப்பற்றிய தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவர்.. உழைப்பில் ஆர்வம் கூடும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும். சக பணியாளர்களால் நன்மையேற்படும்.

தொழில் (BUSINESS), வியாபாரம் (TRADE)

சிறுதொழில் சுயதொழில் புரிபவர்கள் பெரிய அளவில் முதலீடு இல்லாமல் தொழில் செய்தல் வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி சாதகமாக இராது. உற்பத்தி, சேவை, போக்குவரத்து, தபால், தந்தி, பத்திரிக்கை, விளம்பரம் ஏற்றமாக இருக்கும். இரும்பு எஃகு சிமெண்ட், இரசாயனம், கனிமம், தாதுப் பொருட்கள் ஓரளவு லாபகரமாக அமையும். பங்குச்சந்தை சற்று லாபகரமாக இருக்கும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ், காவல் ஆசிரியர் துறைகள் ஏற்றமுடன் இருக்கும். தெருவோர வியாபாரிகள், சிறு தொழில் புரிபவர்கள் லாபம் அடைவர். அழகு சாதனப்பொருட்கள், பிளாஸ்டிக், கப்பல், ஆடை, ஆபரணத் தொழில் சிறந்து விளங்கும். தொழிலில் புதிய கூட்டாளிகளை சேர்ப்பதில் அதிக கவனம் தேவை. பங்குச் சந்தை ஆரம்பத்தில் தொய்வானாலும் ஜனவரிக்குப் பின் ஏற்றம் காணும்.

விவசாயிகள்

மகசூல் சற்று சுமாராக இருந்தாலும் எதிர்பார்த்த விலை கிடைக்க வாய்ப்பு அமையும். புது நிலம், தோட்டம், மனை வாங்க சந்தர்ப்பம் அமையும். வீட்டு வளர்ப்புப் பிராணிகளால் நன்மையேற்படும். விவசாயக் கடன் பயிர்க்கடன் நன்கு கிடைக்க வாய்ப்பு அமையும்.

அரசியல்வாதிகள்

அரசியல் ஏற்றம் தருவதாக இருக்கும். புதுப்பதவிகள் தேடி வரும். தொண்டர்கள் உண்மையாகவும் விசுவாசமாகவும் நடந்து கொள்வர். எதிரிகளால் பழிவாங்கும் போக்கு காணப்படும். மக்கள் ஆதரவு இருந்தாலும் வழக்குகள் இருப்பின் அதனால் மனவேதனைகளும் தேவையற்ற குழப்பமும் காணப்படும்

கலைஞர்கள்

கலைத்துறையில் புதிய ஒப்பந்தள் நடக்கும். அதனால் வருமானம் ஆதரிக்கும். விளம்பரங்கள் மூலம் நன்மை கிட்டும். புதிய முயற்சிகளால் நற்பலன்கள் கூடும். சினிமா, இசை, நடனம், நாட்டியம், டி.வி. துறை சற்று லாபகரமாக அமையும். ஒரு சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும்.

மாணவர்கள்

போட்டித் தேர்வுகள் மூலம் வேலை கிடைக்க வாய்ப்புண்டு. கல்விக்கடன் கிடைக்கும் உயர்கல்வி பயில ஒரு சிலர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் வாய்க்கும். விளையாட்டில் ஆர்வம் கூடும். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது. எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் போராட வேண்டி வரும்.

பெண்கள்

அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். பெண் வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளால் மனவருத்தங்கள் ஏற்படும். தள்ளிப்போன திருமணம் ஒரு சிலருக்கு நடக்க வாய்ப்பு அமையும். பிரிந்த கனவன் மனைவி ஒன்று சேர்வர். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பும் ஒரு சிலருக்கு வேலையில் உயர்வும் கிட்டும். உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. உறவினர்களிடத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வைத்தல் கூடாது. புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை அமையும். சக ஊழியர்களால் தேவையற்ற குழப்பங்களும் மன வேதனைகளும் அமையும். குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை அமையும். வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பும் ஒரு சிலருக்கு விசா வர வாய்ப்பும் அமையும்.

உடல் ஆரோக்யம்

போக்குவரத்து வண்டி வாகனங்களில் கவனம் தேவை. அடிவயிறு, ஜீரண உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். அறுவை சிகிச்சைக்கான காலமிது. உடலில் சளித்தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளல் நலம்.

மிதுனம்
- உலோக மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (5) 90%

by Swathi   on 10 Aug 2017  0 Comments
Tags: Mithuna rasi palangal   Mithuna Rasi Guru Peyarchi Palangal   2017 Guru Peyarchi Palangal   2018 Guru Peyarchi Palangal   Mithuna rasi Palangal   Mithuna rasi Tamil Palangal   மிதுன ராசி பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
2017-2018 மீனம் ராசி(Meenam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 மீனம் ராசி(Meenam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 கும்பம் ராசி(Kumbam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 கும்பம் ராசி(Kumbam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 மகரம் ராசி(Magaram Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 மகரம் ராசி(Magaram Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 தனுசு ராசி(Dhanusu Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 தனுசு ராசி(Dhanusu Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 விருச்சிகம் ராசி(Viruchigam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 விருச்சிகம் ராசி(Viruchigam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 துலாம் ராசி(Thulam Rasi)  குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 துலாம் ராசி(Thulam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 கடக ராசி  குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 கடக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 மிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - கணித்தவர் : அபிராமி சேகர் 2017-2018 மிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - கணித்தவர் : அபிராமி சேகர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.