LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

தமிழறிஞர் ஜோர்ஜ் எல்.ஹார்ட் (George L. Hart)

தமிழர்களால் அறிந்து கொள்ளப்பட வேண்டியவர்

ஜோர்ஜ் எல்.ஹார்ட் (George L. Hart)

  • தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பற்றி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியவர். பிறப்பால் ஒரு அமெரிக்கர்..2004இல் இந்தியாவின் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டவர..
  • ஜோர்ஜ் எல்.ஹார்ட் கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் (பேர்க்லி) தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பெர்க்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை ஆரம்பிக்கப்பட்டதற்கும் இவரே மூல காரணர் ஆவார். தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலகத்துக்கு உணர்த்தியவர்களில் இவர் முக்கியமானவர். இவருடைய கடும் முயற்சியினால் செப்டம்பர் 2004 இல் இருந்து தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.
  • இவரது துணைவியரான கௌசல்யா ஹார்ட் மதுரையில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவர்.
  • ஹார்ட் சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டத்தை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். அத்துடன் விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராக பணியாற்றினார். இவருக்கு இலத்தீன், கிரேக்கம், ருஷ்யன், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற பல மொழிகளிலும் தேர்ச்சி உண்டு.
  • ஹார்ட் பல பழந்தமிழ் நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். இவர் மொழிபெயர்த்த The Poems of The Tamil Anthologies (1979) எனும் நூல் The American Book Award க்கு பரிந்துரை செய்யப்பட்டது. The Four Hundred Songs of War and Wisdom (1999) எனும் புறநானூறு மொழிபெயர்ப்பு தென்னாசிய மையம் ஏ.கே.ராமானுஜன் பரிசைப் பெற்றது. கனேடிய இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசிய மையமும் இணைந்து வழங்கும் இயல் விருதினை 2005 ஆம் ஆண்டிற்கு பெற்றுள்ளார்.
  • இவரது முக்கிய நூல்கள்.
  • The Poems of Ancient Tamil, Their Milieu and Their Sanskrit Counterparts, University of California Press, 1975. ISBN 0-520-02672-1.
  • The Relation between Tamil and Classical Sanskrit Literature, Wiesbaden: Otto Harrassowitz, 1976. ISBN 3-447-01785-6.
  • Poets of the Tamil Anthologies: Ancient Poems of Love and War, Princeton University Press, 1979. ISBN 0-691-06406-7.
  • A Rapid Sanskrit Method, Motilal Banarsidass, 1984. ISBN 81-208-0199-7.
  • The Forest Book of the Rāmāyaṇa of Kampan̲, (with Hank Heifetz), University of California Press, 1989. ISBN 0-520-06088-1.
  • The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru. (with Hank Heifetz), Columbia University Press, 1999. ISBN 0-231-11563-6.

“மொழியின் மீதிருக்கும் நம்பிக்கையின் பிரச்சினை.” -- காஃப்கா

by Swathi   on 13 Feb 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.