LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- லா.ச.ராமாமிருதம்

அபிதா

 

“மாமீ! மாமாவை எண்ணெய் தேய்ச்சுக்கச் சொல்லுங்கோ! வந்த அன்னிக்கே நான் சொல்லியி ருக்கணும். ஆனால் அப்போ எண்ணெய்ச் சட்டி காலி. ‘கப்சிப்’புனு இருந்துட்டேன். என்ன சொல்றேள், பழக்கமில்லையா? நன்னாச் சொன்னேள் போங்கோ! இந்தக் கந்தக பூமியிலே எண்ணெய் முறை தப்பிப் போச்சுன்னா, நடந்துண்டு இருக்கறத்துலேயே சொக்கப்பானையா எரிஞ்சி போயிடுவோம். வரட்டியே வேண்டாம். நாமா ஏன் பஸ்மாசூரம் பண்ணிக்கணும்? அவரையே மாமா தலையிலே ஒருகை வெக்கச் சொல்றேன். மிளகாய்ப்பழம், இஞ்சி, புழுங்கலரிசி எல்லாம் போட்டுக் காய்ச்சி வெச்சிருக்கேன். உடம்புக்கு ஒண்ணும் பண்ணாது. இஞ்சியைக் கடிச்சுத் தின்னச் சொல்லுங்கோ. கரகரன்னு பிஸ்கோத்து தோத்துடும். அத்தனையும் சத்து. எங்கே போயிட்டார் எங்காத்துப் பிராம்மணன்? சமயத்தில் காணாமல் போறதில் வரப்ரசாதி !”
கடைசி வார்த்தைகள் திடீரென கர்ஜனையில் உயர்ந்தன.
ஆனால் குருக்களை எங்கேயும் போய்விட வில்லை. கையில் எண்ணெய்க் கிண்ணத்துடன் திடீரெனச் சுவர் மூலையிலிருந்து முளைக்கிறார். மறுகையில், திடீரென எங்கிருந்தோ, செப்பிடு வித்தைபோல் ஒரு மணை தோன்றிற்று. குட்டி மணை.
என் தோளை மெதுவாய் அழுத்தி, மணைமேல் என்னை அமர்த்தி, தலையில் எண்ணெயும் வைத்தாகிவிட்டது. எல்லாம் அரை நிமிஷம்.
உடனே ‘பரபர’ தேய்ப்பில் மண்டை ‘கிர்ர்ர்’- தலை வயிற்றுள் போய்விட்டது . மண்டையுள் மத்துக் கடைந்தது.
கரடி மலையை விட்டபின் எண்ணெய் மறுபடியும் இப்போத்தான்.
கடியார முள்ளை இப்படியும் திரும்ப முடியுமோ?
எண்ணெய் ஸ்னானம் இந்தப் பக்கத்து விருந்தோம்பலின் இன்றியமையாத சடங்கு.
இத்தனை வருடங்களுக்குப் பின் இப்போது தேய்த்துக் கொள்வதால் எனக்கு என்னவா னாலும் இதைத் தப்ப முடியாது.
அதிதி வாசற்படி யேறி, திண்ணையில் உட்கார்ந்ததும், வீட்டுக்காரி ஏந்திவந்த தம்ளர் தண்ணீரை, உப்போ தித்திப்போ, தேவையோ இல்லையோ குடித்தாக வேண்டும். பிறகுதான் கால் அலம்பவே உள்ள அனுமதி. பிறகு நாகரிகத்தின் அறிகுறி காப்பி என்ற பேரில் காவித் தண்ணீரின் குமட்டல் அடங்கின தோயில்லையோ, ”வாடாப்பா எண்ணெய் தேய்ச்சுக்கோ”
- ஐயையோ என்ன நடக்கிறது?
- கண்ணில் ஒரு கரண்டி எண்ணெய். விழிகளில் திடீரென வைத்த நெருப்பில் உடலே நெளிகிறது.
”உஸ் அப்பப்பா ”
தொண்டையில் எச்சில் கொழு கொழுத்துக் கடைகிறது. விழியுள் என்னைச் சூழ்ந்து கொண்ட மதுரை எரிப்பில் எங்கிருந்தோ ஒரு குரல் – குருக்கள் அல்ல; வந்த அன்று பேசினபின் அந்த மனிதன் வாய் அநேகமாய்ப் பூட்டுதான் – ஒரு குரல், மந்திர உச்சாடனம் போல்:
”நாள் கழிச்சுத் தேய்ச்சுண்டாலே இப்படித் தான். கண்ணிலிருந்து ரெண்டு சொட்டு ஜலம் கழண்டால் சரியாப் போயிடும். மாமாவைக் கையைப் பிடிச்சு அழைச்சுண்டு போங்கோ. அபிதாவை வென்னீரை விளாவச் சொல்லியிருக் கேன். நான் கடைவரைக்கும் போய் வரேன். கண்டந் திப்பிலி வாங்க!”
பேசிக் கொண்டே குரல் தூரத்தில் ஓய்ந்தது.
என்னை ஒருகை பிடித்தது. மெதுவாய்த்தான். என்னுள் சினம் மூண்டது. என்னைப் பிடித்த கையை வெடுக்கென உதறினேன். உதறின கை என்னைத் திரும்பவும் பிடிக்க முன்வரவில்லை. ஐயோ, விழிவயண்டு விடும் போல் வதைக்கிறதே! கண்ணைக் கசக்கிய வண்ணம், நடுக்கூடத்தில், நடுக்காட்டில் நிற்கிறேன்.
என் பக்கத்தில் ஒரு சிரிப்பு. விழித்துப் பார்க்கிறேன். நல்ல கண்களே நெற்றிக் கண்களாகிவிட்டன.
என் அவஸ்தை சாவித்திரிக்கு நகைப்பு. நகைக்க இப்போ அவள் முறை.
சிந்திய கெளரவத்தைத் திரட்டி, நிமிர்ந்த முதுகில் சுமந்து கொண்டு, கொல்லைப்புறம் செல்கிறேன். விழி தெறிக்கிறது. தலை சுற்றுகிறது. காலடியில் ஏதோ தடுக்…
”ஐயோ!”
அபிதா அலறினாள்.
ஒரு கை
என்னைப் பிடித்துக் கொண்டது
உதறினேன்.
ஆனால் இந்த சமயம் குருக்கள் என்னை விடுவதாயில்லை. என் கூச்சம், கோபம் அவருக்குச் சட்டையில்லை. என்னை அழுத்திப் பிடித்துக் கொண்டு, முதுகில் சீய்க்காய்க் குழைவைப் பூசித் தேய்க்கிறார்.
முதுகுத் தேய்ப்போடுதான் எண்ணெய்ச் சடங்கு பூர்த்தி.
சுறீல் -
ஸன்னமானதோர் வெம்மை, பிடரியில் கண்டு, வேர் பிரிந்து, ஆணி வேர் நடுமுதுகில் இறங்குகிறது.
மண்டையும் நினைவும் அமிழ்ந்து கிடக்கும் அரைமயக்கத்தில், விழிகள் எண்ணெய்க் கரிப்பின் முழுக்குருடில், சூடு என்று தவிர, சட்டென அடையாளம், உணர்வில் உடனே கூடவில்லை.
கட்டிய விரல் நுனியில் ஈர்ப்பில் புருவ நடுவைத் துருவும் வேதனை போல் உடல் பூரா, காலிலிருந்து தலைநோக்கி ஒரு காந்தம் ஊடுருவிக் கடுத்தது.
மொண்டு மொண்டு, தலையிலும் தோளிலும் மாறி மாறிக் கொட்டிக் கொள்கிறேன். ஆனால் பிடரிமேல் நூல் பிடித்து விழுந்து கொண்டி ருக்கும் இந்த கிண்டிநீரின் நெருப்பு, தந்தியறவில்லை. நேரே முதுகுத் தண்டிலி ருந்து நரம்பு தானே கண்டுமீட்டும் இந்த இன்பமும் துன்பமும் ஒரே பங்கில் கலந்த இந்தத் தவிப்புக்கு ஈடு, பூமியைப் பிளந்து கொண்டு புறப்படும் முளையைச் சொல்வேனா?
கோத்துவாங்க மறந்து, உள்ளுக்கிழுத்த மூச்சு உள்ளுக்கே இன்னும் இன்னும் இன்னும் – ஐயையோ ! – இன்னும் இழுத்துக் கொண்டே போகும் இரக்கமற்ற தன்மையில், இந்த அபிஷேக தீர்த்தம், ஒரே சூட்டுச்சரடி, சதையுள் இறங்கி, அங்கங்கே ஏதோதோ மந்திரங்கள் புரிகின்றது. நாளடைவில், என் மூதாதையர் நாளிலிருந்தே, பரம்பரையாய் ஓய்ந்துபோன யந்திரங்கள், ஏதேதோ சக்கரங்கள், தம்தம் முதல் சுற்றில், ரத்தத்தில் அசைய ஆரம்பிக்கின்றன.
இதென்ன, ப்ரக்ஞையுடன் புது பிறவியின் பயங்கரம், ஆச்சர்யம், தோலுரிப்பு, அழல் நடுவில் ஸ்புடம், தபோக்னியின் கானல் நடுக்கம், கண்ணிருட்டு, விடியிருள், பிறந்த மனதோடு பிறந்த மேனியின் விடுதலை, காலமாய் உடலின் சருமத்வாரங்களை, நெஞ்சின் சல்லடைக் கண்களை அடைத்து கொண்டிருந்த அழுக்குகளின் எரிப்பில், பழைய வேகத்தை மீண்டும் பெற்ற புத்துணர்வில், ஜீவநதியின் மறுஓட்டம், ஆதார ஸ்ருதியின் தைரியமான, கம்பீரமான மீட்டலின் சுடர் தெ ரிக்கும் சொடசொடப்பு, காண்டீபத்தின் டங்காரத்தில் உடல்பூரா, உணர்வுபூரா, மனம்பூரா ஜல் ஜல் ஜல் சிலம்பொலி!
கண்ணைக் கசக்கி இமை சிமிழ்
திறந்ததும்
கண் கரிப்புடன் திரையும் கழன்று விழுந்து
சித்திரத்துக்குக் கண் திறந்த
விழிப்பு.
என்னைச் சூழ்ந்து கக்கும் வென்னீரின் ஆவியினின்று என் புதுத் துல்லியத்தில் புறப்படுகிறேன்.
உலையிலிருந்து விக்ரகம்.
வென்னீரின் ஆவி கலைகையில், புலனுக்கப் பிதுங்குவது, பளிங்கிலடித்தாற்போன்று, நெருக்கமாய் நின்ற இரு பாதங்கள், அங்கிருந்து முழங்காலை நோக்கி விழியேறுகையில், பிடிப்பான கண்ட சதையின் வெண்சந்தனப் பளிச்சில், பச்சை நரம்பின் ஓட்டம் கொடி பிரிகிறது.
அம்பா!
உன் பாத கமலங்கள்
எனக்கு மட்டும் தரிசனமா?
அப்படியானால் நீ உண்டா?
உன் பாதங்கள் தந்த தைரியத்தில்
உன் முகம் நோக்கி என் பார்வை எழுகின்றது.
ஓ, உன்முகம் அபிதாவா?
உடல் பூரா, மனம் பூரா திறந்த சிலம்பொலி, உலகத்தின் ஆதிமகளின் சிரிப்பா?
அபிதா, இப்போது என் பார்வையில், நீ உலகத்தின் ஆதிமகளாயின், நீ நீராட்டுவித்த ஞானஸ்னானத்தில் நான் ஆதிமகன்.
எனக்குத் தோன்றுகிறது; யாருக்குமே, ஏதோ ஒரு சமயம், இதுபோல் தரிசனம் நேரத்தான் நேர்கின்றது. மடிப்பு விரித்தாற்போல், இதயம் திடிரென அகன்று அதனுள் எரியும் விளக்கு தெரிகிறது. ”நான்தான் உன் பிறவியில் முழு ஒளி.
உன் அவதார நிமித்தம்
உயிரி��
�் கவிதாமணி
நீ அறியாது, தொண்டையில் மாட்டிக்
கொண்டிருக்கும்
உன் கனவின் தூண்டில் முள்
தொன்றுதொட்டு உலகின் ஆதிமகன்,
ஆதி மகளுக்கும்
உனக்கும் இன்றுவரை வழி வழி வந்த
சொந்தம்.
வேஷங்கள் இன்று விழுந்ததும்
அன்றிலிருந்து இன்று வரை
மாறாத மிச்சம்
உனக்கு உன் அடையாளம்.”
இந்த உலகம் தானாகவே வந்து தோளைத் தொடுகையில், அதன் மோனச் சேதியை, அறிந்தோ அறியாமலோ வாங்கிகொள்ள, அந்த மோதலின் வேளையில், பாத்திரம் காத்திருக்கும். பக்குவத்துக்கேற்ப, ஒன்று – தன் மயமாகிக் கொண்டு விடுகிறது. அல்லது சதைத் தடுமனில் தெறித்து விழுந்த குண்டுபோல், மஹிமை நீர்த்து மங்கிவிடுகிறது.
என் பிறவியே என் பாக்யம். பிறவிக்குப் பிறவி பாக்யத்தின் பெருக்கு என என் மறுமலர்ச்சியில் நான் அறிந்த பிறவியின் நான் அறிந்த பின் பிறவியின் ஒவ்வொரு தருணமும் உயிரின் கவிதாமணியாகக் கண்டு கோத்த மாலையை ஆதிமகளின் பாதத்தில் காணிக்கையாகச் சேர்ப்பேனா? அல்ல அவள் கழுத்தில் மாலையாகப் பூட்டுவேனா?
இது, இதுபோல இதுவரை காத்திருக்கும் நான் அடையாளங் கண்டு கொள்ளாததால் என்னைக் கடத் போன தருணங்களின் வீணை நான் உணர்ந்து, வருந்தி, என் இழப்புக்கு உருகி, இனிமேலும் ஏமாறாது காணத் தவிக்கம் ஏக்கத்திற்கேறப் நான் பெறும் உக்ரத்தைப் பொறுத்தது.
சகுந்தலை!
அபிதா!
தரிசினி!
கரடிமலைச் சாரலில் பல்லக்குத் திரை விலக்கி எனக்குக் கண் காட்டிய ராஜகுமாரி!
ஹிமாவான் புத்ரி ஹைமவதி!
உங்கள் அத்தனை பேரின் பூர்வமுகியை இப்போது நான் பெற்ற உக்ரமுகத்தில் அபிதாவில் அடையாளம் கண்டு கொண்டபின், நீங்கள் அனைவரும் நான் கண்டமுகத்தின் நாமார்ச்சனையாகத்தான் தெரிகிறீர்கள். இந்த சமயம், அபிதா, நீ கூட எனக்கு அவசியம் தானோ?
ஆனால் இது என் விசுவ ரூபத்தின் வியப்பு. இப்போது நீயும் எனக்கு ஜக்யமாதலால் உன்னை என்னிலிருந்து தனியாய்ப் பிரித்துப் பார்க்க இந்த வேளையில் வழியில்லை. ஆனால் வியப்புத்தான். சந்தேகமில்லை நீயலாது விழிப்பு ஏது? அபிதா, நீ என் காயகல்பம்.
காயத்ரீ
திடீரெனப் புதுவிதமாய் எனக்குக் கண்கள் திறந்தாற் போலிருந்தது. விழிமேல் படர்ந்த மெல்லிய சதையைப் பிய்த்தெறிந்தாற்போல். இமையோரங்கள் உட்புறம் அவ்வளவு வலித்தன. தலையை உதறிக்கொண்டேன். ‘விர்’ரென மாலைக் காற்று விழியோரங்களின் உள்பாய்ந்து கண்கள் திடீரெனச் சில்லிட்டன.
கதிர்கள் காற்றில் அலைந்தன. தென்றலின் ஒவ்வொரு மோதலிலும் அவை நீண்ட பெருமூச்செறிந்தன. அவை ஏதோ எனக்கோ தமக்கோ சொல்ல முயன்றன. புரியாதவொரு இன்பக்கிலேசம் என் மார்புள் அமிழ ஆரம்பித்தது. பெருமூச்சுடன் புத்தகத்தைக் கீழே வைத்தேன். ஏடுகள் படபடவென அடித்துக் கொண்டன. அவையும் ஏதோ சொல்ல முயன்றன.
அதே வயல்கள் தாம். அதே பச்சைக் கதிர்கள்தாம். அதோ தூரத்தில் ஏற்றத்தை இறக்கிக் கட்டிய உறை கிணறுதான் இப்பவும். ஒருவரும் அதைத் தூக்கிக் கொண்டு போய்விடவில்லை. ஆனால் எல்லாமே ஏதோ முறையில் மாறியிருந்தன. திடீரென ஏதோ ஒரு மந்திக்கோல் பட்டு, உயிர்பெற்று மூச்சுவிட ஆரம்பித்துவிட்டன.
இருந்தாற்போல் இருந்து கதிர்களின் பச்சைகளினிடையில் வெள்ளை அசைவுகள் ஒருமித்து ஒன்றே ஆகி அவ்வுயிரின் உருதன்னிரு பக்கங்களிலும் இரு வளைவுகளைக் கற்பித்து விரித்துக் கொண்டு கிளம்புகையில், ஒரு பட்சியின் வடிவமாய அந்தரத்தில் பிதுங்கியது. கீழே உதைத்துக்கொண்டு அது அப்படிக் கிளம்பிய வேகமும் அழகும் என்னுடல் புல்லரித்தது. அதை எதிர்த்துக் கொண்டு என் நெஞ்சம் நெஞ்சுக்குழிவரை எழும்பித் ‘தடால்’ எனத் தன்னிடத்தில் வீழ்ந்தது.
ஏதோ இவ்வுலகத்தையே, கோளத்தையே கழற்றி எறிவதுபோல் ஒரே வளைவில் அது எழுப்பிய வேகத்தில், ந�
��ல மெத்தையுல் வைர நகை உருண்டாற்போல், அதன் வெண்மை வானில் ஜவலித்தது. நான் பரவசமானேன். என் கைகள் என்னையறியாமல் வானை ஆலிங்கனம் செய்ய விரிந்தன.
”என்ன செய்யப் பாக்கறேள்?”
நக்ஷத்ரங்கள் சொரிந்தாற் போன்ற சிரிப்பு. திரும்பினேன். இரு தோள்களிலும் இரண்டு பின்னல்களைத் தொங்கவிட்டுக் கொண்டு யோக வேஷ்டிமாதிரி ஒரு பையை மாட்டிக் கொண்டு ஒரு பெண நின்று கொண்டிருந்தாள். அவள் சிரிப்பில் அவள் மூக்குத்தண்டு புருவமத்தியில் சுருங்கிற்று. அவளை யாரென்று நான் அறியேன். என் உடலின் பரபரப்பில் எனக்கு – அப்பறவையின் லாவகம் தவிர வேறெதும் புரியவில்லை.
”பார் பார், அதோ பார், வானத்தில் வைரப்பிடி போட்ட கத்தி மின்னுகிறது பார்!”
ஒரு கையைப் பருவங்களுக்கு மேல் நிழலுக்கு வைத்துக்கொண்டு அவள் அண்ணாந்து நோக்கினாள். மொக்கவிழ்ந்தாற்போல் அவள் வாய் சற்றுத் திறந்தது.
ஆனால், நாங்கள் அதைக் கண்டு அதிசயித்துக் கொண்டிருக்கையிலேயே திடீரென அது கதிகலைந்து நிலை தவறியது. அதன் இறக்கைகள் செயலிழந்தன. சட்டெனப்பூட்டு விட்டுத் தளர்ந்தன. அப்படியே கர்ணம் அடித்துக் கொண்டே வெகு வேகமாய்க் கீழிறங்கி, மொத்தாகாரமாய்ப் ‘பொத்’தென என் மடியில் வீழ்ந்தது.
நான் ‘ஓ’வென அலறினேன். என் கைகள் வெட வெடத்தன. என் விரல்கள் தற்செயலாய் அதன் மார்பில் சற்று அழுந்தின. அவ்விதயத்தின் கடைசித் துடிப்பு அப்பொத்தான் அந்த உடலை விட்டுப் பிரிந்துகொண்டிருந்தது. பிராணனின் கடைசிபிரயத்தனத்தில் அதன் பார்வை என்மேல் நிலைக்க முயன்றது. அக்கண்களில் தவித்த ஆச்சரியத்தையும், சோகத்தையும் வலியையும் நான் மறக்கவே முடியாது. அதன் உடல் ஒரு குலுங்கு குலுங்கிப் புரண்டது. கட்டையாகி விட்டது. உடையும் தேங்காயில் திடீரென உதயமாகும் அவ்வளவு தூயவெண்மை. அதன் துடிப்பிழந்த அந்த வெண்மையை வெறிச்சென்று என் மடியில் நான் உணர்ந்ததும் ஒரு பெருங்கேவல், பட்டையை உரிப்பது போல், என்னை ஊடுருவிற்று, அந்த உடலை அப்படியே என் மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டேன். அதன் உடல் மெத்தென என் மார்பில் அழுந்திற்று.

    “மாமீ! மாமாவை எண்ணெய் தேய்ச்சுக்கச் சொல்லுங்கோ! வந்த அன்னிக்கே நான் சொல்லியி ருக்கணும். ஆனால் அப்போ எண்ணெய்ச் சட்டி காலி. ‘கப்சிப்’புனு இருந்துட்டேன். என்ன சொல்றேள், பழக்கமில்லையா? நன்னாச் சொன்னேள் போங்கோ! இந்தக் கந்தக பூமியிலே எண்ணெய் முறை தப்பிப் போச்சுன்னா, நடந்துண்டு இருக்கறத்துலேயே சொக்கப்பானையா எரிஞ்சி போயிடுவோம். வரட்டியே வேண்டாம். நாமா ஏன் பஸ்மாசூரம் பண்ணிக்கணும்? அவரையே மாமா தலையிலே ஒருகை வெக்கச் சொல்றேன். மிளகாய்ப்பழம், இஞ்சி, புழுங்கலரிசி எல்லாம் போட்டுக் காய்ச்சி வெச்சிருக்கேன். உடம்புக்கு ஒண்ணும் பண்ணாது. இஞ்சியைக் கடிச்சுத் தின்னச் சொல்லுங்கோ. கரகரன்னு பிஸ்கோத்து தோத்துடும். அத்தனையும் சத்து.

 

     எங்கே போயிட்டார் எங்காத்துப் பிராம்மணன்? சமயத்தில் காணாமல் போறதில் வரப்ரசாதி !”கடைசி வார்த்தைகள் திடீரென கர்ஜனையில் உயர்ந்தன.ஆனால் குருக்களை எங்கேயும் போய்விட வில்லை. கையில் எண்ணெய்க் கிண்ணத்துடன் திடீரெனச் சுவர் மூலையிலிருந்து முளைக்கிறார். மறுகையில், திடீரென எங்கிருந்தோ, செப்பிடு வித்தைபோல் ஒரு மணை தோன்றிற்று. குட்டி மணை.என் தோளை மெதுவாய் அழுத்தி, மணைமேல் என்னை அமர்த்தி, தலையில் எண்ணெயும் வைத்தாகிவிட்டது. எல்லாம் அரை நிமிஷம்.உடனே ‘பரபர’ தேய்ப்பில் மண்டை ‘கிர்ர்ர்’- தலை வயிற்றுள் போய்விட்டது . மண்டையுள் மத்துக் கடைந்தது.கரடி மலையை விட்டபின் எண்ணெய் மறுபடியும் இப்போத்தான்.கடியார முள்ளை இப்படியும் திரும்ப முடியுமோ?எண்ணெய் ஸ்னானம் இந்தப் பக்கத்து விருந்தோம்பலின் இன்றியமையாத சடங்கு.இத்தனை வருடங்களுக்குப் பின் இப்போது தேய்த்துக் கொள்வதால் எனக்கு என்னவா னாலும் இதைத் தப்ப முடியாது.

 

    அதிதி வாசற்படி யேறி, திண்ணையில் உட்கார்ந்ததும், வீட்டுக்காரி ஏந்திவந்த தம்ளர் தண்ணீரை, உப்போ தித்திப்போ, தேவையோ இல்லையோ குடித்தாக வேண்டும். பிறகுதான் கால் அலம்பவே உள்ள அனுமதி. பிறகு நாகரிகத்தின் அறிகுறி காப்பி என்ற பேரில் காவித் தண்ணீரின் குமட்டல் அடங்கின தோயில்லையோ, ”வாடாப்பா எண்ணெய் தேய்ச்சுக்கோ”- ஐயையோ என்ன நடக்கிறது?- கண்ணில் ஒரு கரண்டி எண்ணெய். விழிகளில் திடீரென வைத்த நெருப்பில் உடலே நெளிகிறது.”உஸ் அப்பப்பா ”தொண்டையில் எச்சில் கொழு கொழுத்துக் கடைகிறது. விழியுள் என்னைச் சூழ்ந்து கொண்ட மதுரை எரிப்பில் எங்கிருந்தோ ஒரு குரல் – குருக்கள் அல்ல; வந்த அன்று பேசினபின் அந்த மனிதன் வாய் அநேகமாய்ப் பூட்டுதான் – ஒரு குரல், மந்திர உச்சாடனம் போல்:”நாள் கழிச்சுத் தேய்ச்சுண்டாலே இப்படித் தான். கண்ணிலிருந்து ரெண்டு சொட்டு ஜலம் கழண்டால் சரியாப் போயிடும்.

 

    மாமாவைக் கையைப் பிடிச்சு அழைச்சுண்டு போங்கோ. அபிதாவை வென்னீரை விளாவச் சொல்லியிருக் கேன். நான் கடைவரைக்கும் போய் வரேன். கண்டந் திப்பிலி வாங்க!”பேசிக் கொண்டே குரல் தூரத்தில் ஓய்ந்தது.என்னை ஒருகை பிடித்தது. மெதுவாய்த்தான். என்னுள் சினம் மூண்டது. என்னைப் பிடித்த கையை வெடுக்கென உதறினேன். உதறின கை என்னைத் திரும்பவும் பிடிக்க முன்வரவில்லை. ஐயோ, விழிவயண்டு விடும் போல் வதைக்கிறதே! கண்ணைக் கசக்கிய வண்ணம், நடுக்கூடத்தில், நடுக்காட்டில் நிற்கிறேன்.என் பக்கத்தில் ஒரு சிரிப்பு. விழித்துப் பார்க்கிறேன். நல்ல கண்களே நெற்றிக் கண்களாகிவிட்டன.என் அவஸ்தை சாவித்திரிக்கு நகைப்பு. நகைக்க இப்போ அவள் முறை.சிந்திய கெளரவத்தைத் திரட்டி, நிமிர்ந்த முதுகில் சுமந்து கொண்டு, கொல்லைப்புறம் செல்கிறேன். விழி தெறிக்கிறது. தலை சுற்றுகிறது. காலடியில் ஏதோ தடுக்…”ஐயோ!”அபிதா அலறினாள்.

 

    ஒரு கைஎன்னைப் பிடித்துக் கொண்டதுஉதறினேன்.ஆனால் இந்த சமயம் குருக்கள் என்னை விடுவதாயில்லை. என் கூச்சம், கோபம் அவருக்குச் சட்டையில்லை. என்னை அழுத்திப் பிடித்துக் கொண்டு, முதுகில் சீய்க்காய்க் குழைவைப் பூசித் தேய்க்கிறார்.முதுகுத் தேய்ப்போடுதான் எண்ணெய்ச் சடங்கு பூர்த்தி.சுறீல் -ஸன்னமானதோர் வெம்மை, பிடரியில் கண்டு, வேர் பிரிந்து, ஆணி வேர் நடுமுதுகில் இறங்குகிறது.மண்டையும் நினைவும் அமிழ்ந்து கிடக்கும் அரைமயக்கத்தில், விழிகள் எண்ணெய்க் கரிப்பின் முழுக்குருடில், சூடு என்று தவிர, சட்டென அடையாளம், உணர்வில் உடனே கூடவில்லை.கட்டிய விரல் நுனியில் ஈர்ப்பில் புருவ நடுவைத் துருவும் வேதனை போல் உடல் பூரா, காலிலிருந்து தலைநோக்கி ஒரு காந்தம் ஊடுருவிக் கடுத்தது.

 

     மொண்டு மொண்டு, தலையிலும் தோளிலும் மாறி மாறிக் கொட்டிக் கொள்கிறேன். ஆனால் பிடரிமேல் நூல் பிடித்து விழுந்து கொண்டி ருக்கும் இந்த கிண்டிநீரின் நெருப்பு, தந்தியறவில்லை. நேரே முதுகுத் தண்டிலி ருந்து நரம்பு தானே கண்டுமீட்டும் இந்த இன்பமும் துன்பமும் ஒரே பங்கில் கலந்த இந்தத் தவிப்புக்கு ஈடு, பூமியைப் பிளந்து கொண்டு புறப்படும் முளையைச் சொல்வேனா?கோத்துவாங்க மறந்து, உள்ளுக்கிழுத்த மூச்சு உள்ளுக்கே இன்னும் இன்னும் இன்னும் – ஐயையோ ! – இன்னும் இழுத்துக் கொண்டே போகும் இரக்கமற்ற தன்மையில், இந்த அபிஷேக தீர்த்தம், ஒரே சூட்டுச்சரடி, சதையுள் இறங்கி, அங்கங்கே ஏதோதோ மந்திரங்கள் புரிகின்றது. நாளடைவில், என் மூதாதையர் நாளிலிருந்தே, பரம்பரையாய் ஓய்ந்துபோன யந்திரங்கள், ஏதேதோ சக்கரங்கள், தம்தம் முதல் சுற்றில், ரத்தத்தில் அசைய ஆரம்பிக்கின்றன.இதென்ன, ப்ரக்ஞையுடன் புது பிறவியின் பயங்கரம், ஆச்சர்யம், தோலுரிப்பு, அழல் நடுவில் ஸ்புடம், தபோக்னியின் கானல் நடுக்கம், கண்ணிருட்டு, விடியிருள், பிறந்த மனதோடு பிறந்த மேனியின் விடுதலை, காலமாய் உடலின் சருமத்வாரங்களை, நெஞ்சின் சல்லடைக் கண்களை அடைத்து கொண்டிருந்த அழுக்குகளின் எரிப்பில், பழைய வேகத்தை மீண்டும் பெற்ற புத்துணர்வில், ஜீவநதியின் மறுஓட்டம், ஆதார ஸ்ருதியின் தைரியமான, கம்பீரமான மீட்டலின் சுடர் தெ ரிக்கும் சொடசொடப்பு, காண்டீபத்தின் டங்காரத்தில் உடல்பூரா, உணர்வுபூரா, மனம்பூரா ஜல் ஜல் ஜல் சிலம்பொலி!கண்ணைக் கசக்கி இமை சிமிழ்திறந்ததும்கண் கரிப்புடன் திரையும் கழன்று விழுந்துசித்திரத்துக்குக் கண் திறந்தவிழிப்பு.என்னைச் சூழ்ந்து கக்கும் வென்னீரின் ஆவியினின்று என் புதுத் துல்லியத்தில் புறப்படுகிறேன்.உலையிலிருந்து விக்ரகம்.

 

       வென்னீரின் ஆவி கலைகையில், புலனுக்கப் பிதுங்குவது, பளிங்கிலடித்தாற்போன்று, நெருக்கமாய் நின்ற இரு பாதங்கள், அங்கிருந்து முழங்காலை நோக்கி விழியேறுகையில், பிடிப்பான கண்ட சதையின் வெண்சந்தனப் பளிச்சில், பச்சை நரம்பின் ஓட்டம் கொடி பிரிகிறது.அம்பா!உன் பாத கமலங்கள்எனக்கு மட்டும் தரிசனமா?அப்படியானால் நீ உண்டா?உன் பாதங்கள் தந்த தைரியத்தில்உன் முகம் நோக்கி என் பார்வை எழுகின்றது.ஓ, உன்முகம் அபிதாவா?உடல் பூரா, மனம் பூரா திறந்த சிலம்பொலி, உலகத்தின் ஆதிமகளின் சிரிப்பா?அபிதா, இப்போது என் பார்வையில், நீ உலகத்தின் ஆதிமகளாயின், நீ நீராட்டுவித்த ஞானஸ்னானத்தில் நான் ஆதிமகன்.எனக்குத் தோன்றுகிறது; யாருக்குமே, ஏதோ ஒரு சமயம், இதுபோல் தரிசனம் நேரத்தான் நேர்கின்றது. மடிப்பு விரித்தாற்போல், இதயம் திடிரென அகன்று அதனுள் எரியும் விளக்கு தெரிகிறது.

 

       ”நான்தான் உன் பிறவியில் முழு ஒளி.உன் அவதார நிமித்தம்உயிரி���் கவிதாமணிநீ அறியாது, தொண்டையில் மாட்டிக்கொண்டிருக்கும்உன் கனவின் தூண்டில் முள்தொன்றுதொட்டு உலகின் ஆதிமகன்,ஆதி மகளுக்கும்உனக்கும் இன்றுவரை வழி வழி வந்தசொந்தம்.வேஷங்கள் இன்று விழுந்ததும்அன்றிலிருந்து இன்று வரைமாறாத மிச்சம்உனக்கு உன் அடையாளம்.”இந்த உலகம் தானாகவே வந்து தோளைத் தொடுகையில், அதன் மோனச் சேதியை, அறிந்தோ அறியாமலோ வாங்கிகொள்ள, அந்த மோதலின் வேளையில், பாத்திரம் காத்திருக்கும். பக்குவத்துக்கேற்ப, ஒன்று – தன் மயமாகிக் கொண்டு விடுகிறது. அல்லது சதைத் தடுமனில் தெறித்து விழுந்த குண்டுபோல், மஹிமை நீர்த்து மங்கிவிடுகிறது.என் பிறவியே என் பாக்யம்.

 

       பிறவிக்குப் பிறவி பாக்யத்தின் பெருக்கு என என் மறுமலர்ச்சியில் நான் அறிந்த பிறவியின் நான் அறிந்த பின் பிறவியின் ஒவ்வொரு தருணமும் உயிரின் கவிதாமணியாகக் கண்டு கோத்த மாலையை ஆதிமகளின் பாதத்தில் காணிக்கையாகச் சேர்ப்பேனா? அல்ல அவள் கழுத்தில் மாலையாகப் பூட்டுவேனா?இது, இதுபோல இதுவரை காத்திருக்கும் நான் அடையாளங் கண்டு கொள்ளாததால் என்னைக் கடத் போன தருணங்களின் வீணை நான் உணர்ந்து, வருந்தி, என் இழப்புக்கு உருகி, இனிமேலும் ஏமாறாது காணத் தவிக்கம் ஏக்கத்திற்கேறப் நான் பெறும் உக்ரத்தைப் பொறுத்தது.சகுந்தலை!அபிதா!தரிசினி!கரடிமலைச் சாரலில் பல்லக்குத் திரை விலக்கி எனக்குக் கண் காட்டிய ராஜகுமாரி!ஹிமாவான் புத்ரி ஹைமவதி!உங்கள் அத்தனை பேரின் பூர்வமுகியை இப்போது நான் பெற்ற உக்ரமுகத்தில் அபிதாவில் அடையாளம் கண்டு கொண்டபின், நீங்கள் அனைவரும் நான் கண்டமுகத்தின் நாமார்ச்சனையாகத்தான் தெரிகிறீர்கள். இந்த சமயம், அபிதா, நீ கூட எனக்கு அவசியம் தானோ?ஆனால் இது என் விசுவ ரூபத்தின் வியப்பு. இப்போது நீயும் எனக்கு ஜக்யமாதலால் உன்னை என்னிலிருந்து தனியாய்ப் பிரித்துப் பார்க்க இந்த வேளையில் வழியில்லை. ஆனால் வியப்புத்தான். சந்தேகமில்லை நீயலாது விழிப்பு ஏது? அபிதா, நீ என் காயகல்பம்.காயத்ரீதிடீரெனப் புதுவிதமாய் எனக்குக் கண்கள் திறந்தாற் போலிருந்தது. விழிமேல் படர்ந்த மெல்லிய சதையைப் பிய்த்தெறிந்தாற்போல்.

 

       இமையோரங்கள் உட்புறம் அவ்வளவு வலித்தன. தலையை உதறிக்கொண்டேன். ‘விர்’ரென மாலைக் காற்று விழியோரங்களின் உள்பாய்ந்து கண்கள் திடீரெனச் சில்லிட்டன.கதிர்கள் காற்றில் அலைந்தன. தென்றலின் ஒவ்வொரு மோதலிலும் அவை நீண்ட பெருமூச்செறிந்தன. அவை ஏதோ எனக்கோ தமக்கோ சொல்ல முயன்றன. புரியாதவொரு இன்பக்கிலேசம் என் மார்புள் அமிழ ஆரம்பித்தது. பெருமூச்சுடன் புத்தகத்தைக் கீழே வைத்தேன். ஏடுகள் படபடவென அடித்துக் கொண்டன. அவையும் ஏதோ சொல்ல முயன்றன.அதே வயல்கள் தாம். அதே பச்சைக் கதிர்கள்தாம். அதோ தூரத்தில் ஏற்றத்தை இறக்கிக் கட்டிய உறை கிணறுதான் இப்பவும். ஒருவரும் அதைத் தூக்கிக் கொண்டு போய்விடவில்லை. ஆனால் எல்லாமே ஏதோ முறையில் மாறியிருந்தன. திடீரென ஏதோ ஒரு மந்திக்கோல் பட்டு, உயிர்பெற்று மூச்சுவிட ஆரம்பித்துவிட்டன.இருந்தாற்போல் இருந்து கதிர்களின் பச்சைகளினிடையில் வெள்ளை அசைவுகள் ஒருமித்து ஒன்றே ஆகி அவ்வுயிரின் உருதன்னிரு பக்கங்களிலும் இரு வளைவுகளைக் கற்பித்து விரித்துக் கொண்டு கிளம்புகையில், ஒரு பட்சியின் வடிவமாய அந்தரத்தில் பிதுங்கியது.

 

     கீழே உதைத்துக்கொண்டு அது அப்படிக் கிளம்பிய வேகமும் அழகும் என்னுடல் புல்லரித்தது. அதை எதிர்த்துக் கொண்டு என் நெஞ்சம் நெஞ்சுக்குழிவரை எழும்பித் ‘தடால்’ எனத் தன்னிடத்தில் வீழ்ந்தது.ஏதோ இவ்வுலகத்தையே, கோளத்தையே கழற்றி எறிவதுபோல் ஒரே வளைவில் அது எழுப்பிய வேகத்தில், ந���ல மெத்தையுல் வைர நகை உருண்டாற்போல், அதன் வெண்மை வானில் ஜவலித்தது. நான் பரவசமானேன். என் கைகள் என்னையறியாமல் வானை ஆலிங்கனம் செய்ய விரிந்தன.”என்ன செய்யப் பாக்கறேள்?”நக்ஷத்ரங்கள் சொரிந்தாற் போன்ற சிரிப்பு. திரும்பினேன். இரு தோள்களிலும் இரண்டு பின்னல்களைத் தொங்கவிட்டுக் கொண்டு யோக வேஷ்டிமாதிரி ஒரு பையை மாட்டிக் கொண்டு ஒரு பெண நின்று கொண்டிருந்தாள். அவள் சிரிப்பில் அவள் மூக்குத்தண்டு புருவமத்தியில் சுருங்கிற்று. அவளை யாரென்று நான் அறியேன். என் உடலின் பரபரப்பில் எனக்கு – அப்பறவையின் லாவகம் தவிர வேறெதும் புரியவில்லை.”பார் பார், அதோ பார், வானத்தில் வைரப்பிடி போட்ட கத்தி மின்னுகிறது பார்!”ஒரு கையைப் பருவங்களுக்கு மேல் நிழலுக்கு வைத்துக்கொண்டு அவள் அண்ணாந்து நோக்கினாள்.

 

     மொக்கவிழ்ந்தாற்போல் அவள் வாய் சற்றுத் திறந்தது.ஆனால், நாங்கள் அதைக் கண்டு அதிசயித்துக் கொண்டிருக்கையிலேயே திடீரென அது கதிகலைந்து நிலை தவறியது. அதன் இறக்கைகள் செயலிழந்தன. சட்டெனப்பூட்டு விட்டுத் தளர்ந்தன. அப்படியே கர்ணம் அடித்துக் கொண்டே வெகு வேகமாய்க் கீழிறங்கி, மொத்தாகாரமாய்ப் ‘பொத்’தென என் மடியில் வீழ்ந்தது.நான் ‘ஓ’வென அலறினேன். என் கைகள் வெட வெடத்தன. என் விரல்கள் தற்செயலாய் அதன் மார்பில் சற்று அழுந்தின. அவ்விதயத்தின் கடைசித் துடிப்பு அப்பொத்தான் அந்த உடலை விட்டுப் பிரிந்துகொண்டிருந்தது. பிராணனின் கடைசிபிரயத்தனத்தில் அதன் பார்வை என்மேல் நிலைக்க முயன்றது. அக்கண்களில் தவித்த ஆச்சரியத்தையும், சோகத்தையும் வலியையும் நான் மறக்கவே முடியாது. அதன் உடல் ஒரு குலுங்கு குலுங்கிப் புரண்டது. கட்டையாகி விட்டது. உடையும் தேங்காயில் திடீரென உதயமாகும் அவ்வளவு தூயவெண்மை. அதன் துடிப்பிழந்த அந்த வெண்மையை வெறிச்சென்று என் மடியில் நான் உணர்ந்ததும் ஒரு பெருங்கேவல், பட்டையை உரிப்பது போல், என்னை ஊடுருவிற்று, அந்த உடலை அப்படியே என் மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டேன். அதன் உடல் மெத்தென என் மார்பில் அழுந்திற்று.

by parthi   on 15 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இன்னா செய்தாரை இன்னா செய்தாரை
மாங்காய் மாங்காய் மாங்காய் மாங்காய்
உடல்நிலை உடல்நிலை
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்
கவனம்-இரமா ஆறுமுகம் கவனம்-இரமா ஆறுமுகம்
நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன் நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.