இத்தலத்தில் விநாயகர், வீரபத்திரசாமி, மாயாண்டி, இருளப்பர், இருளாயி, லாடசன்னாசி, சப்தகன்னியர், பேச்சி, காளி, கருப்பர் என 21 பந்தி தெய்வங்களும் அருள்பாலிக்கிறார்கள்.பல நூற்றாண்டுகளாக இத்தலத்தில் அன்னை அருளாட்சி புரிந்து வந்தாலும், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் முறைப்படி கோயில் கட்டி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
இங்கு புள்ளி மான்கள் விளையாடி திரிந்ததால் மான்தோப்பு' என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மாந்தோப்பு ஆனது.கன்னிப்பெண்களின் காவல் தெய்வமான அங்காள ஈஸ்வரி விருதுநகர் மாவட்டம், மாந்தோப்பு கிராமத்தில் வாலகுருநாதசுவாமியுடன் அருள்பாலித்து வருகிறாள். |