LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தாய்த்தமிழ் பள்ளிகள் Print Friendly and PDF

ஆற்றல்மிகு ஆசிரியர் –– நிகழ்வு – 11 - திரு. திலீப்

ஆற்றல்மிகு ஆசிரியர் –– நிகழ்வு – 11
சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்;பள்ளி ஆசிரியர் - திரு. திலீப்

1. வகுப்பறையைத் தாண்டி மாணவர்களுக்கு ஆசியரானவர் என்னென்ன கற்றுக் கொடுக்க வேண்டும்?

     ஆசிரியர் என்பவர் பல்துறை வித்தகராகச் செயல்பட வேண்டும். நான் எனது மாணவர்களுக்குப் பாடத்தைத் தாண்டி நாட்டுப்புற நடனம், Clay Moulding போன்ற கலைகளைக் கற்றுக் கொடுக்கின்றேன்.

2. மாணவர்களுடைய வளர்ச்சிக்கு தாங்கள் எடுத்திருக்கும் முயற்சிகளைக் குறித்து..

     ஒரு ஆசிரியரானவர் மாணவர்களுக்குக் கல்வியோடு சுயதொழிலுக்கான பயிற்சியையும் அளிக்க வேண்டும், புத்தக அறிவை செய்முறை அறிவாக (Practical) கொடுக்க வேண்டும், பொது அறிவையும் புகட்ட வேண்டும். நாட்டுப்பற்றையும் மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும். தன்னம்பிக்கையையும் விதைக்க வேண்டும். எனவே நான் மாணவர்களுக்கு Drawing, Tailoring, Crafts போன்ற கலைகளோடு மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் சென்று அறிவியல் பாடத்தின் விளக்கங்களைக் கூறுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறேன்.

3. வகுப்பறையில் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தை எவ்விதம் பயன்படுத்துகிறீர்கள்..

      Smart Classroom என்ற ஒன்றைக் கொண்டு வந்துள்ளோம். அதன் மூலமாக மாணவர்களுக்குக் கணினி பயன்பாட்டு பயிற்சி, நிழற்படம் மூலம் பாடம் நடத்துதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறோம். ஒரு மணிநேரம் கூட இடைவிடாமல் அனைத்து மாணவர்களும் போட்டிப் போட்டுப் படிக்கும் படி இயங்குகிறது அவ்வறை. புத்தகங்கள் அச்சிட்டு வராத காலகட்டத்திலும் கூட இதன்வழி மாணவர்களுக்கு எளிதில் பாடம் நடத்த முடிகிறது.

4. மாணவர்கள் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ந்த நெகிழ்வான தருணங்கள் குறித்து….

     என்னிடம் படித்த மாணவர்களில் பலர் மருத்துவ படிப்புக்கும், பொறியியல் படிப்புக்கும் சென்று படித்து வருகின்றனர். பலர் வெளிநாடுகளில் படிக்கின்றனர். ஒரு மாணவன் மருத்துவத்துறையில் செவிலியராக பணிபுரிகிறான். போகும் இடங்களிலெல்லாம் எனது முன்னாள் மாணவரைப் பார்க்கும் வாய்ப்பு எதிர்பாராமல் கிடைக்கிறது. இதெல்லாம் மிகவும் மகிழ்வான தருணங்களாக நான் நினைக்கிறேன்.

5. உங்களது குருவாக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்?

      என்றும் எனது முதல் குருவாக எனது பெற்றோரைக் கருதுகின்றேன். எனது இரண்டாவது குருவாக மாணவர்களை கருதுகின்றேன். என்றும் என்னை மேம்படுத்திக் கொள்ள மாணவர்கள் பக்கபலமாக இருப்பதால் அவர்களை இரண்டாவது குருவாக வைத்திருக்கிறேன்.

6. ஆசிரியர்கள் படிக்க வேண்டுமா? எதிர்கால ஆசிரியர்களுக்கு தாங்கள் வழங்கும் அறிவுரை..

      ஆசிரியர்கள் நிச்சயம் படிக்க வேண்டும், படித்துக் கொண்டே இருக்க வேண்டும், காலத்திற்கேற்ப தன்னை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். புத்தகங்களிலிருந்து புதிதாக வருகின்ற இணையதளங்கள் வரை ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். புத்தகங்களுக்காகச் செலவிடுவது முதலீடே. எனவே புத்தகங்களுக்குச் செலவிட யோசிக்கக் கூடாது.

     புதிதாக வருகின்ற ஆசிரியர்கள் ‘நாம் இதயங்களுடன் இயங்கிக்கொண்டிருக்கிறோம்’ என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களின் இதயங்களுடன் பயணிக்கிறார்கள். பிற துறையைச் சேர்ந்தவர்கள் இயந்திரங்களுடன் பயணிக்கிறார்கள். ‘பன்முகத்தன்மை’ ஆசிரியரிடம் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று. அதை வளர்த்துக் கொண்டால் மாணவர்களின் ஆற்றலுக்கும், ஆக்கங்களுக்கும் வழிகாட்டலாம்.

7. நீங்கள் பெற்ற விருதுகள் குறித்த கூறுங்கள்?

     மூன்று முறை தேசிய அளவில் விருது பெற்றிருக்கிறேன். தமிழக அரசின் ‘Dream Teacher Award’ பெற்றேன். சர்வதேச விருதினைப் பெற்றேன். பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன். முன்னாள் குடியரசுத் தலைவர் ‘பிரணாப் முகர்ஜி’ அவர்களின் கைகளால் விருது பெற்ற பெருமை எனக்குண்டு. மறக்க முடியாத தருணங்கள் அவை.

 

 

     இவரை அடைவதற்கு விருதுகள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றன…. தொடரட்டும் இவரது முயற்சிகளும், வெற்றிகளும்…

 

 

 

by Lakshmi G   on 19 Apr 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தனித்துவமிக்க தலைமையாசிரியர் – நிகழ்வு – 11 - திருமதி. வசந்தா தனித்துவமிக்க தலைமையாசிரியர் – நிகழ்வு – 11 - திருமதி. வசந்தா
தனித்துவமிக்க தலைமையாசிரியர் - திருமதி. மரகதம் தனித்துவமிக்க தலைமையாசிரியர் - திருமதி. மரகதம்
ஆற்றல் மிகு ஆசிரியர்- திருமதி. கி. கலைச்செல்வி ஆற்றல் மிகு ஆசிரியர்- திருமதி. கி. கலைச்செல்வி
தனித்துவமிக்க தலைமையாசிரியர் – திருமதி கு.ரமாராணி, தனித்துவமிக்க தலைமையாசிரியர் – திருமதி கு.ரமாராணி,
தனித்துவமிக்க தலைமையாசிரியர் –- திரு. செல்வக்கண்ணன், அரசு ஊராட்சி ஒன்றியப்பள்ளி, க.பரமத்தி, கருவு+ர். தனித்துவமிக்க தலைமையாசிரியர் –- திரு. செல்வக்கண்ணன், அரசு ஊராட்சி ஒன்றியப்பள்ளி, க.பரமத்தி, கருவு+ர்.
சென்னை:பாவாணர் தமிழ்வழி மழலையர் தொடக்கப்  பள்ளி, 600100 சென்னை:பாவாணர் தமிழ்வழி மழலையர் தொடக்கப் பள்ளி, 600100
கரூர்: சக்தி தமிழ்ப் பள்ளிக் கூடம், 639004 கரூர்: சக்தி தமிழ்ப் பள்ளிக் கூடம், 639004
புதுப்பட்டிணம்:பாவலரேறு தமிழ்வழித் தொடக்கப்பள்ளி, 603102 புதுப்பட்டிணம்:பாவலரேறு தமிழ்வழித் தொடக்கப்பள்ளி, 603102
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.