|
|||||
70 நொடிகளில் பிட்சா தயாரிக்கும் 3டி பிரின்டர் : இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் கண்டுபிடிப்பு !! |
|||||
புத்தகங்கள், புகைப்படங்களை ஸ்கேன் செய்கிறோம், ஜெராக்ஸ் எடுக்கிறோம். பிரின்ட்டும் எடுக்க முடிகிறது. இதேபோல ஏன் ஒரு நாய்க்குட்டி, மேஜை, நாற்காலியை ஸ்கேன், ஜெராக்ஸ், பிரின்ட் எடுக்க முடியாது? இப்படி வித்தியாசமாக சிந்தித்ததன் விளைவுதான் ‘3டி பிரின்டிங்’ தொழில்நுட்பம். இது புதிதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பே உதித்த சிந்தனைதான். 1984-ம் ஆண்டிலேயே 3டி பிரின்டர்களும் அறிமுகமாகிவிட்டன.
சமீப காலமாக இந்த 3டி பிரின்டிங் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி பெற்று வருகிறது. மருத்துவம், விமான இன்ஜினியரிங், நகை தயாரிப்பு, பொம்மைகள் தொடங்கி உள்ளாடைகள் தயாரிப்பு வரை 3டி பிரின்டிங்கில் புகுந்துவிளையாடுகிறார்கள்.
இந்தவகையில் மிக குறைந்த நேரத்தில் பிட்சா உணவு பண்டத்தை தயாரிக்கும் '3டி' பிரின்டரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஞ்சன் கான்டிராக்டர் என்பவர் வடிவமைத்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணிபுரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அஞ்சன் கான்டிராக்டர் என்ற பொறியாளர், பிட்சா தயாரிக்கும் வசதியுடன் கூடிய, 3டி பிரின்டரை உருவாக்க திட்டமிட்டார். இதற்கு நாசா நிறுவனம் நிதியுதவிக்கு முன்வர, 3டி பிரின்டர் தயாரிப்பில், அஞ்சன் வெற்றியடைந்தார். சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகளுக்கு, டப்பாக்களில் அடைக்கப்பட்ட அல்லது, பேக் செய்யப்பட்ட உணவு வகைகள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த புதிய பிரின்டர் மூலம், எளிதான, சத்தான உணவுகளையும், பிட்சாவையும் தயாரித்துக் கொள்ளலாம். இந்த பிரின்டரில், மாவு, சுவைக்கான பொருட்களுடன், புரோட்டின், கொழுப்பு மாத்திரைகளையும் சேர்த்து, 70 நொடிகளில் சுவை மிகுந்த, பிட்சாவை தயாரித்து விடலாம் என அஞ்சன் விளக்கியுள்ளார். |
|||||
by Swathi on 31 Jan 2014 0 Comments | |||||
Tags: 3D printer 3D Printer makes Pizzas Astronauts Anjan Contractor பீட்சா 3டி பிரின்டிங் தொழில்நுட்பம் 3டி பிரின்டர் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|