|
|||||
கன்னியாகுமரியில் அறிவிக்கவேண்டி திருக்குறள் வளர்ச்சிக்கான கோரிக்கைகள் - தொடர்பாக |
|||||
அனுப்புநர், 25/12/2024 திருக்குறள் அமைப்புகள் , தமிழ்ச்சங்கங்கள் சார்பாக வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி பெறுநர், மாண்புமிகு அமைச்சர், தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், சென்னை.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: கன்னியாகுமரியில் அறிவிக்கவேண்டி திருக்குறள் வளர்ச்சிக்கான கோரிக்கைகள் - தொடர்பாக மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொறுப்பேற்று திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு இருந்த பரிசுத் தொகை ரூபாய் 10000/- என்பதை ரூபாய் 15000/-என்று அறிவித்ததும், மாணவர்களின் எண்ணிக்கையின் உச்ச வரம்பு 70 என்ற கட்டுப்பாட்டை நீக்கி,1330 திருக்குறள் சொல்லும் அனைவருக்கும் பரிசு என்று அறிவித்ததும் திருக்குறள் பரவலாக்கத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாகப் பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை வைத்து 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வு கொண்டாடும் இந்த வேளையில் கீழ்காணும் திருக்குறள் சார்ந்த வேண்டுகோள்களை உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் , வலைத்தமிழ் , வள்ளுவர் குரல் குடும்பம், தமிழ் வளர்ச்சி மன்றம் ,வெர்ஜினியா அமெரிக்கா, பைபிள் அச்சகத்தில் திருக்குறள் அச்சடித்து உலகத்திற்கு வழங்கிய உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா , குறள் வழி மாத இதழ், அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவை , உலகத் தமிழ்க்காப்புக் கூட்டியக்கம், கற்க அறக்கட்டளை உள்ளிட்ட திருக்குறள் களப்பணி செய்யும் அமைப்புகளின் சார்பாக தமிழ் வளர்ச்சித் துறைக்கு கீழ்க்காணும் கோரிக்கைகளை வைக்கிறோம். கோரிக்கைகள் :
இது தொடர்பாக மாவட்டம் முழுதும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பயணித்து இலவசப் பயிற்சி வழங்கும் திருக்குறள் மனன முற்றோதல் பயிற்சியாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருவருக்கு , இலவச அரசுப்பேருந்துப் பயணம், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை போன்று வழங்கக் கோருகிறோம்.
3.திருக்குறள் முற்றோதல் மனனமாகச் சொல்லும் திறன் வாய்ந்த கல்லூரி மாணவிகளுக்கும் ,சென்ற சில ஆண்டுகளுக்கு முன் வரை பரிசும் சான்றிதழும் கொடுக்கப் பட்டுள்ளது.தற்போது அவர்களுக்கு இது வழங்கப்படவில்லை.முது நிலை மாணவர்களை ,கூடுதலாகப் பொருளும் கூறச் சொல்லி திருக்குறள் முற்றோதல் முது நிலை என வகைப் படுத்தி சான்றிதழும் ,ரூபாய் 25000/- என பரிசுத் தொகையும் உயர்த்தி வழங்கலாம். 4.திருக்குறளை பொருளோடு கூறும் எவருக்கும் வயது ஒரு தகுதியாக / தடையாக இன்றி அனைவருக்கும் வழங்கலாம்.
7.திருக்குறள் மனன முற்றோதல் முடித்து அரசின் முற்றோதல் பரிசை வென்ற அனைவரையும் திருக்குறள் இளநிலை பட்டயப் படிப்பு முடித்ததாகக் கருதி , அடுத்தகட்டமாக திருக்குறளை கசடறக் கற்று , பொருள் உணர்ந்து வாழ்க்கையில் பின்பற்ற வகை செய்யப்பட வேண்டும். அதற்கு ஏதுவாக திருக்குறள் பொருளை முழுமையாக உள்வாங்கியுள்ளார்களா என்று அறிய இணையவழி திறனறித் தேர்வை வடிவமைத்து தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் வழங்கவேண்டும் என்று கோருகிறோம். நன்றி.. |
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
by Swathi on 23 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|