LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் வளர்ச்சிக் கோரிக்கைகள் Print Friendly and PDF

செந்தமிழ்த் திருத்தேர் தூயதமிழ் மாணவர் இயக்கம் பன்னாட்டுத் தூயதமிழ் மாணவர் மாநாடு - 2025 -மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துவகைப் பள்ளிகளிலும் தமிழ்மொழிப் பாடம் கட்டாயமாக்கிட 100% நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
2. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிப்பதோடு நில்லாமல் தமிழ்நாட்டில் வழங்கப்பெறும் அரசு – தனியார் நிறுவனப் பணிகளில் தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரித்துத் தமிழ்நாட்டின் வணிக மொழியாகத் தமிழை 100% நடைமுறைப்படுத்த வேண்டியதை தமிழ்நாடு அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
3. தமிழ்நாட்டரசின் பாடநூற் கழகத்தாரால் வெளியிடப்படும் பாடநூல்களில் உள்ள பிறமொழிச் சொற்களைத் திருத்தி நடைமுறையில் உள்ள தமிழ்ச்சொற்களைக் கொண்டு இனிவருங்காலங்களில் அச்சிடத் தமிழ்நாடு அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
4. உயர்நீதி மன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகள் பொறுப்பேற்கும்போது, உறுதிமொழி ஆவணங்களில் தேவநாகரி எழுத்துக்களைக் கொண்டே கையொப்பமிட வேண்டும் என்பதே தற்போதையச் சட்டம். இதன்படி 11 இந்திய மொழிகளில் மட்டுமே தாய்மொழியில் கையொப்பமிட இயலும்.
இந்திய மொழிகள் அனைத்தும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதால் நீதியரசர்கள் அவரவர் தாய்மொழியிலேயே கையொப்பமிடும் வகையில் சட்டத்தில் திருத்தம்செய்திட நடுவணரசை வேண்டுகிறோம்.
5. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி – கல்லூரி ஆசிரியர்கள், பிறமொழி கலப்பின்றித் தமிழைத் தமிழாய்ப் பயன்படுத்திட முன்வர வேண்டும். ஆசிரியர்களுக்கு அடிப்படை மொழிப் பயிற்சியையும் தூயதமிழ்ப் பயிற்சியையும் மாவட்டந்தோறும் வழங்கிட தமிழ்நாடு அரசின் சார்பில் திட்டம் வகுக்க வேண்டும்.
6. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வழங்கப்படுகிற திறன் மேன்பாட்டுப் பாடவேளைகளைப் போலப் பிறமொழி கலப்பின்றித் தமிழைத்தம் இயல்பு வாழ்க்கையில் பயன்படுத்தும் வகையில் திறன்சார் பாடத்தினை வகுத்துப் பள்ளிகளில் தனியொரு பாடமாக அறிவித்துப் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்களைக்கொண்டு நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
7. அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்கட்கும் அடிப்படை மொழியறிவையும் பிறமொழி கலப்பில்லாத் தூயதமிழையும் பயிற்சியளித்திட தமிழ்நாடு அரசுத் திட்டம் கவகுக்க வேண்டும்.
8. சென்னை உட்படத் தமிழகத்தில் இருக்கும் வானூர்தி நிலையங்களுக்கு வருகின்ற விமானங்களிலும் புறப்படுகின்ற விமானங்களிலும் வானூர்தி நிலையங்களிலும் தமிழிலேயே அறிவிப்புகள் வழங்குவதற்கு மைய அரசு வானூர்தித்துறை உரிய ஆணைகளை உடனடியாக வழங்கும்படி தமிழியக்கம் வேண்டுகிறது.
9. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வழங்கும் விருதுகளின் தேர்வுமுறையில் 100% உண்மைத்தன்மைய உறுதி செய்ய வேண்டும். போலியான தமிழறிஞர்கள் விருதுகள் பெறுவதையும் அதற்குத் துணையாகுபவர்களையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். விருதுகளைத் தமிறிஞர்கள் விண்ணப்பித்துப் பெறும் முறையினை மாற்றி, உண்மையான தமிழறிஞர்களை இனங்கண்டு தமிழக அரசே அவ்வறிஞர்களுக்கு இல்லந்நேடிச் சென்று விருதுகள் வழங்கிட வேண்டும்.
10. தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப்பெயர்கள் – தெரு, சாலைப் பெயர்கள் ஆகியவற்றைத் திருத்திச் சரியான தமிழ்ப் பெயர்களில் மாற்றுவதைத் தமிழ்நாடு அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
11. சுயமரியாதைத் திருமணங்களைப் போலத் தமிழ்முறை திருமணங்களுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் தனியே திட்டம் வகுக்க வேண்டும். தமிழர் வாழ்வியல் சடங்குகளைத் தமிழ்முறைப்படியே நிகழ்த்திட தமிழ்நாடு அரசு சார்பில் மக்களுக்கு ஊக்குவிக்க வேண்டும்.
12. குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டுவதையும் வணிக நிறுவனங்களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவதையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் தனித் திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்த அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
13. வாகனப் பதிவின்போது தமிழ் எண்களைப் பயன்படுத்துவோர்க்குப் பதிவுக் கட்டணக் கழிவுகளை வழங்கிட தமிழ்நாடு அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
14. தமிழ் வளர்ச்சித் துறையின் பணிகளுக்குத் தமிழ் படித்தோரும் விண்ணப்பிக்கலாம் என்பதை மாற்றி இளநிலை முதல் முனைவர் பட்ட ஆய்வுக்கல்வி வரை தமிழ் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பக்க வேண்டும் என்பதை உறுதிசெய்து பணி அமர்வுகளை முற்றிலுமாக அரசுப் பணியாளர்த் தேர்வாணையம் வழியே நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
15. தமிழ்நாட்டில் உள்ள அரசு – தனியார் வேலை நிறுவனங்களின் பணிவாய்ப்புகளில் நூறில் 90% தமிழ்ப் பூர்வக் குடிகளுக்கே பணிவாய்ப்பு வழங்குவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
16. பிறமொழி கலப்பின்றித் தூயதமிழைத் தம் வாழ்வியலில் பழகும் இளைஞர்களுக்கு அரசுப் பணிவாய்ப்புகளில் முன்னுரிமைத் தந்திடும் வகையில் அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
17. முத்தமிழ் அறிஞர் கலைஞரால் தோற்றுவிக்கப்பட்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் பழையமுறைப் போலவே மாணவர்களின் பங்களிப்புகள் அதிகரிக்கும் வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்தி மாணவர்களின் இயக்ககமாக மாற்றிட தமிழ்நாடு அரசு கவனம் செலுத்திட வேண்டும்.
18. தமிழர்களின் திருக்கோயில்களில் முற்றிலும் தமிழ் ஆகம விதிமுறைகளின்படியே வழிபாடுகள் நிகழ்வதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.
19. தமிழ்நாட்டரசின் ஒவ்வொரு துறையிலும் துறைசார்ந்து எழும் மொழிப் பயன்பாட்டுச் சிக்கல்களைக் கையாளும்வகையில் தூயதமிழ்ப் பயிற்சிபெற்ற இளைஞர் ஒருவரை பணியமர்த்தித் துறைதோறும் தூயதமிழ் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
20. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் காலந்தோறுமான தேவைக்கும் ஏற்ற வகையில் அரசு சார்பில் மொழியாய்வு நிறுவனம் ஒன்றினைத் திறனும் அறிவும் பெற்ற மாணவர்களைக்கொண்டு அமைத்திட தமிழ்நாடு அரசு ஆவணம் செய்ய வேண்டும்.

by Swathi   on 02 Feb 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாட்டில் நூறு விழுக்காடு ஆட்சித்தமிழை நிலைநிறுத்துவோம்! தமிழ்நாட்டில் நூறு விழுக்காடு ஆட்சித்தமிழை நிலைநிறுத்துவோம்!
உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் நடத்தும் மாணவர் எழுச்சித்தமிழ் மாநாட்டுத் தீர்மானங்கள் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் நடத்தும் மாணவர் எழுச்சித்தமிழ் மாநாட்டுத் தீர்மானங்கள்
முதலாவது உலகத் தமிழிசை மாநாடு -2019 தீர்மானங்கள் முதலாவது உலகத் தமிழிசை மாநாடு -2019 தீர்மானங்கள்
அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை- தமிழ்ப் பல்கலைக் கழகம் நடத்திய 'தமிழ்க் கூடல்-2024' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்  அமைச்சரிடம் ஒப்படைப்பு அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை- தமிழ்ப் பல்கலைக் கழகம் நடத்திய 'தமிழ்க் கூடல்-2024' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமைச்சரிடம் ஒப்படைப்பு
தமிழர்கள் தமிழ்ச் சங்கத்தினர் ஆற்ற வேண்டிய சில  குறள் சார்ந்த பணிகள்.... தமிழர்கள் தமிழ்ச் சங்கத்தினர் ஆற்ற வேண்டிய சில குறள் சார்ந்த பணிகள்....
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருக்கு மே  2024 ல் வழங்கப்பட்ட கோரிக்கை மனு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருக்கு மே 2024 ல் வழங்கப்பட்ட கோரிக்கை மனு
இளையராசாவிடம்  எனக்குள்ள கிடுக்கங்களும் வேண்டுகோள்களும்-நாக.இளங்கோவன் இளையராசாவிடம் எனக்குள்ள கிடுக்கங்களும் வேண்டுகோள்களும்-நாக.இளங்கோவன்
பெயர் பலகைகள் அன்னை தமிழ் மொழியில் பெயர் பலகைகள் அன்னை தமிழ் மொழியில்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.