டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவிற்கு தற்போது பல திடுக்கிடும் காரணங்கள் கூறப்படுகின்றன.
ஜன்லோக்பால் மசோதா நிறைவேறாத காரணத்தால்தான் ராஜினாமா செய்தார் என நாடெங்கும் பேசப்பட்டு வந்தாலும், அவர் ராஜினாமா செய்ததற்கு வேறு இரண்டு முக்கிய காரணங்கலை டெல்லி அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
சமீபத்தில் முகேஷ் அம்பானி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்ததால், மத்திய அரசுக்கு முகேஷ் அம்பானியிடம் இருந்து நெருக்குதல் வந்ததாகவும், அதனால் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற திட்டமிட்டு இருந்ததால், அதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட கெஜ்ரிவால், தானாகவே முன்வந்து ராஜினாமா செய்தார் என்று கூறபப்டுகிறது,அதே நேரத்தில் ஜன்லோக்பால் மசோதா தோல்வியடைந்த தினம், டெல்லி பத்திரிகை ஒன்று சர்வே ஒன்றை வெளியிட்டது. அதில் வரும் தேர்தலில் ஆம் ஆத்மி கணிசமான நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவித்திருந்தது. இதனால் மாநில அரசியலையும் தாண்டி மத்திய அரசை நோக்கில் கெஜ்ரிவாலின் கவனம் தற்போது திரும்பியுள்ளது. இந்தசர்வே நரேந்திர மோடியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள சுப.உதயகுமாரன் போன்று சிலதனியார் அமைப்பாளர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பிரபல தொழிலதிபர்கள் ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே ஆம் ஆத்மி கட்சி, மோடி அலையையும் தாண்டி வரும் பாராளுமன்ற தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றும் என கூறப்படுகிறது.
|