|
|||||
ராஜ்நாத்சிங், மோடியை சந்தித்தார் வைகோ !! |
|||||
ம.தி.மு.க,. பொதுச் செயலாளர் வைகோ இன்று பா.ஜ.,தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் இந்திய பிரதமராக பதவியேற்க இருக்கும் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடையே வைகோ பேசியதாவது, பா.ஜ.,வின் பெரும் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்தேன். மோடியை பிரதமர் வேட்பாளராக தொலைநோக்கு பார்வையுடன் அறிவித்தமைக்காக ராஜ்நாத்சிங்கை பாராட்டினேன். அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். இந்த வெற்றியிலேயே நான் மகிழ்ச்சியடைய முடியாமல் நான் கவலைப்பட்டது நீங்கள் தோற்றது தான் என ராஜ்நாத்சிங் வருத்தம் தெரிவி்த்தார். அதற்கு, 'நான் போராட்டக்காரன். எனக்கு எந்த கவலையும் இல்லை. மகிழ்ச்சியுடன் தான் இருக்கிறேன்,' என்று கூறினேன். நான் முன்னர் கூறியபடி 330 இடங்களுக்கும் மேலாக தேசிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என வைகோ தெரிவித்தார். |
|||||
by Swathi on 19 May 2014 0 Comments | |||||
Tags: Vaiko Rajnath Singh Modi ராஜ்நாத்சிங் மோடி வைகோ | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|