பான் கார்டுக்காக விண்ணப்பிக்க பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிதாக பான் கார்டு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப பாரத்துடன் அதற்கான தொகை மற்றும் சான்றிதழ்களின் நகலை மட்டும் கொடுத்தால் போதுமானதாக இருந்தது. இந்நிலையில், பான் கார்டு கட்டணத்தை உயர்த்தியதோடு, விண்ணப்பத்துடன் அசல்(ஒரிஜினல்) சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என சமீபத்தில் அரசு உத்தரவு பிறப்பித்தது. நிதியமைச்சகத்தின் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, புதிய உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பழைய முறையையே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
|