ராகு கேது பரிகார தலம், சிவன், அம்பாள், சண்முகர் என மூவருக்கும், மூன்று கொடிமரத்துடன் அமைந்த தலம் இது. மகாலட்சுமி, திருமாலை மணந்து கொள்வதற்காக இங்கு சிவனை வணங்கியதாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்குள்ள ஒரு தூணில் மகாலட்சுமி கைகளில் கலசத்தை வைத்து, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தபடி காட்சி தருகிறாள். மகாலட்சுமி, சரஸ்வதியும் மற்றொரு சன்னதியில் அருகருகே இருக்கின்றனர்.
சரஸ்வதியிடம் வீணை கிடையாது. இக்கோயிலுக்கான விநாயகர், எதிரே தனிச்சன்னதியில் இருக்கிறார். பக்தர்கள் இவருக்கு தேங்காய் மாலை சாத்தி, தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். பிரகாரத்தில் சண்முகர் தனிச்சன்னதியில் ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஒவ்வொரு சஷ்டியின்போதும் பிரகாரத்தில் விநாயகர், சண்முகர், சூரியன் மனைவி சங்கிலி நாச்சியாருடன் சுந்தரர் மற்றும் வள்ளலாருக்கு சன்னதி இருக்கிறது.
கோஷ் டத்தில் யோக தெட்சிணா மூர்த்தியும் அருள்பாலிக் கிறார்கள். பூச நட்சத்திரத்தில் வள்ளலாருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தைப்பூசத்தன்று உற்சவ வள்ளலார் வீதியுலா செல்கிறார். இதுதவிர உற்சவர் சண்முகர் சன்னதியிலும் வள்ளலார் சிலை உள்ளது. |