-> பொதுவாகவே வீட்டின் வெப்பநிலையை பராமரிப்பதில் பெயிண்டிட்ற்கு முக்கிய பங்கு உள்ளது. வீடிற்கு டார்க் கலர் பெயிண்டுகளுக்கு பதிலாக வெளிர் நிற பெயிண்டுகளை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் டார்க் கலர் பெயிண்டுகள் வெப்பத்தை பிரதிபளிப்பதால் வெப்பகதிர்கள் வீட்டினுள்ளே தங்கி வீட்டின் வெப்பநிலையை அதிகரிக்கிறது. வீட்டிற்கு வெள்ளை நிற பெயிண்டுகள் அடிப்பதால் வீட்டின் வெப்பநிலை பெரும்பாலும் குறைக்கப்படுகிறது.
-> பொதுவாக வீட்டின் சமையல் அறையில்தான் மற்ற அறைகளை விட வெப்பம் அதிகரித்து காணப்படும். எனவே சமையல் செய்ய ஆரம்பிக்கும் போதே ஜன்னல்களை திறந்து வைத்து, சிம்னி மற்றும் எக்சாஸ்ட்பேனை ஓட விடுவது நல்லது.
-> வீட்டின் மேல்தளம் மொட்டைமாடியாக இருக்கும் பட்சத்தில் வெப்பம் வீட்டிற்குள் இறங்கும் வாய்ப்பு அதிகம். எனவே வெப்பம் கீழே இறங்காமல் இருப்பதற்கு சுண்ணாம்பு, செங்கல் கொண்ட கலவையை மேல்தளத்தில் போடுவது வழக்கத்தில் இருந்து வந்தது. இதற்கு சுர்க்கி என்று கூறுவார்கள். ஆனால் நாளடைவில் இந்த சுர்க்கி போடும் முறையை மாற்றி ஓடுகளை பதிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. சுண்ணாம்பு மற்றும் செங்கல் கலவையானது குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியாகும். முறையாக சுர்க்கி போடப்பட்ட வீடுகளில் மேல்கூரையில் இருந்து வெப்பம் வீட்டிற்குள் இறங்குவது என்பது மிக குறைந்த அளவே இருக்கும். எனவே வீடு கட்டும்போது சுர்க்கி போடுவதை அவசியமாக கருதினால் கோடைகால தொல்லையில் இருந்து ஓரளவு விடுபடலாம்.
-> வீட்டின் வெப்பத்தை குறைக்க வீட்டை சுற்றிலும் தோட்டம் அமைப்பது அவசியமாகும். ஏனெனில் தோட்டத்தில் உள்ள செடிகள் வெப்பத்தை தனித்து குளிர்ச்சியை உண்டாக்குகிறது. மேலும் வீட்டிற்குள்ளும் தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம்.
-> வீட்டின் அனைத்து அறைகளிலும் தேவையில்லாத நேரங்களில் மின்விசிறிகளை சுழலவிடுவதை தவிர்த்து இயற்கை காற்று உள்ளே வரும் வகையில் ஜன்னல்களை திறந்து வைப்பது நல்லது. ஜன்னல்களுக்கு காட்டன் திரைகளை பயன்படுத்தலாம்.
-> கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே ஏசி,ஏர்கூலர் போன்றவற்றை சர்வீஸ் செய்வது அவசியமாகும். மேலும் ஏசிக்களில் உள்ள இன்டோர்மெஷினை சுத்தம் செய்யவும்.
-> தினந்தோறும் வீட்டை சுத்தம் செய்து, மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது கிருமிநாசினி கொண்டு துடைக்க வேண்டும். மேலும் தலகாணி விரிப்புகள், மெத்தை விரிப்புகள், ஷோபா கவர்கள் ஆகியவற்றை அடிக்கடி மாற்றவும்.
|