வைகை நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. மூலவர் வரதராஜர், புண்ணியகோடி விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமான தரிசனம் மிக விசேஷமானது.இக்கோயி லுக்குச் செல்பவர்கள் முதலில் விமானத்தை தரிசித்து விட்டு, அதன்பின்பு சுவாமியை தரிசிக்கிறார்கள். இதனால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைப்பதாக நம்பிக்கை.வைகாசியில் பிரம்மோற்ஸவம் கொண்டாடுகின்றனர்.புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு திருப்பதி வெங்கடாஜலபதி அமைப்பில் அலங்காரம் செய்யப்படுவது விசேஷம். மூன்றாம் சனிக்கிழமை மட்டும் சுவாமி, வைர அங்கி அணிந்து காட்சி தருவார். எனவே இவருக்கு, "திருப்பதி பெருமாள்' என்ற பெயரும் உண்டு.வைகாசி பவுர்ணமியன்று சுவாமி புஷ்பப்பல்லக்கில் எழுந்தருளி, கள்ளழகர் வேடத்தில் வைகையில் இறங்குகிறார். அதன்பின், குதிரை வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து விமோசனம் தருகிறார். இந்த வைபவம் இங்கு மிக விமரிசையாக நடக்கும்.சித்திரைப் பிறப்பு மற்றும் ஐப்பசி வளர்பிறையில் வரும் நாகபஞ்சமியன்று, சுவாமி கருடசேவை சாதிக்கிறார்.
_
வைகை நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. மூலவர் வரதராஜர், புண்ணியகோடி விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமான தரிசனம் மிக விசேஷமானது. இக்கோயிலுக்குச் செல்பவர்கள் முதலில் விமானத்தை தரிசித்து விட்டு, அதன்பின்பு சுவாமியை தரிசிக்கிறார்கள். இதனால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைப்பதாக நம்பிக்கை.
வைகாசியில் பிரம்மோற்ஸவம் கொண்டாடுகின்றனர்.புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு திருப்பதி வெங்கடாஜலபதி அமைப்பில் அலங்காரம் செய்யப்படுவது விசேஷம். மூன்றாம் சனிக்கிழமை மட்டும் சுவாமி, வைர அங்கி அணிந்து காட்சி தருவார். எனவே இவருக்கு, "திருப்பதி பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
வைகாசி பவுர்ணமியன்று சுவாமி புஷ்பப்பல்லக்கில் எழுந்தருளி, கள்ளழகர் வேடத்தில் வைகையில் இறங்குகிறார். அதன்பின், குதிரை வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து விமோசனம் தருகிறார். இந்த வைபவம் இங்கு மிக விமரிசையாக நடக்கும்.சித்திரைப் பிறப்பு மற்றும் ஐப்பசி வளர்பிறையில் வரும் நாகபஞ்சமியன்று, சுவாமி கருடசேவை சாதிக்கிறார்._ |