இங்குள்ள வராஹர் லட்சுமிக்கு பதிலாக பூமாதேவியை மடியில் தாங்கியிருக்கிறார்.கேரளத்தில் வராஹ வடிவில் மகாவிஷ்ணுவின் பிரதிஷ்டை செய்யப்பட்ட
ஒரே கோயில் இது. மாலை நேரத்தில் குடும்பத்துடன் வராஹ மூர்த்தியை வழிபடுவது விசேஷம். இவர் மூன்றரை அடி உயரம் உள்ளவர். மனதில் நினைத்தது
நடக்கவும், திருமணத்தடை நீங்கவும், மூன்று மாதங்கள் அவரவர் பிறந்த நட்சத்திர நாட்களில் ருக்மணி கிருஷ்ண பூஜை செய்யலாம். வேலை கிடைக்கவும், வீடு
கட்டவும் நிலத்திலுள்ள மண்ணை எடுத்து அபீஷ்ட சித்தி பூஜை நடத்துகின்றனர். சிவன் சந்நிதியில், மார்கழி மாத முதல் திங்கள்கிழமை ஆயிரம் குடம் புனிதநீர்
அபிஷேகம் செய்யப்படுகிறது. லட்சுமி நாராயணர், விநாயகர், ஐயப்பன், துர்க்காதேவி, முருகன் சந்நிதிகளும் உள்ளன. 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த
கோயிலில் திருப்பணி துவங்கியுள்ளது.மூலவர் நான்கு கைகள் உடையவர். வலது கீழ்கையில் தாமரை, இடது கீழ்கையில் கதை உள்ளது. வராஹம் என்றால்
பன்றி. இதை அனுசரித்து ஊரின் பெயரும் பன்னியூர் ஆனது.
இங்குள்ள வராஹர் லட்சுமிக்கு பதிலாக பூமாதேவியை மடியில் தாங்கியிருக்கிறார். கேரளத்தில் வராஹ வடிவில் மகாவிஷ்ணுவின் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரே கோயில் இது. மாலை நேரத்தில் குடும்பத்துடன் வராஹ மூர்த்தியை வழிபடுவது விசேஷம். இவர் மூன்றரை அடி உயரம் உள்ளவர். மனதில் நினைத்தது நடக்கவும், திருமணத்தடை நீங்கவும், மூன்று மாதங்கள் அவரவர் பிறந்த நட்சத்திர நாட்களில் ருக்மணி கிருஷ்ண பூஜை செய்யலாம்.
வேலை கிடைக்கவும், வீடு கட்டவும் நிலத்திலுள்ள மண்ணை எடுத்து அபீஷ்ட சித்தி பூஜை நடத்துகின்றனர். சிவன் சந்நிதியில், மார்கழி மாத முதல் திங்கள்கிழமை ஆயிரம் குடம் புனிதநீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. லட்சுமி நாராயணர், விநாயகர், ஐயப்பன், துர்க்காதேவி, முருகன் சந்நிதிகளும் உள்ளன. 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கோயிலில் திருப்பணி துவங்கியுள்ளது.
மூலவர் நான்கு கைகள் உடையவர். வலது கீழ்கையில் தாமரை, இடது கீழ்கையில் கதை உள்ளது. வராஹம் என்றால் பன்றி. இதை அனுசரித்து ஊரின் பெயரும் பன்னியூர் ஆனது. |