LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

தமிழறிஞர் முனைவர் எஸ். அருள்மொழி ( 1968)

முனைவர் எஸ். அருள்மொழி ( 1968) … தமிழ்க் கணினிமொழியியல், மொழித் தொழில் நுட்பத்துறையில் பல அரிய பணிகளை மேற்கொண்டுவரும் இன்றைய இளைய தலைமுறை ஆய்வாளர். வேதியியலில் இளங்கலைப் பட்டமும் (1988), மொழியியலில் முதுகலைப் பட்டமும் (1990) கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பெற்றார். பின்னர் ஹைதராபாத் நடுவண் பல்கலைக்கழகத்தில் செயற்படுத்தமொழியியல் மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் ( Centre for Applied Linguistics and Translation Studies – Centre for ALTS) எம் ஃபில் பட்டமும் (1992) , செயற்படுத்த மொழியியலில் ( Applied Linguistics) முனைவர் பட்டமும் (1999) பெற்றார். அறிவியல் தொழில்நுட்பத்துறைக் கலைச்சொற்களின் மொழிபெயர்ப்புபற்றி ( Dynamics of Translation in Reconstructing Sc-Tec Terminilogies) எம் ஃபில் படிப்பில் ஆய்வு மேற்கொண்டார்.

இலக்கண உருபன்-ஒலியன் பற்றிக் ( Aspects of Inflectional Morpho-Phonology: A Computational Approach) கணினிமொழியியல் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். மைசூர் இந்தியமொழிகள் நடுவண் நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சில ஆண்டுகள் பணியாற்றியபிறகு, அண்ணா பல்கலைக்கழகத்தின் AU-KBC மையத்தில் தமிழ்க் கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கிற ஆய்வுக்குழுவில் ஒருவராக ஐந்து ஆண்டுகள் (2000-15) செயல்பட்டார். பின்னர் ஆந்திரா குப்பத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் கணினிமொழியியல், திராவிடமொழிகள் ஆய்வுத் துறையில் எட்டு ஆண்டுகள் (2005-13) பணியாற்றினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ( 2013 –இலிருந்து) ஹைதராபாத் நடுவண் பல்லைக்கழகத்தின் செயற்படுத்த மொழியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவருடைய முக்கியமான ஆய்வுத்தளமான கணினிமொழியியல் துறையில் தரவுமொழியியல் ( Corpus Linguistics) , சொல்வலை ( WordNet) , இயந்திரமொழிபெயர்ப்பு ( Machine Translation - MT) ஆகிய பிரிவுகளில் முக்கியமான ஆய்வுத்திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டுள்ளார். சொல்வலைத் திட்டத்திற்கான ( WordNet) உலக அளவிலான முறையான பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ் , தெலுங்கு , ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளுக்குமான ஆய்வுத் திட்டங்களை இந்திய நடுவண் அரசின் தகவல்தொழில்நுட்பத்துறையின் நிதி உதவியுடன் பல இலட்சம் மதிப்புள்ள திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டுள்ளார். கணினிமொழியியல், குறிப்பாக இயந்திர மொழிபெயர்ப்புக்கான சொற்களஞ்சியத்தை ( Lexical Resources) உருவாக்குவதில் முக்கியப் பங்கு ஆற்றிவருகிறார். தமிழ்ச்சொல்வலை ( Tamil WordNet) , தமிழுக்கான வினைச்சொல்வலை ( VerbNet for Tamil) , தெலுங்கு-தமிழ் இயந்திர மொழிபெயர்ப்பு ( Telugu – Tamil MT), இந்திய மொழிகளுக்கான தரவுத்தளம் உருவாக்கம் ( Indian Languages Corpora Initiative ) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். தமிழுக்கான பலவகை மென்பொருள் உருவாக்கங்களுக்கு இவரது பணிகள் பெரிதும் பயன்படும். தேசிய அளவிலான கணினிமொழியியல், மொழித்தொழில் நுட்பக் கருத்தரங்குகள், பயிலரங்குகள் பலவற்றில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகள் அளித்துள்ளார்.

2012 –ஆம் ஆண்டு என்னுடன் இணைந்து மலேசியாவில் கோலாலாம்பூர் பல்கலைக்கழகத்தில் மலேசியா ஆசிரியர்களுக்கும் ஆய்வாளர்களுக்குமான கணினிமொழியியல் பயிலரங்கம் ஒன்றில் பயிற்சியாளராகப் பணி மேற்கொண்டார். தமிழகத்தில் கணினிமொழியியலில் முறையான பயிற்சிகளைப் பெற்ற விரல்விட்டு எண்ணக்கூடிய இளம் ஆய்வாளர்களில் ஒருவரான இவரைத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் , தமிழ்க் கணினிமொழியியல் ஆய்வு மையங்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

மின்னஞ்சல் முகவரி - arulmozi@gmail.com, arulmozi@uohyd.ac.in

-தெய்வ சுந்தரம் நயினார்

 

 

by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சமஸ்கிருதம் ஆக்கப்பட்ட  தமிழ்ச் சொற்கள். சமஸ்கிருதம் ஆக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்.
மூன்று தமிழ்ச்சங்கங்களின் சிறப்புகள் மூன்று தமிழ்ச்சங்கங்களின் சிறப்புகள்
தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும் தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்
செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும் செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும்
தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ? தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ?
It seems Tamil is the only group that does not use a borrowed word to say language. It seems Tamil is the only group that does not use a borrowed word to say language.
தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு
மணிமேகலை அமுத சுரபி நாள்   - அட்சயதிதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பு உண்டா? மணிமேகலை அமுத சுரபி நாள் - அட்சயதிதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பு உண்டா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.