LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

முந்தைய தமிழ் இலக்கண நூல்களும் இன்றைய தமிழ் மொழி இலக்கணமும்

ஒரு மொழியின் இலக்கணம் என்பது அம்மொழியின் கட்டமைப்பு, மொழிச்செயல்பாடு ஆகியவற்றில் நீடிக்கும் அல்லது இயங்கும் புறவயமான விதிகளை (objective rules or laws) எடுத்துக்கூறுவதுதான்!
 
அதாவது ஒரு மொழியில் இருக்கிற உண்மைகளைக் ''கண்டறிவதுதான்'' (discovery) ! இலக்கண உண்மைகள் அல்லது விதிகள் ''உருவாக்கப்படுவதில்லை'' (invention) !
 
ஒரு மொழியின் அமைப்பும் செயல்பாடும் அம்மொழிபேசும் சமுதாயத்தால் - ஒட்டுமொத்த மக்களால் - தேவைகளையொட்டி அமைகின்றன ! மாறுகின்றன! வளர்கின்றன!
 
ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்ப்புலமையும் ஆய்வுத்திறனும் உடைய அறிஞர்கள் - தொல்காப்பியர், நன்னூலார், கல்லாடர் போன்றோர் - அவர்கள் வாழும் காலகட்டத்தின் மொழியின் தரவுகளை முறையாகச் சேகரித்து, வகைப்படுத்தி, அவற்றில் மறைந்துள்ள இலக்கண விதிகளைக் கண்டறிந்து, முறையாக வரிசைப்படுத்தி, இலக்கணநூல்களாக முன்வைக்கின்றனர்.
 
ஒருவருக்கு அடுத்த காலகட்டத்தில் தோன்றும் இலக்கண அறிஞர்கள் இரண்டு பணிகளைச் செய்கின்றனர்: (1) முந்தைய அறிஞர்கள் முன்வைத்த இலக்கணவிதிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவற்றைக் களைகின்றனர். (2) அடுத்து, தங்களது காலகட்டத்தின் மொழித்தரவில் முந்தைய அறிஞர்களின் இலக்கணத்தைப் பொருத்திப் பார்க்கும்போது, அதற்கு அடங்காத அல்லது அதை விளக்கமுடியாத கூறுகளைக் கண்டறிகின்றனர். இந்த விளக்கமுடியாத அல்லது முந்தைய இலக்கணத்திற்குள் அடங்காத கூறுகளுக்கு முக்கியக் காரணம்... அந்த மொழியானது சமுதாயத்தின் புதிய தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாற்றம் அல்லது வளர்ச்சியைப் பெற்றிருக்கலாம்!
 
முந்தைய இலக்கண அறிஞர்கள், தங்களது காலக்கட்டத்திற்குப் பின்னர் மாறும் அல்லது வளர்ச்சியடையும் மொழியின் மொழிக்கூறுகளை முன்கூட்டியே கூறமுடியாது! கூறவும் மாட்டார்கள்!
 
எனவே அந்தக் கடமை... பிந்தைய காலகட்ட மொழி ஆய்வாளர்களின் கடமையாகும்!
ஆகவே, ஒரு மொழிச் சமுதாயத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ... மொழி ஆய்வாளர்கள் தங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இலக்கணத்தை வளர்க்கின்றனர். மேம்படுத்துகின்றனர்! இதுவே அறிவியல் வளர்ச்சியின் அடிப்படையாகும்!
ஆனால் இப்பணியை மேற்கொள்வதற்கு இந்த அடுத்த கட்ட மொழி ஆய்வாளர்களுக்கு முக்கியமாக இரண்டு தேவைப்படுகின்றன! (1) முந்தைய காலகட்டத்தில் முன்வைக்கப்பட்ட இலக்கணம் ( (2) தங்கள் காலகட்டத்தில் நிலவுகிற மொழியின் தரவுகள் (Corpus)!
இவர்கள் தங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் முன்வைக்கப்பட்ட இலக்கண விதிகளை ... தங்கள் காலகட்ட மொழித்தரவுகளுக்குப் பொருத்திப் பார்க்கவேண்டும். அவ்வாறு செய்யும்போது, ஏதாவது ஒரு மொழிப்பண்பை அந்த முந்தைய இலக்கண விதிகள்கொண்டு விளக்கமுடியவில்லை என்றால் ... அதற்குக் காரணம் முந்தைய இலக்கண ஆசிரியர்கள் அந்த மொழிக்கூறுகளைக் காணாமல் விட்டுவிட்டார்களா? அல்லது அந்த மொழிக்கூறு புதிதாகத் தோன்றிய ... வளர்ந்த மொழியின் புதிய கூறா என்பதைப் பார்க்கவேண்டும்!
இங்கு நான் வலியுறுத்துவது... இந்தப் பணியில் ஈடுபடுகிற ஆய்வாளர்களுக்கு அவர்களுக்கு முந்தைய காலகட்ட இலக்கணம் தெளிவாகத் தெரிந்திருக்கவேண்டும்! ஏனென்றால், சிலவேளைகளில் முந்தைய இலக்கண அறிவில் அவர்களுக்குள்ள பற்றாக்குறை அவர்களைத் தவறான முடிவுகளுக்கு இட்டுச் சென்றுவிடும்!
 
இந்த அடிப்படையை ஏற்றுக்கொண்டால்... இன்று நாம் செய்யவேண்டிய பணிகள் ....
 
(1) முந்தைய காலக்கட்டத்து இலக்கணங்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.
(2) இன்றைய தமிழ்மொழிக்கான தரவுகளை - எழுத்திலிருந்து பொருண்மைவரை (from Phonetics to Semantics, Pragmatics) ஆய்வதற்குத் தேவையான தரவுகளை முறையாகத் திரட்டவேண்டும் (Representative and Balanced corpus) !
பின்னர் முந்தைய இலக்கண விதிகளைக்கொண்டு, இன்றைய மொழித்தரவுகளை ஆய்வுசெய்யும்போது கண்டறியப்படுகிற புதிய இலக்கணக் கூறுகளை வகைப்படுத்தி... அவற்றை இன்றைய கட்டத்திற்கும் பொருந்திவருகிற முந்தைய இலக்கணவிதிகளோடு இணைத்து... இன்றைய மொழிக்கான இலக்கணத்தை முறையாக வைக்கவேண்டும்!
இதைத்தான் நான் இன்றைய தமிழுக்கான புதிய இலக்கணம் என்று கூறுகிறேன்! முந்தைய இலக்கணத்தையே புறக்கணித்துவிட்டு ... ''அனைத்துமே தங்கள் கண்டுபிடிப்புக்கள்'' என்று யாராவது கூறினால், அது அவர்களுடைய அறிவீனத்தையே வெளிக்காட்டி நிற்கும் என்பதில் ஐயம் இல்லை!
இன்று தமிழுக்கு .. குறிப்பாக எழுத்துவழக்குக்கு ... மேற்கூறிய பணிகள் தேவைப்படுகின்றன! நமக்கு இன்று உள்ள ஒரு பெரும் வாய்ப்பு... கணிதம், புள்ளியியல், கணினியியல் போன்ற துறைகளின் வளர்ச்சிகள்!
தரவுகளை முறையாகச் சேகரிப்பதற்காகப் புள்ளியியல் துறையில் முன்வைக்கப்படுகிற கருத்துக்கள், வழிமுறைகள் மிகவும் உதவும். கிடைப்பதையெல்லாம் தரவில் இணைப்பது அல்ல தரவுத்தளம் உருவாக்கம். அதற்கு முறையான வழிமுறைகள் உண்டு.
அடுத்து, கணினியின் வளர்ச்சி! வியக்கத்தக்க அளவில் பெருந்தரவுகளை ( Big data / Big corpus)இன்று உருவாக்கி, சேமிக்கமுடியும்! அதற்கான தரவு உருவாக்க, ஆய்வுக்கான மென்பொருள்களை ( SQL போன்றவை) கிடைக்கின்றன!
அடுத்து, பல முனைகளில்... பல வழிகளில் ... நமது ஆய்வைத் தொடர்வதற்கான கணினி நிரல்கள் (Programs) ! கணினி நிரலாளர்கள் (software engineers) ஒரு முறையான தர்க்கவியல் (logic) கணிதவியல் (mathematics) அடிப்படையில் தங்கள் ஐயங்களை விளக்குவார்கள்! அவர்களுக்குப் பொறுமையாக இலக்கண ஆய்வாளர்கள் விடை அளிக்கவேண்டும்!
ஆனால் மேற்கூறிய அனைத்துக்கும் மேலானது... மொழி ஆய்வாளரின் தெளிவான திட்டம்... இலக்கண அறிவு!
இவ்வாறு... பல துறைகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து செயலாற்றும்போதுதான் இன்றைய தமிழுக்கான ஒரு முறையான இலக்கணத்தை உருவாக்கமுடியும்!
 
இதுபோன்ற இலக்கணங்கள் இன்று தமிழுக்கு இல்லாததால்தான்... கணினியிலும் தமிழ் முழுமையாக இடம்பெறமுடியவில்லை!
இதுபோன்ற தமிழ் இலக்கணங்கள் தமிழுக்கு உருவாக்கப்படவில்லை என்றால் .. கூகுள் , மைக்ரோசாப்ட் போன்ற மிக மிகப் பெரிய பன்னாட்டுக் கணினி நிறுவனங்களாலும் தமிழுக்குத் தேவையான சிறந்த மென்பொருள்களை உருவாக்கித் தரமுடியாது! அது நரம்புவலையம் (neural network) . செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) , ஆழ்நிலைக்கற்றல் (Deep Learning) போன்ற புதிய ஆய்வுமுறைகளையும் தமிழுக்குச் செயல்படுத்த வேண்டுமென்றால்... நான் முன்கூறிய அறிவியல் அடிப்படையிலான தமிழ் இலக்கணம் உருவாக்கப்படவேண்டும்!
 
எனவே, தமிழ்மொழியின் இன்றைய இலக்கணம் என்பது பல துறைகள் சார்ந்த ஒரு மாபெரும் பணியாகும்! ஒரு தனிமனிதரால் இப்பணியைத் தனித்து செய்ய இயலாது! அது வீண் முயற்சியாகவே அமைந்துவிடும்!
பதிவு ஒரு நீண்ட பதிவாக அமைந்துவிட்டது! ஏதோ எழுதவேண்டும் என்று நினைத்தேன். எழுதிவிட்டேன். மன்னிக்கவும்!
by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.