LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

தமிழறிஞர்  முனைவர் துரை. மணிகண்டன் ( 1973)

முனைவர் துரை. மணிகண்டன் ( 1973) ... தமிழ் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிற ஒரு துடிப்புள்ள தமிழ் ஆய்வாளர். கணினித்தமிழ் உலகில் வலைப்பூக்கள் மலர்ந்து மணம் தரவேண்டும் என்ற ஒரு உயரிய நோக்கில் இடைவிடாது தனது பயிலரங்கப் பயணத்தை மேற்கொண்டுவருபவர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் தமிழில் இளங்கலை, முதுகலை , ஆய்வியல் நிறைஞர் ஆகிய பட்டங்களைப் பெற்றவர். தேசியக் கல்லூரியில் ( பாரதிதாசன் பல்கலைக்கழகம்) 'இராஜம் கிருஷ்ணன் புதினங்களில் மனித உரிமைச் சிந்தனைகள் ' என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். கணினிப்பிரிவிலும் சான்றிதழ் பெற்றவர். கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்ப் பேராசியராகத் திருவரங்கத்தில் ( ஸ்ரீரங்கம்) பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பணியாற்றிவருகிறார். தமிழகத்தில் தமிழ் இணையம், வலைப்பூக்கள் ஆகியவற்றில் ஈடுபாடு உடைய எவருக்கும் இவரைத் தெரியாமல் இருக்கமுடியாது. 'தமிழ்க்கணினி - இணையப் பயன்பாடுகள்', ' இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்', 'இணையமும் தமிழும்', ' இணையத்தில் தமிழ்வலைப்பூக்கள்' என்று நான்கு சிறந்த நூல்களை இணைய ஆர்வலர்களுக்காக உருவாக்கி வெளியிட்டுள்ளார். மேலும் இரண்டு நூல்களை - ' இலக்கிய இன்பம்', மனித உரிமைச் சிந்தனைகள்' - வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் வலைப்பூக்கள், தமிழ் இணையம், விக்கிபீடியா ஆகிய தலைப்புகளில் சிறப்புரை ஆற்றியும் பயிலரங்குகள் நடத்தியும் உள்ளார். 30-க்கும் மேற்பட்ட தேசியக் கருத்தரங்குகளில் பங்கேற்று, தமிழ்தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற உத்தமத்தின் தமிழ் இணையக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, ஆய்வுக்கட்டுரை வழங்கினார்.

'அரிமா நோக்கு', ' செந்தமிழ்ச்செல்வி', 'கலைக்கதிர்', 'தமிழ் மாருதம்', ' தி இந்து - தமிழ்) இதழ்களில் 25-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவருடைய ' இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்' என்ற நூலுக்காக 2011-இல் 'படைப்பியல் பட்டயம் ( சிறந்த அறிவியல் நூலுக்கான முதல் பரிசு) ' என்ற விருதைத் திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழுவும் முத்தமிழ் கலைப்பண்பாட்டு மையும் இணைந்து வழங்கின. இவரே ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பூக்களை உருவாக்கி, ( http://manikandanvanathi.blogspot.in ,http://manidevi.blogspot.in , http://kapilaparanar.blogspot.in ) தேவையான செய்திகளை அளித்துவருகிறார். இவரைப்பற்றிய தகவல்கள் விக்கீபீடியாவிலும் இணைக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்றாலே அனைவருக்கும் நினைவில் வரும் ஒரு சிறந்த தமிழ்ப் பேராசிரியராக விளங்கும் முனைவர் துரை. மணிகண்டன் அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துவோம்.

by Swathi   on 21 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.