தேவையானவை :
1. அரிசி மாவு – ஒரு கப்
2. மைதா மாவு – ஒரு கப்
3. ரவை – ஒரு கப்
4. தேங்காய்(துருவியது) – கால் கப்
5. சீரகம் – கால் டீஸ்பூன்
6. பெருங்காயம் – சிறிதளவு
7. மிளகாய் தூள் – தேவைகேற்ப
8. கொத்தமல்லி – சிறிதளவு
9. எண்ணெய் – தேவைகேற்ப
10. உப்பு – தேவைகேற்ப
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, ரவை ஆகியவற்றுடன் தேங்காய் துருவல், சீரகம், உப்பு, மிளகாய் தூள், எண்ணெய், பெருங்காய தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து, தண்ணிர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். பிறகு, கலந்த மாவை சிறிதளவு எடுத்து விரல் போல உருட்டி கொள்ளவும்.
2. ஒவ்வொரு துண்டின் இரண்டு முனைகளையும் இணைத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்துத்தெடுத்தால் சுவையான கொடுபலே ரெடி.
|