தேவையானவை :
1. பொடியாக நறுக்கிய புதினா – ஒரு கப்
2. கேழ்வரகு மாவு – இரண்டு கப்
3. கடலை மாவு – நான்கு டீஸ்பூன்
4. அரிசி மாவு – நான்கு டீஸ்பூன்
5. உப்பு – தேவைகேற்ப
6. கறிவேப்பிலை – சிறிதளவு
7. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
8. மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
9. தண்ணிர் – சிறிதளவு
10. எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
1. முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, நறுக்கிய புதினா, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, கறிவேப்பிலை கொத்தமல்லி, மிளகாய் தூள், சிறிதளவு தண்ணிர் தொளித்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
2. இதன் பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை பக்கோடா போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
|