|
||||||||
பெட்ரோல், டீசலை சேமிக்க பெஸ்டான ஐடியாக்கள் !! |
||||||||
![]() வாகனம் வைத்திருப்போரின் பாக்கெட்டை காலி பண்ணுவதில் பெட்ரோல், டீசல் போன்ற வாகனங்களுக்கு பயன்படும் எரிபொருள்களின் பங்கு மிக முக்கியமானது. ஏனென்றால், இவற்றின் விலை மாதத்திற்கு மாதம் ஏறிக் கொண்டே போகிறது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வை நம்மால் கட்டுபடுத்த முடியாது என்றாலும், சில விஷயங்களை கடைபிடித்தாலே எரிபொருளுக்கு ஆகும் செலவை நாம் கணிசமாக குறைக்கலாம். இதோ அதற்கான சில டிப்ஸ்... வாகனங்களின் டயர்களில் எப்போதும், சரியான அளவு கற்று இருக்க வேண்டும். அதிகப்படியான அல்லது குறைவான கற்று இருந்தால் மைலேஜ் கிடைக்காது. மேலும் இது டயர்களையும் பாதிக்கும். புதிய டயர்களை மற்றும் போது, வாகன தயாரிப்பாளர்கள் பரிந்துரைத்த டயர்கலையே பயன்படுத்த வேண்டும். இரண்டு நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்தால் வாகனத்தை ஆப் செய்யவும். கியர் மாற்றும்போது மட்டும் கிளட்ச் பயன்படுத்தவும், கிளட்ச் பிடித்துக் கொண்டே வாகனத்தை ஓட்டக்கூடாது. காலை நேரங்களில் மட்டுமே எரிபொருளை நிரப்ப முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் எரிபொருள்களின் ஸ்பெசிபிக் கிராவிட்டி அதாவது அடர்த்தி காலை நேரங்களில் அதிகமாக இருக்கும். வாகனங்களை சீரான இடைவெளியில் பராமரிக்க(சர்வீஸ்) வேண்டும். இதனால் உங்கள் வாகனத்தின் செயல்திறன் எப்போதும் சிறப்பாக இருக்கும். எப்போதும், வாகன தயாரிப்பாளர்கள் பரிந்துரைத்த எரிபொருளையும், இஞ்சின் ஆயிலையும் பயன்படுத்த வேண்டும். வாகனங்களை ஓட்டும் போது தேவையான அளவே ஆக்ஸிலேட்டர் கொடுங்கள். திடீரென அதிகப்படியான ஆக்ஸிலேட்டர் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பிரேக் பிடிப்பதில் கவனம் கொள்ளுங்கள், ஆக்சிலேட்டர் கொடுத்தவுடன் உடனடியாக பிரேக் பிடிப்பதை முடிந்த அளவு தவிருங்கள். அதிக வேகத்தில் வாகனத்தை இயக்கினால், அதிக எரிபொருள் தேவைப்படும், டாப் கியரில் அளவான வேகத்தில் செல்வது எரிபொருளை சேமிக்க உதவும், சராசரியாக 50 முதல் 60 கி.மீ வேகத்தில் பயணிப்பது நல்லது. எந்த இடத்துக்குச் செல்கிறோமோ அதைத் திட்டமிட்டு, அங்கு செல்ல சுலபமான (கொஞ்சம் அதிக தூரம் என்றாலும் பரவாயில்லை) வழியைத் தேர்ந்தெடுத்துச் சென்றால், 20 சதவிகித எரிபொருளைச் சேமிக்க முடியும். இந்த டிப்ஸ்களை பின்பற்றி பாருங்கள்.... எரிபொருளோடு, பணத்தையும் சேமியுங்கள்...... |
||||||||
by Swathi on 03 Oct 2014 1 Comments | ||||||||
Tags: பெட்ரோல் டீசல் பெட்ரோல் சேமிப்பு டீசல் சேமிப்பு Save Petrol Save Diesel | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|