மூன்று கருவறையில் மூன்று சக்திகள் தனித்தனியாக ஒரே கோயிலில் அருள்பாலிப்பது சிறப்பு.மண்டபத்தைத் தாண்டியதும் மூன்று கருவறைகள் உள்ளன. ஒவ்வொரு கருவறைக்கு மேலும் தனித்தனி விமானங்கள். முதலில் ஞான சரஸ்வதி நான்கு கரங்களுடன் அமர்ந்துள்ளாள். மேலிரு கரங்களில் ஜபமாலையும், கமண்டலமும் ஏந்தியிருக்கிறாள். இடது கீழ் கரத்தில் ஓலைச்சுவடியும், வலது கீழ் கரத்தில் சின்முத்திரை காட்டி தரிசனம் தருகிறாள்.
இவளைப் பணிய, படிப்பாற்றலும், படைப்பாற்றலும் மேலோங்குகிறது. இவளை அடுத்து கிரியா சக்தியாகத் திகழும் மூகாம்பிகை அமர்ந்துள்ளாள். பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் இவள், மேலிரு கரங்களில் சங்கு சக்கரமும், கீழ் வல இடக்கரங்கள் சின்முத்திரையும் வரதஹஸ்தமும் உள்ளது. மூகாம்பிகையின் அருள் பார்வை செயல் முடிக்கும் ஆற்றல்,மனவலிமையைத் தரும். அச்சத்தை போக்கும். |