எப்போதும் போர்க்கோலத்தில் காணப்படும் சாமுண்டீஸ்வரி இத்தலத்தில் தவக்கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.மகிஷாசுரனை வெற்றி கொண்ட அம்பிகை, விஜய ஜெய சாமுண்டீஸ்வரியாக இங்கு காட்சி தருகிறார். மகான்களும் முனிவர்களும் இங்கு தவம் செய்ததால் தபோவனம் என்றும், சித்தர்களின் இருப்பிடமாக இருந்ததால் சித்தர்கள் பூமி என்றும் முற்காலத்தில் இந்த இடம் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
இத்தலம் வருவோர் வாழ்வில் ஆனந்தம் பெருகும் என்பதால் ஆனந்தபுரி என்றும் கூறப்படுகிறது. மகிஷாசுரனை வதம் செய்தபின், அன்னை சாமுண்டீஸ்வரி இத்தலத்திற்கு வந்து தவமிருந்ததாக ஐதிகம்.அம்மனுக்கு வலப்புறம் பஞ்சமுக கணபதியும் , இடப்புறம் வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமண்யரும் உள்ளனர். இங்குள்ள ஈசன் ஆனந்தபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். |