சபரிமலையில், பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் ஐயப்பன், ஆரியங்காவில் மனைவியுடன் கிரகஸ்தராக காட்சி தருகிறார்.ஐயப்பனைத் தரிசிக்க விரும்பும் பெண்கள் தம்பதி சமேதராக இங்கு சென்று வரலாம். சாஸ்தா' என்னும் சொல்லை கிராமத்து மக்கள் "சாத்தன்', சாத்தான், சாஸ்தான்' என்றெல்லாம் பயன்படுத்துவர். "சாத்து' என்றால் "கூட்டம்'. காட்டிற்குள் இருக்கும் இவரை பக்தர்கள் கூட்டமாக வந்து வழிபடுவதால், இப்பெயர் பெற்றார். ஒரு சாரார் இவரை "அய்யனார்' என்பர்.
"ஐயன்' என்னும் சொல் "தலைவன்' என்றும், "தலைசிறந்தவன்' என்றும் பொருள். "ஆரியன்' என்ற சொல்லுக்கு "உயர்ந்தவன்' என்றே பொருள். "காவு' என்றால் "சோலை'. "உயர்ந்தவன் குடியிருக்கும் சோலை' என்று இதற்கு பொருள்.திருமண நிகழ்ச்சி இப்போதும், மார்கழி மாதத்தில் இத்தலத்தில் நிகழ்த்தப்படுகிறது. மதுரையில் இருந்து சவுராஷ்டிர இனத்தவர் தங்கள் குல பெண்ணுக்கு சீதனம் எடுத்துச் சென்று திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கின்றனர் |