தேவையானவை :
1. மைதா மாவு – 250 கிராம்
2. தயிர் – 50 கிராம்
3. உப்பு – தேவைகேற்ப
4. ஆப்பசோடா மாவு – ஒரு துளி
5. எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் தயிர், ஆப்பசோடா மாவு, தண்ணீர் ஆகியவை சேர்த்து மிருதுவாக்கும் வரை நன்கு பிசையவும் பிசைந்த மாவை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
2. இதனை சிறு சிறு பந்துகளாக உருட்டி வைக்கவும். பெரிய பூரிகளாக இட்டு எண்ணையை காயவைத்து பொரித்து எடுக்கவும். இதற்கு தொட்டு கொள்ள சென்னா மசாலா நன்றாக இருக்கும்.
|