ஓட்டுனரே இல்லாமல் இயங்கக் கூடிய "ரோபோ-டாக்ஸி'யை முன்னணி இணைய நிறுவனமான கூகிள் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த ரோபோ கார் பற்றி கூகிள் நிறுவன அதிகாரிகள் கூறியிருப்பதாவது, எங்கள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, சில முன்னணி கார் நிறுவனங்கள், இது போன்ற அதிநவீன கார்களை தயாரிப்பார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் அது நடக்க வில்லை. கடந்த 2010-ஆம் ஆண்டு தானியங்கித் தொழில்நுட்பத்தை உருவாக்கிய எங்கள் நிறுவனம், டொயோட்டா பிரையஸ் மற்றும் லெக்ஸஸ் கார்களில் பொருத்தி சோதனை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டது. ஆனாலும், கார் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை கூகுளுக்கு தர விரும்பாத வாகன நிறுவனங்கள், கூகுளுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வராரததால், தாமே கார் உற்பத்தியிலும் இறங்க கூகிள் முடிவு செய்துள்ளது. இதற்காக, சமீபத்தில் உலகின் முன்னணி கார் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான கான்டினென்டலுடன் பேசி வருவதாகவும், கூகுளின் வாகனத்துக்கு உதிரிபாகங்களை கான்டினென்டல் வழங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என ஜெர்மனி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
|