தேவையானவை:
1. கேழ்வரகு மாவு - 1/2 கிலோ
2. அரிசி மாவு 50 கிராம்
3. சீரகம் - சிறிதளவு,
4. மிளகாய்த் தூள், உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப
செய்முறை:
1. முதலில் கேழ்வரகை சுத்தம் செய்து, காய வைத்து அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
2. கேழ்வரகு மாவுடன், அரிசி மாவைச் சேர்த்து, உப்பு, மிளகாய்த் தூள், சீரகம் கலந்து, தண்ணீர் சேர்த்து, நல்ல பதத்தில் பிசைந்துகொள்ளவும்.
3. இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, ஒரு வெள்ளைத் துணியில் முறுக்காகப் பிழிய வேண்டும்.
4. பிறகு, வெயிலில் காயவைத்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
5. அருமையான, ஆரோக்கியமான கேழ்வரகு முறுக்கு தயார்.
|