LOGO

கிளிஞ்சிகுப்பம் அய்யனார் கோவில்

  கோயில்   கிளிஞ்சிகுப்பம் அய்யனார் கோவில்
  கோயில் வகை   குலதெய்வம் கோயில்கள்
  மூலவர்   அய்யனார்
  பழமை   
  முகவரி
  ஊர்   கிளிஞ்சிகுப்பம்
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

கிளிஞ்சிகுப்பம் அய்யனார் கோவில்
கிலோமீட்டரில் உள்ள தவளக்குப்பத்தில் இறங்கி, மேற்கு நோக்கிச்செல்லும் சாலையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் பயணிக்க வேண்டும் . உள்ளூர் அட்டோக்களை பயன் படுத்துவதே மிகவும் சிறந்தது . கரையாம்புத்தூர் வரை செல்லும் சில பேருந்துகள் வரும். ஆனால் அவற்றின் இடைவெளி மிக அதிகம் . பேருந்தில் செல்பவர்களுக்கு , ஊருக்குள் போகாது . அங்கிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் பசுமையான வயல்களுக்கு நடுவில்  நடந்து சென்று ஊர் காவல் தெய்வம் அய்யனார் கோவிலை அடைய வேண்டும் . உள்ளூர் ஆடோக்களில் சென்றால் , ஊர் வரைச் சென்று , அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நிலத்தின் நடுவே நடந்து செல்ல வேண்டும். போகும் வழியிலேயே பூசாரின் வீடு உள்ளது . போகும் போதே உடன் அழைத்துச் செல்லலாம் .
வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு , இங்கு நடைமுறையில் உள்ளது . அது ஒன்றே இந்த ஊர் மக்களின் , அய்யனாரை குல தெய்வமாக அனைத்து மக்களின் மென்மையான குணத்தை வெளிபடுத்தும் . அந்த ஒரு விஷயத்தில் கிளிஞ்சிகுப்பம் அய்யனார் கோவில் தமிழகத்திற்கு மட்டுமல்ல , இந்தியாவிற்கே ஒரு வழி காட்டி. அதுபற்றி இறுதியில் மறக்காமல் சொல்கிறேன்.
கிளிஞ்சிகுப்பம் அய்யனார் கோவிலின் அழகை சொல்ல வார்த்தைகள் ஆயிரம் வேண்டும் . பக்தர்களின் தண்ணீர் வசதிக்காக இங்கு மின்சார  மோட்டார் உள்ளது . பல ஊர்களில் அய்யனார் மரம் செடி கொடிகள் அடங்கிய காடு போன்ற அடர்த்தியான இடத்தில் அமர்ந்து தன் காவல் தொழிலைச்செய்வார். கிளிஞ்சிகுப்பத்தில் இயற்கை எழில் சூழ ,  வளமான நிலங்களுக்கு நடுவே , தென்றல் தாலாட்ட அய்யனார் ,தேவியர்களுடன்  காட்சித் தருவார். 
அய்யனார் கோவிலைச் சுற்றி பொங்கல் வைக்க நிறைய இடங்கள் உள்ளன . விறகுக்கு குறையில்லை . அது மட்டுமல்ல . கோவிலின் அருகிலே வாழை மரங்கள் உள்ளன . கோவிலுக்கு வருபவர்கள் , அங்கு தேவைக்கு ஏற்ப வாழை இலை எடுப்பதால் , யாரும் எதுவும் சொல்வதில்லை.
சிலருக்குத் தெரியும் . பலருக்குத் தெரியாது .  அய்யனாரை  வேண்டி,  வேண்டுதல்  நிறைவேறினால் , வேண்டியபடி அய்யனாருக்கு பலி கொடுப்பாகள் . அது வேண்டுதலைப் பொறுத்து ஆடு , கோழி என இருக்கலாம் .சிலர் சில ஊர்களில் மது பானங்களையும் வைத்து வழிபடுகிறார்கள் . அப்படி பலியிடும்போது,  அய்யனார் கண்ணில் படாமல் தனியாககே பலியிடுவார்கள் .
ஆனால் அய்யனார் சைவ உணவையே உண்பார். எனவே படையல் போடும்போது அய்யனாருக்கு சர்க்கரை பொங்கல் , பழம் வைத்தே படைக்கப் படும்.
எல்லா ஊர்களிலும் இருப்பது போல் , இங்கேயும் அய்யனார் தனது இடது காலை மடித்து பீடத்தின் மேல் வைத்து , வலது காலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். அவரது இரு புறமும் தோழியர்கள் அப்படியே அமர்ந்து உள்ளனர்.
எல்லா நாட்களும் காலை , மாலை இரு வேலையும் அய்யனாருக்கு தவறாமல் விளக்கு ஏற்றுகிறார்கள் . பொதுவாக அனைத்து திங்கட்கிழமைகளிலும் வேண்டுதலுக்காக வருபவர்கள் அய்யனாருக்கு பொங்கல் வைத்து , படைத்து செல்கின்றனர் . பூசாரி கூப்பிடும் தூரத்தில் இருப்பதால் , மற்ற நாட்களில் வருபவர்களுக்கும் எவ்வித தடங்களும் இன்றி பூஜைக்கு வேண்டிய ஏற்பாட்டை செய்துத் தருகின்றனர்.
ஆடி மாதம் அய்யனாருக்கு ஏற்ற மாதம் . ஆடிமாதம் மழுவதும் திருவிழாவாகவே இருக்கும். ஆடி வெள்ளி, சனிக்கிழமைகளில் கூட்டம் அலை மோதும். அய்யனாருக்கு ஒரு பக்கம் பொங்கல் வைப்பார்கள் . ஒருபுறம் வேண்டுதல்   நிறைவேறியவர்கள் தலை முடியை அய்யனாருக்கு காணிக்கையாக செலுத்துவார்கள் . ஒருபுறம் அய்யனாரின் இஷ்ட தெய்வங்களுக்கு கோழி , ஆடு பலி கொடுத்து , சமைத்து சாப்பிடுவார்கள் . 
இங்கு சுற்றி உள்ள மக்களோடு மட்டுமில்லாமல் , வடக்கே  பாண்டிச்சேரி , அதன் சுற்று கிராம மக்களுக்கும் , தெற்கே கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் வரை , பல குடும்பங்களுக்கும் அய்யனார் குல தெய்வமாக நின்று அருள் பாவித்து , அனைவருக்கும் நல்லாசி அளிக்கிறார். 
இங்குள்ள பூசாரியின் சிறப்பு , இங்குள்ள மக்களின் பகுத்தறிவிற்கு ஓர் சான்று . கடவுளிடம் ஆண் , பெண் , ஏழை , பணக்காரர் , திருமணமானவர் , ஆகாதவர் , கணவனை இழந்தவர் , மனைவியை இழந்தவர், விதவை என்ற பாகுபாடு இல்லை என்பதற்கும் , கடவுளின் முன் எல்லோரும் சமம் என்பதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது . 
அதுபோலவே , கிராமத்தில் வாழும் மக்களிடம் , மேற்கத்தைய நாகரீகம் குறைவாக இருக்கலாமே தவிர , மனிதமும் , முற்போக்குச் சிந்தனையும் , பிறரை மதிக்கும் குணமும் அதிகம் என்பதற்கும் இந்தக் கோவிலும் , இங்கு வாழும் மக்களும் , இங்கு வரும் மக்களும் ஒரு சான்றாக விளங்குகின்றனர் .
ஆமாம். இந்தக் கோவிலின் பூசாரி ஒரு பெண் . பெண் என்பதைவிட ஒரு விதவை . கணவனை இழந்தவர் . அவர் தான் பூஜை செய்கிறார் . சிறுவர் , புது மனத் தம்பதிகள் , பெரியவர்கள் என அனைவருக்கும் , பெண் பூசாரி  மூலமே பூஜைகள் நடக்க , வேண்டுதலின் படி , எல்லாம் நிறைவேற , அவர்களும் கோவிலுக்கு காணிக்கையை செலுத்து கின்றனர் . மந்திரம் , தந்திரங்களை இறைவன் பார்ப்பதில்லை என்பதற்கும் , நல்ல மனம் ஒன்றே இறைவனின் ஆசி பெற , அருளை அடைய சிறந்த மார்க்கம் என்பதற்கும் கிளிஞ்சிகுப்பம் அய்யானார் கோவில் சிறந்த உதாரணமாக திகழ்கிறது .
அன்புடன் , 
கோவி . சேகர் 

கிளிஞ்சிகுப்பம் அய்யனார் கோவில்
கிலோமீட்டரில் உள்ள தவளக்குப்பத்தில் இறங்கி, மேற்கு நோக்கிச்செல்லும் சாலையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் பயணிக்க வேண்டும் . உள்ளூர் அட்டோக்களை பயன் படுத்துவதே மிகவும் சிறந்தது . கரையாம்புத்தூர் வரை செல்லும் சில பேருந்துகள் வரும். ஆனால் அவற்றின் இடைவெளி மிக அதிகம் . பேருந்தில் செல்பவர்களுக்கு , ஊருக்குள் போகாது . அங்கிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் பசுமையான வயல்களுக்கு நடுவில்  நடந்து சென்று ஊர் காவல் தெய்வம் அய்யனார் கோவிலை அடைய வேண்டும் . உள்ளூர் ஆடோக்களில் சென்றால் , ஊர் வரைச் சென்று , அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நிலத்தின் நடுவே நடந்து செல்ல வேண்டும். போகும் வழியிலேயே பூசாரின் வீடு உள்ளது . போகும் போதே உடன் அழைத்துச் செல்லலாம் .வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு , இங்கு நடைமுறையில் உள்ளது . அது ஒன்றே இந்த ஊர் மக்களின் , அய்யனாரை குல தெய்வமாக அனைத்து மக்களின் மென்மையான குணத்தை வெளிபடுத்தும் . அந்த ஒரு விஷயத்தில் கிளிஞ்சிகுப்பம் அய்யனார் கோவில் தமிழகத்திற்கு மட்டுமல்ல , இந்தியாவிற்கே ஒரு வழி காட்டி. அதுபற்றி இறுதியில் மறக்காமல் சொல்கிறேன்.

கிளிஞ்சிகுப்பம் அய்யனார் கோவிலின் அழகை சொல்ல வார்த்தைகள் ஆயிரம் வேண்டும் . பக்தர்களின் தண்ணீர் வசதிக்காக இங்கு மின்சார  மோட்டார் உள்ளது . பல ஊர்களில் அய்யனார் மரம் செடி கொடிகள் அடங்கிய காடு போன்ற அடர்த்தியான இடத்தில் அமர்ந்து தன் காவல் தொழிலைச்செய்வார். கிளிஞ்சிகுப்பத்தில் இயற்கை எழில் சூழ , வளமான நிலங்களுக்கு நடுவே , தென்றல் தாலாட்ட அய்யனார் ,தேவியர்களுடன்  காட்சித் தருவார். 

அய்யனார் கோவிலைச் சுற்றி பொங்கல் வைக்க நிறைய இடங்கள் உள்ளன . விறகுக்கு குறையில்லை . அது மட்டுமல்ல . கோவிலின் அருகிலே வாழை மரங்கள் உள்ளன . கோவிலுக்கு வருபவர்கள் , அங்கு தேவைக்கு ஏற்ப வாழை இலை எடுப்பதால் , யாரும் எதுவும் சொல்வதில்லை.சிலருக்குத் தெரியும் . பலருக்குத் தெரியாது .  அய்யனாரை  வேண்டி,  வேண்டுதல்  நிறைவேறினால் , வேண்டியபடி அய்யனாருக்கு பலி கொடுப்பாகள் . அது வேண்டுதலைப் பொறுத்து ஆடு , கோழி என இருக்கலாம் .சிலர் சில ஊர்களில் மது பானங்களையும் வைத்து வழிபடுகிறார்கள் . அப்படி பலியிடும்போது,  அய்யனார் கண்ணில் படாமல் தனியாககே பலியிடுவார்கள் .

ஆனால் அய்யனார் சைவ உணவையே உண்பார். எனவே படையல் போடும்போது அய்யனாருக்கு சர்க்கரை பொங்கல் , பழம் வைத்தே படைக்கப் படும்.எல்லா ஊர்களிலும் இருப்பது போல் , இங்கேயும் அய்யனார் தனது இடது காலை மடித்து பீடத்தின் மேல் வைத்து , வலது காலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். அவரது இரு புறமும் தோழியர்கள் அப்படியே அமர்ந்து உள்ளனர்.எல்லா நாட்களும் காலை , மாலை இரு வேலையும் அய்யனாருக்கு தவறாமல் விளக்கு ஏற்றுகிறார்கள் . பொதுவாக அனைத்து திங்கட்கிழமைகளிலும் வேண்டுதலுக்காக வருபவர்கள் அய்யனாருக்கு பொங்கல் வைத்து , படைத்து செல்கின்றனர் .

பூசாரி கூப்பிடும் தூரத்தில் இருப்பதால் , மற்ற நாட்களில் வருபவர்களுக்கும் எவ்வித தடங்களும் இன்றி பூஜைக்கு வேண்டிய ஏற்பாட்டை செய்துத் தருகின்றனர்.ஆடி மாதம் அய்யனாருக்கு ஏற்ற மாதம் . ஆடிமாதம் மழுவதும் திருவிழாவாகவே இருக்கும். ஆடி வெள்ளி, சனிக்கிழமைகளில் கூட்டம் அலை மோதும். அய்யனாருக்கு ஒரு பக்கம் பொங்கல் வைப்பார்கள் . ஒருபுறம் வேண்டுதல்   நிறைவேறியவர்கள் தலை முடியை அய்யனாருக்கு காணிக்கையாக செலுத்துவார்கள் . ஒருபுறம் அய்யனாரின் இஷ்ட தெய்வங்களுக்கு கோழி , ஆடு பலி கொடுத்து , சமைத்து சாப்பிடுவார்கள் . 

இங்கு சுற்றி உள்ள மக்களோடு மட்டுமில்லாமல் , வடக்கே  பாண்டிச்சேரி , அதன் சுற்று கிராம மக்களுக்கும் , தெற்கே கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் வரை , பல குடும்பங்களுக்கும் அய்யனார் குல தெய்வமாக நின்று அருள் பாவித்து , அனைவருக்கும் நல்லாசி அளிக்கிறார். இங்குள்ள பூசாரியின் சிறப்பு , இங்குள்ள மக்களின் பகுத்தறிவிற்கு ஓர் சான்று . கடவுளிடம் ஆண் , பெண் , ஏழை , பணக்காரர் , திருமணமானவர் , ஆகாதவர் , கணவனை இழந்தவர் , மனைவியை இழந்தவர், விதவை என்ற பாகுபாடு இல்லை என்பதற்கும் , கடவுளின் முன் எல்லோரும் சமம் என்பதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது . அதுபோலவே , கிராமத்தில் வாழும் மக்களிடம் , மேற்கத்தைய நாகரீகம் குறைவாக இருக்கலாமே தவிர , மனிதமும் , முற்போக்குச் சிந்தனையும் , பிறரை மதிக்கும் குணமும் அதிகம் என்பதற்கும் இந்தக் கோவிலும் , இங்கு வாழும் மக்களும் , இங்கு வரும் மக்களும் ஒரு சான்றாக விளங்குகின்றனர் .ஆமாம். இந்தக் கோவிலின் பூசாரி ஒரு பெண் . பெண் என்பதைவிட ஒரு விதவை . கணவனை இழந்தவர் . அவர் தான் பூஜை செய்கிறார் . சிறுவர் , புது மனத் தம்பதிகள் , பெரியவர்கள் என அனைவருக்கும் , பெண் பூசாரி  மூலமே பூஜைகள் நடக்க , வேண்டுதலின் படி , எல்லாம் நிறைவேற , அவர்களும் கோவிலுக்கு காணிக்கையை செலுத்து கின்றனர் . மந்திரம் , தந்திரங்களை இறைவன் பார்ப்பதில்லை என்பதற்கும் , நல்ல மனம் ஒன்றே இறைவனின் ஆசி பெற , அருளை அடைய சிறந்த மார்க்கம் என்பதற்கும் கிளிஞ்சிகுப்பம் அய்யானார் கோவில் சிறந்த உதாரணமாக திகழ்கிறது .

அன்புடன் , 

கோவி . சேகர் 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்
    அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி
    அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி
    அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்
    அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி
    அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்
    அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி
    அருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி
    அருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு
    அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்
    அருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா
    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி

TEMPLES

    சாஸ்தா கோயில்     நட்சத்திர கோயில்
    வள்ளலார் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    பாபாஜி கோயில்     அம்மன் கோயில்
    சிவன் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    காலபைரவர் கோயில்     பட்டினத்தார் கோயில்
    சேக்கிழார் கோயில்     எமதர்மராஜா கோயில்
    மற்ற கோயில்கள்     அறுபடைவீடு
    ஐயப்பன் கோயில்     பிரம்மன் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    சூரியனார் கோயில்     வீரபத்திரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்