LOGO

பத்ரகாளி அம்மன்

  கோயில்   பத்ரகாளி அம்மன்
  கோயில் வகை   குலதெய்வம் கோயில்கள்
  மூலவர்   பத்ரகாளி
  பழமை   
  முகவரி
  ஊர்   அந்தியூர்
  மாவட்டம்   ஈரோடு [ Erode ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

தல வரலாறு: 
ஈரோடு மாவடடம், அந்தியூரில ; எழுந்தருளியுள்ள பத்ரகாளி அம்மன்
 குல தெய்வமாக
எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாள். ஒரு நாள் கன்று ஈன்ற பசு ஒன்று
காட்டில் மேய்ந்து திரிந்துவிட்டு தினசரி பாலின்றி வெற்று மடியோடு வீட ;டுக்கு
வந்துள்ளது. பசுவின் உரிமையாளர் ரகசியமாக சென்று பார்த்ததில், ஒரு
புற்று அருகே பசு சென்றது, அப்போது புற்றிலிருந்து ஐந்து தலை நாகம் ஒன்று
வெளிப்பட ;டு பசுவின் ஐந்து மடியிலிருந்தும் பாலைக் குடித்தது. இதைப்
பார்த்ததும் பசுவின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். அன்றிரவு அவரது
கனவில் தோன்றிய ஒரு பெண் நான் பத்ரகாளி, நான் உன் பசுவின் பால்
குடித்து மனநிறைவு உற்றேன். என்னை அவ்விடத்திலேயே பிரதிஸ்டை செய்து
வழிபடுக என்றாள ;. அம்மனின் அருள் வாக்கை ஏற்று அந்த இடத்தில்
பத்ரகாளியம்மன் கோயில ; கட்டி வழிபடத் துவங்கினர். அம்பாளுக்கு பத்ரகாளி
என்று பெயர் சூட்டப்பட்டது.
 
பெயர் விளக்கம்: 
பத்ரம் என்றால் சொல் இலை, அழகிய உருவம், பாதுகாப்பு என்று
பொருள ;. பத்ரகாளி என்ற சொல ;லுக்கு இலைத்தோடு அணிந்த காளி, அழகிய
தோற்றமுடைய காளி, மக்களைப் பாதுகாக்கும் சக்தி என்ற பொருள்கள ;
உண்டு.
 
தல பெருமை: 
மகி~ன் என்னும் அரக்கனைக் கொன்று மகி~hசுரமர்த்தினி என்றும்
பத்ரகாளி என்றும் பெயர் பெற்றவள். அன்னை ஆதிபராசக்தி நவராத்திரி விழா
நடப்பதே மகி~hசுரமர்த்தினியின் பெயரால் தான். இந்த தேவி ஈரோடு
மாவட ;டம் அந்தியூரில ; எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாள். நவராத்திரியை
ஒட்டி அம்மனை வணங்கி துன்பங்களுக்கு முடிவு கட்டி வரலாம்.

தல வரலாறு: 

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் எழுந்தருளியுள்ள பத்ரகாளி அம்மன் குல தெய்வமாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாள்.

ஒரு நாள் கன்று ஈன்ற பசு ஒன்றுகாட்டில் மேய்ந்து திரிந்துவிட்டு தினசரி பாலின்றி வெற்று மடியோடு வந்துள்ளது. பசுவின் உரிமையாளர் ரகசியமாக சென்று பார்த்ததில், ஒருபுற்று அருகே பசு சென்றது, அப்போது புற்றிலிருந்து ஐந்து தலை நாகம் ஒன்றுவெளிப்பட்டடு பசுவின் ஐந்து மடியிலிருந்தும் பாலைக் குடித்தது. இதைப்பார்த்ததும் பசுவின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். அன்றிரவு அவரதுகனவில் தோன்றிய ஒரு பெண் நான் பத்ரகாளி, நான் உன் பசுவின் பால்குடித்து மனநிறைவு உற்றேன். என்னை அவ்விடத்திலேயே பிரதிஸ்டை செய்துவழிபடுக என்றாள்.

அம்மனின் அருள் வாக்கை ஏற்று அந்த இடத்தில்பத்ரகாளியம்மன் கோயில்  கட்டி வழிபடத் துவங்கினர். அம்பாளுக்கு பத்ரகாளி என்று பெயர் சூட்டப்பட்டது. 

பெயர் விளக்கம்: பத்ரம் என்றால் சொல் இலை, அழகிய உருவம், பாதுகாப்பு என்று பொருள். பத்ரகாளி என்ற சொல்லுக்கு இலைத்தோடு அணிந்த காளி, அழகிய தோற்றமுடைய காளி, மக்களைப் பாதுகாக்கும் சக்தி என்ற பொருள்கள் உண்டு. 

தல பெருமை: மகிசன் என்னும் அரக்கனைக் கொன்று மகிசாசுரமர்த்தினி என்றும் பத்ரகாளி என்றும் பெயர் பெற்றவள் அன்னை ஆதிபராசக்தி நவராத்திரி விழாநடப்பதே மகிசாhசுரமர்த்தினியின் பெயரால் தான். இந்த தேவி ஈரோடு மாவட்டம் அந்தியூரில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாள். நவராத்திரியைஒட்டி அம்மனை வணங்கி துன்பங்களுக்கு முடிவு கட்டி வரலாம்.

கனவின் பலன்: அந்தியூரை அடுத்த எண்ணமங்கலத்தில் கணவனின் கொடுமை தாங்க முடியாத பெண், தன் கைக்குழந்தையுடன் இரவில் கிணற்றில் குதித்தாள். தூங்கிக் கொண்டிருந்த பூசாரியின் கனவில் அம்மன் சென்று உடனடியாக இளம்பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்றச் சொன்னதை உணர்ந்த பூசார அந்த இளம்பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்றியதாக தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கனவில் வந்து பலன் சொல்லும் அம்மனாக அந்தியூர் பத்ரகாளியம்மன் திகழ்கிறாள். அம்மனை நினைத்தபடியே உறங்குகிறவர்களுக்கு கனவில் வந்து கோரிக்கைகளுக்குப் பதில் சொல்கிறாள். குற்றம் செய்கிறவர்களை உடனடியாக தண்டிப்பாள் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடம் இருக்கிறது.

பூகேட்டல்: திருமணம், நிலம் வாங்கல், விற்றல், கிணறு வெட்டுதல், வியாபாரம் துவங்குதல், கல்வி, வேலை வாய்ப்பு போன்ற காரணங்களுக்கு அம்மனின் சிரசில் பூ வைத்து வேண்டிக் கொண்டால், அம்மனின் சிரசில் இருந்து வலதுபக்கம் பூ விழுந்தால் ராமவாக்கு என்றும் இடது பக்கம் பூ விழுந்தால் உத்ரவாக்கு எனவும் கோரிக்கை நிறைவேற சிறிது காலம் எடுக்கும் என்றும் வேண்டுதல் குறித்து முடிவு செய்கிறார்கள்.

பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க தங்கள் தாலியையே காணிக்கையாகத் தருவதாக அம்பாளிடம் வேண்டுகின்றனர். குறிப்பாக உயிருக்கு போராடும் கணவருக்காக இத்தகைய பிரார்த்தனையைச் செய்வது மரபாக உள்ளது.

சோம்பல் நீக்கும் குணம்: சிலருக்கு எந்நேரமும் தூக்கம் வரும். இவர்கள் அம்மனிடம் தீர்த்தம் வாங்கிக் குடித்தால், இத்தகைய சோம்பலான உடல் நிலைக்கு விடிவு காலம் வரும். அந்தியூர் பத்ரகாளியை வணங்குவதால் எந்த பிரச்சனையும் முடிவுக்கு வருவதாக நம்பப்படுகிறது. அந்தி என்றால் இறுதி என்று பொருள்படும். நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கு இறுதியான முடிவை அளிக்கும் பத்ரகாளி. அந்தியூர் என்ற பெயருள்ள ஊரில் இருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

சிறப்பம்சம்: கருவறையில் பத்ரகாளியம்மன் எட்டு கைகளுடன் அருள் பாலிக்கிறாள். சுடர்விட்டு பரவும் சுவாலை கொண்ட தலை, மண்டை ஓடு, கிரீடம், எட்டு கைகளில் உடுக்கை, கட்கம், கபாலம், சூலம், மகிசனின் தலைமேல் கால்வைத்திருக்கும் பாவனை, விஸ்மய ஹஸ்தம் ( செயற்கரிய செயல்களை செய்யும் போது வியந்து பாராட்டும் சிறப்பம்சம்) நாகம், மணி, கிண்ணத்துடன் அம்மன் அருள்பாலிக்கிறாள். பகைவர்களின் தலைகளை மாலையாகத் தொடுத்து அதையே மார்புக்கச்சாக கட்டியிருக்கிறாள். மகிசனின் தலையில் கால் வைத்துள்ளதால் நவராத்திரி நாயகியான மகிசாசுரமர்த்தினியாகவும் கருதப்படுகிறாள்.

குண்டம் திருவிழா:  இங்கு பங்குனி மாதப் பௌர்ணமியில் நடக்கும் குண்டம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் சித்ரா பௌர்ணமி, தீர்த்தக்குட விழா, துர்க்காஷ்டமி, 108 சங்கு பூசை, கார்த்திகை தீபம், நவராத்திரி விழா போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விஷ்ணு துர்க்கைக்கு செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பான அபிசேகம் பூசைகள் நடத்தப்பட்டு வருகிறது. பத்ரகாளியம்மன் ராகு தோசம் நீக்குபவள், இங்கு வீர ஆஞ்சநேயரின் சன்னதியும் இருப்பதால் சனி தோசம் உள்ளவர்களும் பிரார்த்தனை செய்து கொள்ளலாம். ஏழு கன்னிகைக்கு சன்னதியும் உள்ளது. வீரபத்திர சுவாமி சன்னதியும் இங்குள்ளது.

ராகுவின் அதி தேவதையாக காளி விளங்குவதால் செவ்வாய், சனி, வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி திருமணத் தடை விலக கன்னியர்கள், வாலிபர்கள், வேண்டுகின்றனர். குழந்தை பாக்கியம் கிடைக்க தொட்டில் கட்டும் வழிபாடும் உள்ளது, கல்வி, செல்வம்,வீரம் ஆகியவற்றை வழங்கும் பத்ரகாளி இங்கே தைரியலட்சுமியின் அவதாரமாக உள்ளாள்.

குருநாதசுவாமி கோவில்: மேலும் இவ்வூருக்கு அருகில் குருநாதசுவாமி கோவிலில் 10 நாட்கள் தேர்த்திருவிழா நடக்கும் குதிரை சந்தையில் படைகளுக்குத் தேவையான குதிரைகள் வாங்க  பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்து குதிரை, மாடு வாங்கிச் செல்கிறார்கள். திப்புசுல்தானின் தந்தை ஹைதர் அலி அந்தியூர் குருநாதசுவாமி கோயிலில் நடக்கும் சந்தையில் படைகளுக்குத் தேவையான குதிரைகளை வாங்கி சென்றதாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இதனைக் கேள்விப்பட்ட திப்புசுல்தானும் பழையகோட்டை 22வது பட்டக்காரர்  “நல்ல சேனாபதி சக்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் குதிரைகளை வளர்த்து வருவது அறிந்து அரண்மனைக்கு வந்திருந்து சைவ உணவினை உண்டுபஞ்சகல்யாணி குதிரைகளை வாங்கி சென்றுள்ளார். இக்குதிரைகள் 4 கணுக்கால்களிலும், முகத்திலும் வெள்ளை நிறமும் 10 இடங்களில் சுழிகளுடனும் உள்ள குதிரைகளை 200 பொன் கொடுத்து வாங்கிச் சென்றுளார்.

இத்துணை சிறப்பு வாய்ந்த அந்தியூர் பத்ரகாளியம்மன் எங்கள் அந்தியூரான் கூட்டத்தவர்களுக்கு குலதெய்வமாக இருந்து எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி அருள் பாலிக்கிறாள். எங்கள் குழந்தைகளுக்கு முதன் முதலில் மொட்டை போட்டும், திருமணம் முடிவானதும் முதல் பத்திரிகையை, அம்மனின் பாதத்தில் வைத்து அம்மனைத் திருமணத்திற்கு அழைத்தும், திருமணம் இனிதே நடைபெற துணை இருக்க வேண்டியும், திருமணம் முடிந்ததும், தம்பதியரை அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு பூசைகள் செய்து வருவதும் வழக்கமாக உள்ளது. ஆடிமாதம் ஏதாவது ஒரு நாளில் அனைத்து உறவினர்களும் சென்று சிறப்பு பூசை செய்தும், வருடம் தோறும் சித்ரா பௌர்ணமி அன்று சிறப்பு பூசைகள் நடத்தி, எங்கள் குலம் தலைக்க பொங்கல் செய்து மாவிளக்கு ஏற்றி வேண்டி வருகிறோம்.

அன்னதானம்: இங்கு இந்து அறநிலையத்துறை சார்பாக தினமும் மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்று வருகிறது. அன்னதானம் வழங்கும் இடம் சுத்தமாகவும், அந்த உணவு சுவையாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை:  பாரதியாரின் கூற்றுகள்: “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” “மண்ணெடுத்துக் குடங்கள் செய்வீரே, மரத்தை வெட்டி மனைசெய்குவீரே, உண்ணக் காய்கனி தந்திடுவீரே, எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே, இழையை நூற்றுநல்லாடை செய்வீரே” காவியம் செய்வோம் நல்லகாடு வளர்ப்போம் கலை வளர்ப் போம் கொல்லருலை வளர்ப்போம், ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம், உலகத் தொழிலனைத்துமுவந்து செய்வோம் வாழி கல்வி செல்வம் எய்தி மனம் மகிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒருநிகர் சமானமாக வாழ்வமே. 

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம் குலம் தழைக்க, இவ்வளவு சிறப்பு வாய்ந்த  அந்தியூர் பத்ரகாளியம்மன் பற்றிய சக்தியை நம் வருங்கால சந்ததியர்களுக்குத் தெரிவித்து, அவர்களும் வாழையடி வாழையாக அம்மனை வணங்கி நீர்வளம், மண்வளம் காத்து, விவசாயம் செழித்து, தொழில் வளம் பெருகி நாடு தன்னிறைவோடு பாரினில் இந்தியன் என்று பெருமையோடு வாழ வழி செய்திடுவோம்.

என்றும் இறை சிந்தனையோடு வாழ்க! வளர்க! வெல்க!

- திருமதி. கி.சகுந்தலா சுந ;தரம் பி.காம ;., எம்.எ.(தமிழ ;) 

( பணி ஓய்வு, கல்வித் துறை )

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில் பாரியூர் , ஈரோடு
    அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் காங்கயம்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் எழுமாத்தூர் , ஈரோடு
    அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் அத்தாணி , ஈரோடு
    அருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில் காங்கேயம், மடவிளாகம் , ஈரோடு
    அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் தாராபுரம் , ஈரோடு
    அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில் பெருந்துறை , ஈரோடு
    அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில் புதுப்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் கோபி , ஈரோடு
    அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யேரிக்கரை , ஈரோடு
    அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில் மாரியப்பா நகர், சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில் கதித்த மலை , ஈரோடு
    அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கோபி , ஈரோடு
    அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் திண்டல்மலை , ஈரோடு

TEMPLES

    அறுபடைவீடு     வீரபத்திரர் கோயில்
    நவக்கிரக கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    சாஸ்தா கோயில்     விநாயகர் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     பிரம்மன் கோயில்
    விஷ்ணு கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    நட்சத்திர கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    பட்டினத்தார் கோயில்     மற்ற கோயில்கள்
    சடையப்பர் கோயில்     முருகன் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     சேக்கிழார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்