|
|||||
பொட்டுக்கடலை உருண்டை |
|||||
தேவையானவை : பொட்டுக்கடலை (உடைத்தது) - 200 கிராம் வெல்லம் - 200 கிராம் ஏலக்காய்ப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன் நெய் - 1டேபிள் ஸ்பூன் செய்முறை : 1.முதலில் பொட்டுக்கடலையை நெய் விட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். 2. அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் 100 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். 3. இதில் வெல்லத்தை சேர்த்து கொதிக்க விடவும். 4. வெல்லம் கரைந்து பாகு பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும். 5. பிறகு வறுத்து வைத்துள்ள பொட்டுக்கடலையைச் சேர்த்துக் கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும். 6. கைப்பொறுக்கும் அளவு சூடாக இருக்கும் போதே பொட்டுக்கடலையை சிறிய அளவு உருண்டைகளாகப் பிடிக்கவும். |
|||||
by srikarthika on 22 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|