|
||||||||
ராகி லட்டு |
||||||||
தேவையானவை 1. ராகி மாவு - ஒரு கப் 2. வேர்க்கடலை, தேங்காய்த்துருவல், கருப்பு எள், பாதாம், உலர்ந்த திராட்சை(அனைத்தும் சேர்த்து) - ஒரு கப் 3. கருப்பட்டி - கால் கப் செய்முறை : 1. வெறும் வாணலியில் ராகி மாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் பாதாம், வேர்க்கடலை, எள், உலர்ந்த திராட்சை, தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வறுக்கவும்.
2. பின்னர் அதை மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்து, கருப்பட்டி சேர்த்து மறு படியும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
3. இதனுடன் ராகி மாவைச் சேர்த்து கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும், தேவைப்பட்டால் நெய் சேர்த்து கொள்ளலாம். ராகியில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.
பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் இந்த லட்டை விரும்பி சாப்பிடுவார்கள். |
||||||||
by Swathi on 17 Jul 2014 0 Comments | ||||||||
Tags: ராகி லட்டு Ragi Laddu Laddu | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|