LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    வலைத்தமிழ் சேவைகள்-Services Print Friendly and PDF
- உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

பிப்ரவரி 11-ம் தேதி திருக்குறள் ஐம்பெரும் விழாவில் Thirukkural Translations in World Languages" நூல் வெளியீடு

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆவணமாக, திருக்குறள் உலகப் பரவலாக்கலை வேகப்படுத்தும் ஒரு செயல்பாடாக கடந்த ஐந்து ஆண்டுகள் தொடர் உழைப்பில் வட அமெரிக்காவில் தொடங்கப்பட்ட "உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டம்" குழுவின் அறிக்கையாக ""Thirukkural Translations in World Languages" நூல் வரும் ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 11 அன்று சென்னையில் வெளியிடப்படவிருக்கிறது.

 

இதில் யுனெஸ்கோ, ஐக்கிய நாடுகள் சபை, உலக மொழிகள் குறித்த பல தரவுகளுடன் திருக்குறள் பரவலாக்கல் நோக்கில் ஆராயப்பட்டு , செயல்திட்டங்களோடு நூல் வெளிவருகிறது. இது வாசிப்பதற்கு மட்டுமல்ல, தரவுகளின் அடிப்படையில் அடுத்தகட்டமாக மொழிபெயர்ப்புகளை அதிகரித்தல், மொழிபெயர்ப்புகளை மொழிபெயர்ப்பு சார்ந்த மொழிகளின் அரசுகள், நாடுகள் அன்றாடம் பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்தச் செயல்திட்டம், பயன்பாட்டில் இல்லாத மொழிபெயர்ப்புகளை உரியவர்களின் ஒப்புதலுடன் மறுபதிப்பு செய்து ஒரே இடத்தில் கிடைக்கச் செய்தல் என்று பல அடுத்தகட்டச் செயல்பாட்டில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு குழுவாகப் பங்களிக்க, தன்னார்வப்பணியாற்ற அழைக்கும் நூலாக இது இருக்கும் என்று நம்புகிறோம்.

 

திருக்குறள்மேல் பற்றுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்

 

இந்தப் புலனச் செய்தியை எங்களுடைய நேரடி அழைப்பாகக் கருதி உணர்வோடு நேரில் வந்து துணைநின்று வாழ்த்த அன்போடு அழைக்கிறோம். இது உங்களுக்கான, நமக்கான, நம் மொழிக்கான, மனிதக்குலத்துக்கான முக்கியமான தன்னார்வப்பணி. ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கவேண்டிய இரண்டு திருக்குறள் நூல்கள் இதில் வெளியிடப்படுகிறது. முழு விவரத்தை அழைப்பில் காணவும். 

 

ஒருங்கிணைப்பு

 

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், வலைத்தமிழ் ,வள்ளுவர் குரல் குடும்பம், சர்வீஸ் டு சொசைட்டி, கற்க கசடற, அமைப்புகள்  

 

நிகழ்ச்சி விவரம் : 

 

திருக்குறள் ஐம்பெரும் விழா -2024 

 

வரும் பிப்ரவரி 11 , ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை 

 

இடம்: திருவள்ளுவர் அரங்கம்,

இந்திய அதிகாரிகள் சங்க அரங்கு , (IOA )

இராயப்பேட்டை , அஜந்தா பேருந்து நிறுத்தம்

 

(நண்பகல் உணவு- தேநீர் வழங்கப்படும்)

 

தங்கள் வருகையைப் பதிவு செய்வது நிகழ்ச்சியை உணவு, இருக்கை உள்ளிட்டவற்றில் நேர்த்தியாகத் திட்டமிட வசதியாக இருக்கும். உதவுங்கள். 

 

பதிவு செய்ய :

https://www.globaltamilevents.com/thirukkural-vizha-2024-tview1223.html 

 

தமிழ்மேல், திருக்குறள்மேல் பற்றுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம். உங்கள் நண்பர்களுக்கும், திருக்குறள் அமைப்புகளுக்கும், ஆர்வலர்களுக்கும் பகிர்ந்துகொள்ளவும். 

 

இது திருக்குறளில் முக்கியமான செயல்பாட்டாளர்கள் சந்திப்பு .வாருங்கள்,

by Kumar   on 07 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் வளர்ச்சியில் வலைத்தமிழின் கவனம். தமிழ் வளர்ச்சியில் வலைத்தமிழின் கவனம்.
வலைத்தமிழ் சேவைகள் எப்படி திட்டமிடப்படுகிறது? வலைத்தமிழ் சேவைகள் எப்படி திட்டமிடப்படுகிறது?
தூய தமிழ்ப்பெயரை நம் பிள்ளைக்கு சூட்டுவோம். தமிழ் அடையாளம் காப்போம்.. தூய தமிழ்ப்பெயரை நம் பிள்ளைக்கு சூட்டுவோம். தமிழ் அடையாளம் காப்போம்..
தமிழைப் பிறமொழி கலப்பில்லாமல் பேச - தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் தமிழைப் பிறமொழி கலப்பில்லாமல் பேச - தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்
தமிழைத் தமிழியாய்ப் பேசுவோம் - தமிழர்களின் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம், பிறமொழி சொற்றொடர்களைத் தொகுக்கிறது.. தமிழைத் தமிழியாய்ப் பேசுவோம் - தமிழர்களின் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம், பிறமொழி சொற்றொடர்களைத் தொகுக்கிறது..
தமிழ் மொழியில் பேசுவதை ஊக்குவிக்கும் விதமாக தன் கடையில் பதாகையை வைத்திருக்கும் சிங்கப்பூர் Madras Jeweller Sdn. Bhd  நிறுவனத்தை வாழ்த்துவோம்.. தமிழ் மொழியில் பேசுவதை ஊக்குவிக்கும் விதமாக தன் கடையில் பதாகையை வைத்திருக்கும் சிங்கப்பூர் Madras Jeweller Sdn. Bhd நிறுவனத்தை வாழ்த்துவோம்..
உலகத் தமிழ்ப் பெயர்கள் பேரியக்கத்தை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார் உலகத் தமிழ்ப் பெயர்கள் பேரியக்கத்தை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் - ஒருங்கிணைப்பு , அறிவுரைஞர் குழு உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் - ஒருங்கிணைப்பு , அறிவுரைஞர் குழு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.