|
||||||||
தமிழைப் பிறமொழி கலப்பில்லாமல் பேச - தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் |
||||||||
பன்னாட்டுச் சூழலில் ஆங்கிலமும்,பிற மொழிகளின் பயன்பாடும் தவிர்க்க முடியாத நிலையில், 100-உக்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், தாய்மொழி தெரிந்தவர்களிடையே பிறமொழி கலப்பின்றி தூய தமிழில் பேசும் நிலையை ஏற்படுத்த விழிப்புணர்வும், பழக்கமும், பயிற்சியும் மிகத்தேவையாகின்றது. தமிழைப் பிறமொழி கலப்பில்லாமல் குறிப்பாக ஆங்கிலத்தின் தாக்கத்திலிருந்து விடுவிக்க, இளம் தலைமுறையினர், குறிப்பாக பெற்றோர்கள் முயலவேண்டும் என்ற நோக்கில், அதுகுறித்தான புரிந்துகொள்ளுதலை ஏற்படுத்த, 3 முதல் 6 மாதம் தாங்களாகப் பயிற்சி எடுத்து உரிய கையேடு, இணையவழி பயிற்சிக்கட்டமைப்பும், தமிழறிஞர்கள் வழிகாட்டுதலுடன் பயிற்சி வழங்க ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது. முதல் அடியாக, இன்று தமிழர்களின் பயன்பாட்டில் உள்ள ஆங்கில, பிறமொழி சொற்றொடர்களைத் தொகுத்து அதற்கு இணையான பயன்பாட்டுத் தமிழ்த் தொடர்களைச் சேர்த்து ஒரு கையேடு உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுவே , இந்த மூன்று முதல் ஆறு மாத காலப் பயிற்சியின் கையேடாக அமையும். நண்பர்களே, நீங்கள் தமிழில் பேசும்போது இந்தச் சொல், இந்தச் சொற்றொடர் அதிகம் ஆங்கிலம், பிறமொழியில் வந்துவிடுகிறது என்று நினைப்பவற்றை, பிறர் பேசும்போது தமிழ் பேசுவதாக நினைத்து இப்படி ஆங்கிலம் கலந்து பேசுகிறார்களே என்று உணர்த்தவற்றை கீழ்காணும் சுட்டியில் உள்ள பட்டியலில் சேர்க்கவும். இணையான தமிழ்ச்சொல் தெரியாவிட்டால் பரவாயில்லை, தமிழறிஞர்கள் நிரப்புவார்கள். பயிற்சிக் கையேடு தயாரானதும், அடுத்ததாக பயிற்சி வகுப்புகளை உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளில் தன்னார்வ முயற்சியாக அவரவர் எடுக்க பயிற்றுநரை பயிற்றுவிக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வாருங்கள்.. தமிழைத் தமிழாய் பேசுவோம்.. ஆங்கிலமும் பிறமொழியும் கலந்து பேசுவதை தவிர்ப்போம். ஆங்கிலம் கலந்த சொற்றொடர்களை இணைக்க:
தொடக்கவிழா:
https://thamizhaaipesuvom.valaitamil.com/register.html
தொடர்புக்கு : பதிவுசெய்ய: https://thamizhaaipesuvom.valaitamil.com/register.html மின்னஞ்சல் அனுப்ப: thamizhaaipesu.valaitamil@gmail.com முகநூல் குழுவில் சேர்ந்து பங்களிக்க : https://www.facebook.com/groups/590821153187977 |
||||||||
by Swathi on 13 Dec 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|