LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

சமுத்திரக்கனியின் - அப்பா

நான் பொதுவாகத் திரைப்படங்களைப் பார்ப்பதோடு சரி, அவற்றைப் பற்றி அதிகம் எழுதுவதில்லை. அதற்கு முக்கியக் காரணம் திரைப்படங்களைப் பற்றி விமர்சிப்பது அவ்வளவு எளிதல்ல, அது பல நூறு தொழிலாளர்களின் ஒன்றுபட்ட உழைப்பு. மேலும் நமக்குப் பிடித்த படங்கள் பிறருக்குப் பிடிப்பதில்லை, பெரும்பாலனவர்களுக்குப் பிடிப்பதிருப்பது நமக்கு பிடிப்பதில்லை. சினிமாவை வெறும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பது என் எண்ணம். நாம் சினிமா பார்ப்பதால்/பார்த்ததால் வளர்ந்தவர்கள் தான் இங்கு ஆட்சி செய்கிறார்கள், எனவே இந்த சினிமா என்பது நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதான் ஒன்றல்ல. 

அதேபோல் பிறருடன் பகிரும் அளவுக்கு எந்தவொரு நல்ல மெசேஜூம் திரைப்படங்களில் இருப்பதில்லை. ஆனால் ஒரு சில சமயங்களில் சமுதாயத்திற்கு மெசேஜ் சொல்லும் திரைப்படங்களும் வருவதுண்டு; அவற்றில் பெரும்பாலான படங்கள் கருத்துக்களை மிகைப்படுத்திக் காட்டுவதால் அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை, எனவே அதைப் பற்றி நான் எழுத நினைப்பதில்லை. காலத்திற்கு ஏற்றாற்ப் போல் வாழ்வியலை ஒட்டி வரும் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.  
வெற்றியையும் வசூலையும் மட்டும் எதிர்பார்த்து படம் செய்யாமல், சமுதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தைச் சொல்லியிருக்கும் சமுத்திரமுனியின் - ``அப்பா`` என்ற முயற்சியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.  
கமர்ஷியல் படங்களுக்கும் குப்பைப் படங்களுக்கும் மத்தியில் இதுபோன்று ஒரு சில நல்ல படங்கள் வெளிவந்து, மக்களிடம் வெற்றி பெறுவது அரிது. விழிப்புணர்வுள்ள சமூகம் இதுபோன்ற படங்களை நிச்சயம் ஆதரித்துக் கொண்டாடும் (நம் சமூகம் இப்படத்தை வரவேற்றதா? கொச்சையான வசனங்களும் பெண்களை இழிவுபடுத்தி வெறும் காட்சிப் பொருளாகக் காட்டும் படங்கள் இன்று வசூலில் மிஞ்சி நின்கின்றன. வாழ்க தமிழகம்!) .  
படத்தில் வரும் கதாபாத்திரங்கள், இயக்கம் போன்றவற்றைப் பற்றி விவாதிக்க எனக்கு விருப்பமில்லை, மாறாக படம் முழுவதும் சொல்லப்படிருக்கும் நல்ல கருத்துக்களைப் பற்றி ஆராயலாம் என்று தோன்றுகிறது.  
இன்று மூன்று வயதுக் குழந்தைகளுக்குப் ப்ராஜெக்ட் வேலை, இரண்டு அல்லது மூன்று பக்கத்திற்கு வீட்டுப்பாடம், வார இறுதி அல்லது விடுமுறை நாட்களில் கூடுதல் ஹோம்வோர்க்! குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பாமல், வீடு என்ற சிறைக்குள் அவர்களை அடக்கி ஒடுக்கி, அவர்களுக்குப் போதுமான இடைவெளி தராமல், அவர்களின் வளர்ச்சியை சிதைப்பதுதான் நகரத்தில் வசிக்கும் பெற்றோர்கள் செய்துகொண்டிருப்பது.  
பர்ஸ்ட் ரேங்க் வாங்கவில்லையென்றால் வாழ்வில் முன்னேற முடியாது என்று தவறாகச் சொல்லி வளர்ப்பது இங்கு வாடிக்கையாகிவிட்டது. பெரும்பாலும் பெற்றோர்கள் நினைப்பது, தன்னால் சாதிக்க முடியாதவற்றை தனக்குப் பிறக்கும் மகனோ/மகளோ சாதிக்க வெண்டும். 
குழந்தைப் பிறப்பதற்கு முன்னரே அவன்/அவள் என்ன படிக்க வேண்டும், எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும், எந்த மாதிரியான வேலைக்குச் செல்ல வேண்டும், எந்தத் துறையில் அதிக சம்பளம் வாங்க முடியும் என்ற எண்ணங்களை விதைக்க முனைகிறோம். 
பிறந்த குழந்தையை ஒரு நல்ல மனிதனாக்கி இச்சமுதாயத்திற்கு அளிக்கிறோமா என்பது தான் சமுத்திரக்கனியின் கேள்வி! வெறும் படிப்பு மட்டும் தான்  நம் வளர்ச்சிக்கு உதவும், நன்றாகப் படிக்க வேண்டும், பின் ஒரு நல்ல வேலையில் சேர வேண்டும் என்று சொல்வதோடு நின்றுவிடுகிறது நம்முடைய குழந்தை வளர்ப்பு.  
நம்மைச் சுற்றி நடக்கும் நல்லது, கெட்ட விஷயங்களைப் பற்றிக் அவர்களிடம் விவாதிருக்கிறோமா? அல்லது அவர்களின் வயதிற்கு ஏற்றாற்போல எளிமையாக்கி புரியவைக்க முயற்சித்திருக்கிறோமா? எது சரி, எது தவறு என்று அவர்களாகவே சிந்திக்க வாய்ப்பளித்திருக்கிறோமா? இல்லை, முற்றிலுமாக இல்லை. படம் முழுவதும் இதுபோன்ற கேள்விகளும் அதற்குத் தகுந்த பதில்களும் நிறைந்திருக்கிறது. 
நம்மைச் சுற்றியுள்ள நாலு பேர் என்ன நினைப்பார்கள், அவர்களின் பிள்ளை எந்த பள்ளியில் படிக்கிறது என்பதைப் பற்றி மட்டும் யோசித்து, அவர்களுக்குச் செவி சாய்க்கும் தாய்மார்களின் தவறான செயலை அருமையாக படம்பிடித்துக் காட்டியுள்ளார். இதுபோன்ற தவறை நாம் தான் வளர்த்து வருகிறோம், பெற்றோர்களாகிய நம்மிடம்தான் பிரச்சனை என்று நெத்தியில் அடித்தது போல சொல்லியிருக்கிறார். 
குழந்தையை விளையாட அனுமதிக்காமல் வீட்டிற்குள்ளே பூட்டி வைத்து, டோரா, சோட்டா பீம் போன்ற கார்ட்டூன் கேரக்டர்களை அவர்களின் நண்பர்களாக்கி, அவர்களின் மனதிற்குள் ஒரு பொம்மை சமூகத்தை வளர்க்கின்றோம். பின்னொரு நாளில் அவர்கள் வளர்ந்து தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தைப் பார்க்கும் போது, அங்கு அவர்கள் எதிர்பார்க்கும் பொம்மைச் சமூகம் இருக்காது; மாறாக அவர்களின் கற்பனைக்குள் அடங்காத ஒரு மாய உலகம் தோன்றும்.  
அந்நேரத்தில் தங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்துடன் ஒத்துப்போகும் நிலை தெரியாமல், தங்களுக்குள்ளே சுவர் எழுப்பி அதனுள்ளே வாழ்ந்து அழிந்து போகும் சூழ்நிலைதான் நாம் இன்று அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். குழந்தைகளின்  பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேட்பதில்லை, மாறாக நமது எண்ணங்களை அவர்களிடத்தில் திணிக்கிறோம். இது அவர்களிடத்தில் பயத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது என்பதை உணராமல் அறிவிலியாக உள்ளோம்.
 
சிறுவயதைக் கடந்து வாலிப வயதை அடையும் பிள்ளைகளுக்கு எதிர்பாலினர் பற்றி எப்படி விளக்க வேண்டும், அவர்களுக்கு வரும் பருவ மாற்றத்தை எப்படி புரிய வைப்பது என்று கூறுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.  
"பெண் என்பவள் எதிர் பாலினம், அவளுக்கும் உன்ன மாதிரிதான்; அடிச்சா வலிக்கும்’’ ``எப்ப வேணாலும் இங்க வரலாம், ஆனா இங்க தான் வர்றன்னு சொல்லிட்டு வரணும்`` என்று தன் மகனின் பெண் நண்பரிடம் கூறுவது. 
"உனக்கு ஒரு விஷயம் அப்பாகிட்ட சொல்ல முடியும்னு நினைச்சா, அத செய். சொல்ல முடியாதுன்னா நினைச்சா அத செய்யாத" ``வாழ்க்கைக்குப் படிப்பு அவசியந்தான், ஆனா படிப்பே வாழ்க்கையல்ல’’ ‘’தைரியமா இருன்னு நம்பிக்கையான வார்த்தைய சொல்றதுக்குத் தான் இங்க யாருமில்ல`` ``வாழ்க்கையில சாதிச்ச எல்லாரும் படிப்பால மட்டும் சாதிக்கல`` 
போன்ற வசனங்கள் மிகவும் அருமை. பருவமடைந்த பிள்ளைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய சுதந்திரத்தை அளவிட்டுக் காட்டியிருப்பது பாராட்டத்தக்கது. 
இது மாதிரியானப் படங்களைப் பார்த்துவிட்டு பாராட்டினால் மட்டும் போதாது, சொல்லப்பட்டிருக்கின்ற கருத்துக்களில் ஒருசிலவற்றையாவது கடைபிடித்துக்காட்ட வேண்டும், இது நம்மைச் சுற்றியிருக்கும் நாளு பேருக்காக அல்ல, நம் பிள்ளைகளுக்காக!! 
சினிமாவில் புதைந்திருக்கும் குப்பைகளுக்கு நடுவில் வைரமாக வந்திருக்கும் `அப்பா` - நிச்சயம் வணக்கத்திற்கும் பாராட்டிற்கும் உரியது. சமுத்திரக்கனிக்கு வணக்கமும், வாழ்த்துகளும்!!!  
இதுபோன்ற நல்ல யதார்த்தமான திரைப்படங்கள் நிறைய வெளிவர வேண்டும். 

அப்பா புகைப்படங்கள்:

          Poster image                                                                          Good one

        Audio Release

by varun   on 06 Aug 2016  4 Comments
Tags: அப்பா திரை விமர்சனம்   சமுத்திரக்கனி   அப்பா திரைப்படம்   அப்பா விமர்சனம்   அப்பா கதை   அப்பா தமிழ் படம்   அப்பா சினிமா விமர்சனம்  
 தொடர்புடையவை-Related Articles
சமுத்திரக்கனியின் - அப்பா சமுத்திரக்கனியின் - அப்பா
சமுத்திரக்கனி நடிக்கும் பெட்டிக்கடை இன்று விடுமுறை !! சமுத்திரக்கனி நடிக்கும் பெட்டிக்கடை இன்று விடுமுறை !!
மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி !! மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி !!
சமுத்திரக்கனியின் கிட்ணா ஒரு பிரபலமான இலக்கியத்தின் கதை !! சமுத்திரக்கனியின் கிட்ணா ஒரு பிரபலமான இலக்கியத்தின் கதை !!
நாகேந்திரனின் நீயெல்லாம் நல்லா வருவடா !! நாகேந்திரனின் நீயெல்லாம் நல்லா வருவடா !!
நிமிர்ந்து நில் படத்தை தொடர்ந்து இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு படம் எடுக்கப் போகிறாராம் சமுத்திரக்கனி !! நிமிர்ந்து நில் படத்தை தொடர்ந்து இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு படம் எடுக்கப் போகிறாராம் சமுத்திரக்கனி !!
கருத்துகள்
10-Sep-2016 05:06:21 அருண் said : Report Abuse

@ சண்முகவேல், தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. உண்மைதான் தரமான தமிழ்ப் படங்களின் குறைந்துள்ளதாக நானும் உணர்கிறேன்.  

10-Sep-2016 05:03:09 அருண் said : Report Abuse

@ கார்த்திகேயன், தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. வாய்ப்புக் கிடைத்தால் பின்வரும் எனது தமிழ் வலைப்பூவை வாசம் செய்ய வேண்டுகிறேன். 

10-Sep-2016 03:22:54 கார்த்திகேயன்.k said : Report Abuse
இன்றுதான் முதன்முறையாக தங்களது வலையை பார்த்தேன். மிகவும் பிடித்திருக்கிறது . நிறைய விஷயங்கள் பலனுள்ளதாகவும் உள்ளது. மீண்டும் தொடர்ந்து பார்க்க vendum. நன்றி.
 
10-Aug-2016 18:29:09 Shanmuga vel said : Report Abuse
நான் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மும்பையில் வசித்து வருகிறேன்.தரமான தமிழ்ப் படங்கள் வருவது குறைந்து விட்டதால் பெரும்பாலும் படங்களைப் பார்ப்பது கிடையாது.ஆனால் தமிழிலும் நல்ல படங்கள் வருகின்றன என்பதை "அப்பா" படம் பார்த்து புரிந்து கொண்டேன்.நன்றி.P.சமுத்திரக்கனி அவர்களே
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.