ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் உள்ளே கைவிடேயப்பர் பூரணை, புஷ்கலையுடன் ஒரு காலை தொங்கவிட்டுக் கொண்டும், மறு
காலை குத்துக்காலிட்டும் அமர்ந்துள்ளார்.இவ்வூரிலிருந்தும் அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கு வந்து கைவிடேயப்பரை
தரிசனம் செய்த பின்னரே தங்களது பயணத்தைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து இருமுடி
கட்டிக்கொண்டு தங்களது சபரிமலை பயணத்தைத் தொடங்குகின்றனர். சுற்றிலும் நீண்ட திருமதிற் சுவர்களைக் கொண்ட இடத்தில் எதிரே காசிவிஸ்வநாதர்
ஆலயமும் அமைந்துள்ளது.இரண்டு ஆலயங்களும் ஒரே மதிற் சுவரின் உள்ளே அமைந்துள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும். உள்ளே நுழைந்ததும் நீண்ட
பிராகாரத்தில் நந்தியம் பெருமான் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மண்டபத்தின் வலதுபுறம் காமாட்சி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு
அன்னை நான்கு கரங்களுடன், மேல் கரங்களில் தாமரை மலரை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் கருணையே
வடிவாக காட்சி தருகிறாள்.
ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் உள்ளே கைவிடேயப்பர் பூரணை, புஷ்கலையுடன் ஒரு காலை தொங்கவிட்டுக் கொண்டும், மறு காலை குத்துக்காலிட்டும் அமர்ந்துள்ளார். இவ்வூரிலிருந்தும் அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கு வந்து கைவிடேயப்பரை தரிசனம் செய்த பின்னரே தங்களது பயணத்தைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து இருமுடி கட்டிக்கொண்டு தங்களது சபரிமலை பயணத்தைத் தொடங்குகின்றனர்.
சுற்றிலும் நீண்ட திருமதிற் சுவர்களைக் கொண்ட இடத்தில் எதிரே காசிவிஸ்வநாதர் ஆலயமும் அமைந்துள்ளது. இரண்டு ஆலயங்களும் ஒரே மதிற் சுவரின் உள்ளே அமைந்துள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும். உள்ளே நுழைந்ததும் நீண்ட பிராகாரத்தில் நந்தியம் பெருமான் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மண்டபத்தின் வலதுபுறம் காமாட்சி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு அன்னை நான்கு கரங்களுடன், மேல் கரங்களில் தாமரை மலரை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் கருணையே வடிவாக காட்சி தருகிறாள். |