LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

தமிழ் இலக்கியத்தில் அறிவியல்.. R.இராஜராஜன்

ஒப்பற்ற தாய் மொழியாம் முத்தமிழ் என்று போற்றப்பெறும் தமிழ் மொழியின் இலக்கியங்கள் பலவற்றிலும் அறிவியல் கருத்துக்களைக் காண முடிகின்றது.

பண்டைக்கால மக்களின் வாழ்க்கை இயற்கையோடியைந்த வாழ்வு, அவ்வாழ்வை நோக்கும்போது இயற்கையில் அமைந்த செடி, கொடிகள் பற்றிய ஆய்வு மருத்துவம் பற்றிய ஆய்வு, வானியல் பற்றிய ஆய்வு இவை தமிழிலக்கியமெங்கும் காண முடிகின்றது.
 ஐவகை நிலங்களுக்கு¡¢ய கருப்பொருள்களுள், விலங்குகள், பறவைகள், மரங்கள் இவை ஒவ்வொரு நிலத்திற்கும் வரையறை செய்தமையில் தாவரவியல், விலங்கியல் போன்றவற்றை பகுத்தறிந்து உணர்ந்த ஆற்றலை உணர முடிகின்றன,

சங்கப் பாடல்களில் பத்துப்பாட்டு மற்றும் எட்டுத் தொகையில் அனைத்துப் பாடல்களிலும் நாடகக் காட்சிக்குத் திரையிடுவது போலஇ இயற்கையினை மிகத் துல்லியமாக படம் பிடித்துக் காட்டியுள்ளன.  பெண்களின் கைவிரல், கழுத்து, முகம், கண்கள், மூக்கு, செவி இப்படி ஒவ்வொரு உறுப்பிற்கும் மிக அழகிய உவமைகளாக மலர்களை விளக்கிக் காட்டுகின்றனர்.  மிக நுட்பமாக செடி, கொடிகள், மரங்கள் இவற்றின் இலைகள், பூக்கள் தண்டு இவை ஒவ்வொன்றையும் தாவரவியல் வல்லுநர்களின் நிலையிலிருந்து ஆய்ந்த நுட்பம், உணர்ந்து போற்றற்குரியது.

மேலும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள் இவற்றைப் பற்றிய வருணனைகளும், ஒப்புமைகளும், விளக்கங்களும், அக்காலப் புலவர்களின் உற்று நோக்கும் தன்மையும் விலங்கியல் வல்லுநர்களின் நிலைக்கு அவர்களை உயர்த்திக் காண இடம் தருகின்றது.

தமிழிலக்கியத்தில் சங்கப் பாடல்களில், புறப்பாடல்களிலும் மருத்துவம் பற்றியக் குறிப்புகளும், நோய் பற்றிய குறிப்புகளும் பல பாடல்களில் வருகின்றன. முக்கியமாக பசலை நோய் (அனீமியா) என்ற நோய் அகப் பாடல் பலவற்றிலும் காணப்படுகின்றது.  தலைவனைப் பிரிந்த தலைவி உண்ணாமல் இருந்த காரணத்தால், உடல் மெலிந்து, வெளுத்துக் காணப்படுவதாகக் காட்டப்படுகிறாள்.

நோய் தீர்க்கும் அறிஞரை மருத்துவர் என்றும் நோய் தீர்ப்பது மருந்து என்ற சொல்லாலும் பழங்காலத்திலிருந்து வழங்கி வந்தது.  மருத்துவம் பற்றிய குறிப்புகளைப் பல சங்க இலக்கியஙகளில் காண முடிகிறது.  மருத்துவர் சிலரும் புலவராக விளங்கியுள்ளனர்.  மருத்துவன் தாமோதரனார் என்ற புலவர் அவர்களில் ஒருவர்.

அரும்பிணி உறுநர்க்கு வேட்டவை கொடாஅது
மருந்து ஆய்ந்துகொடுக்கும் அறபோன்


என்ற பகுதியிலிருந்து மருத்துவன் நோயின் தன்மைகளைக் கண்டு நோய்க்கு ஏற்ற மருந்தினை ஆய்ந்து கொடுக்க வேண்டும், நோயாளியின் விருப்பப்படி கொடுக்கலாகாது என்பதும், மருந்து ஆய்ந்து கொடுக்கும் அறவோனே! மருத்துவன் என்று அழைக்கப்பட்டதும் தொ¢கிறது.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு  


என்றார் திருவள்ளுவர்.  ஒரு நாடு சிறந்த நாடாக விளங்க வேண்டும் என்றால் பசியும், நோயும் பகையும் இல்லாமல் இருத்தல் வேண்டும் என்கிறார்.

பசிப்பிணி மருத்துவ னில்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமி னெமக்கே


என்ற புறப்பாடல், பசித்துன்பத்தைப் போக்கும் வள்ளல்களைப் பசிப்பிணி மருத்துவன் என்று போற்றியமையைக் காண முடிகிறது,

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் தி¡¢கடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி போன்ற நூல்கள் அவ்வாறு பெயரிடப்பட்டுள்ளமை மருத்துவத் துறையில் நம் நாடு அடைந்த வளர்ச்சியைக் குறிப்பனவாக அமைந்தது.

சிறுபஞ்சமூலம் என்பது சிறுமை +  பஞ்சம் +  மூலம்.  பஞ்சம் என்றால் ஐந்து.  மூலம் என்றால் வேர். ஐந்து வேர்களால் ஆன ஒரு மருந்திற்குப் பஞ்சமூலம் என்பது பெயர்.  சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், சிறுவழுதுணை வேர், கண்டங்கத்திரி வேர், நெருஞ்சில் வேர், இவற்றால் ஆன மருந்து உடல் நோயைப் போக்கும்.  அதுபோல இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடல்களிலும் கூறப்படும் ஐந்து ஐந்து கருத்துக்கள் படிப்பவர் உள்ளத்தில் உள்ள அறியாமையைப் போக்கும் என்பது உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

ஏலாதி  =  ஏலம் +  ஆதி, ஏலம் முதலான பொருள்களால் ஆகிய மருந்து என்பது இத்தொடா¢ன் பொருள்.  ஏலம் இலவங்கப்பட்டை, நாகசேகரம், சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்களால் ஆகிய மருந்து உடல் நோயைப் போக்கும்.  அதுபோல இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஆறு கருத்துக்கள் கற்பவர் உள்ளத்தில் அறியாமையைப் போக்கும் என்பதால் இந்நூல் இப்பெயர் பெற்றது.
அறுவை மருத்துவம் பழைய காலத்தில் இருந்திருக்கின்றது.  அடிக்கடிப் போர் நடந்ததால் புண்பட்டோருக்கு அறுவை மருத்துவம் நடந்திருக்கின்றது.
புண்பட்ட பகுதியில் மருந்திட்டுப் பஞ்சு போட்டு கட்டும் வழக்கம் இருந்திருக்கின்றது.
.....குருதி யோட்டிக்
கதுவாய் போகிய துதிவாயெஃகமொடு
பஞ்சியுங் களையாப் புண்ணர்,,, (புறம்)

நோய் துன்பத்தைத் தரவல்லது, அந்நோய் உண்டாகும் முறை, அதனை எவ்வாறு தீர்ப்பது எவ்வாறு இருந்தால் நோய் வராமல் நம்மைக் காத்துக் கொள்ள முடியும் எனறெல்லாம் வள்ளுவர் சிந்தித்ததன் விளைவாக மருந்து என்ற தலைப்பில் ஒரு அதிகாரத்தையே படைத்துள்ளார்.

மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று,


வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்றும் நம் உடலில் மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் செய்யும் என்று கூறி, அவ்வாறு வராமலிருக்க உண்ட உணவு நன்கு சொ¢த்த பின் உண்ண வேண்டும்.  அதனையும் அளவோடு நேரமறிந்து மாறுபாடில்லாமல் உண்ணுதல் நலம் என்று கூறுகின்றார்.

நோயைத் தீர்க்கும் மருத்துவன்
நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்


நோயின் தன்மை, நோய்க்கான காரணம், பின்பு அதனைப் போக்கும் முறையைக் கருதியும் நோயுற்றவனின் தன்மை, காலம் இவற்றை உணர்ந்து மருந்தினைத் தரல் வேண்டும் என்றும், மருந்தின் தன்மையை விளக்கும் இந்தக் குறள்கள் நோயின்றி வாழ வழிகாட்டுகின்றன.

வள்ளுவருக்குப் பாமாலைச் சூட்டிய சங்கப் புலவரான மருத்துவன் தாமோதரனார் தம் பாடலொன்றில்

சிந்தி நீர்க் கண்டம் தெறிசுக்குத் தேனளாய்
போந்தபின் யார்க்கும் தலைக்குத்தில்  காந்தி
மலைக் குத்துமால் யானை! வள்ளுவர் முப்பாலால்
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு      (திருவள்ளுவ மாலை)


சிந்தி நீர்ச் சருக்கரையும், சிதைக்கப்பட்டசுக்கையும் தேனொடுக் கலந்து மோந்தபின்தலைக்குத்து நீங்கும் என்ற மருத்துவக் கருத்து காணப்படுகின்றது

-R.இராஜராஜன்

by Swathi   on 19 Nov 2015  0 Comments
Tags: தமிழ் இலக்கியம்   அறிவியல்   தமிழ் அறிவியல்   இலக்கியம்   Science Tamil   Science in Classical Tamil   Tamil literature  
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள் தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள்
தமிழின் சங்க இலக்கியங்களை எளிய முறையில் கற்க உதவும் சங்க இலக்கியக் கல்வி மன்றம்!! தமிழின் சங்க இலக்கியங்களை எளிய முறையில் கற்க உதவும் சங்க இலக்கியக் கல்வி மன்றம்!!
உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் !! உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் !!
தமிழ் இலக்கியங்களில் இத்தனை நீர்நிலைகளின் வகைகளா? தமிழ் இலக்கியங்களில் இத்தனை நீர்நிலைகளின் வகைகளா?
தமிழ் இலக்கியத்தில் அறிவியல்.. R.இராஜராஜன் தமிழ் இலக்கியத்தில் அறிவியல்.. R.இராஜராஜன்
வானியல் அறிவில் சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் !! வானியல் அறிவில் சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் !!
தொல்காப்பியமும் திருக்குறளும் - முனைவர் இர. பிரபாகரன் தொல்காப்பியமும் திருக்குறளும் - முனைவர் இர. பிரபாகரன்
தமிழகத்தில் 1,450 கோடி ரூபாய் செலவில் நியூட்ரினோ ஆய்வகம் !! தமிழகத்தில் 1,450 கோடி ரூபாய் செலவில் நியூட்ரினோ ஆய்வகம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.