கிழக்குப் பார்த்த திருக்கோயில். கோயிலின் முன் அழகிய திருக்குளம். ஒரு திருச்சுற்று. திருக்கோயிலின் முன் பலிபீடமும், நந்தி மண்டபமும் அமைந்துள்ளது.
கருவறை தேவ கோட்டங்களில் யோக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்கை வடிவங்களைத் தரிசிக்கலாம். வடக்கு பிரகாரத்தில் சண்டிகேசுவரர் வடிவம் மிகவும்
தொன்மை சிறப்புடையது. ஆலயத்தின் சுவரில் விநாயகர், ஜேஷ்டாதேவி சிற்பங்கள் புதைத்து வைத்து கட்டப்பட்டுள்ளன. தொன்மையான சிறப்பு வாய்ந்த
இக்கோயில், காலந்தோறும் பல மாற்றங்கள் அடைந்ததை இவை எடுத்துக்காட்டுகின்றன. பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது ஆனூர். இன்று ஆனூர் என்று
பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில் அன்னியூர், ஆனியூர், ஆதியூர் என்றெல்லாம் பெயரிட்டு
அழைக்கப்பட்டு வந்ததைக் காண்கிறோம். பிற்கால பல்லவர், சோழ மன்னர்கள் காலத்தில் இந்தக் கோயில்கள் சிறப்பான வழிபாட்டில் இருந்து வந்த
தகவல்களைக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில், களத்தூர் கோட்டத்தில், களத்தூர் நாட்டில் ஆனூர் ஆகிய சத்தியாசிரய
குல கால சதுர்வேதி மங்கலம் என்ற இவ்வூர் சிறப்புப் பெற்று விளங்கியிருக்கிறது.
கிழக்குப் பார்த்த திருக்கோயில். கோயிலின் முன் அழகிய திருக்குளம். திருக்கோயிலின் முன் பலிபீடமும், நந்தி மண்டபமும் அமைந்துள்ளது. கருவறை தேவ கோட்டங்களில் யோக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்கை வடிவங்களைத் தரிசிக்கலாம். வடக்கு பிரகாரத்தில் சண்டிகேசுவரர் வடிவம் மிகவும் தொன்மை சிறப்புடையது. ஆலயத்தின் சுவரில் விநாயகர், ஜேஷ்டாதேவி சிற்பங்கள் புதைத்து வைத்து கட்டப்பட்டுள்ளன.
தொன்மையான சிறப்பு வாய்ந்த இக்கோயில், காலந்தோறும் பல மாற்றங்கள் அடைந்ததை இவை எடுத்துக்காட்டுகின்றன. பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது ஆனூர். இன்று ஆனூர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில் அன்னியூர், ஆனியூர், ஆதியூர் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கப்பட்டு வந்ததைக் காண்கிறோம்.
பிற்கால பல்லவர், சோழ மன்னர்கள் காலத்தில் இந்தக் கோயில்கள் சிறப்பான வழிபாட்டில் இருந்து வந்த தகவல்களைக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில், களத்தூர் கோட்டத்தில், களத்தூர் நாட்டில் ஆனூர் ஆகிய சத்தியாசிரய குல கால சதுர்வேதி மங்கலம் என்ற இவ்வூர் சிறப்புப் பெற்று விளங்கியிருக்கிறது. |